பகட்டான வாழ்க்கை..தேடி
பணம் எனும் காகிதம் சேகரிக்க..
பாசத்தை அடகு வைத்து...
பாரினில் வந்து சேர்ந்தேன்..
வந்து சேர வாங்கிய பணத்தின்
வட்டி கட்ட வருடம் ஒன்றானது..
முழுக்கடன் முழுதாய் தீர்க்க
மீண்டும் எனை அடகு வைத்தேன்..
வேலையைப் புதுப்பித்து.
அலைபேசி வாழ்க்கை வாழ்ந்து
தொலைந்து போனது..இளமை...
அல்லும்பகலும் அயராது உழைத்து
இதயமும் இரும்பாகிப் போனது.
பணமென்ற பிணமொன்றை
தழுவித் தாங்கிக் கொள்ள..
பிணமாகிப்போனேன்...என்
பிள்ளை மனம் கல்லாக
காரணம் நான் ஆனேன்.
வாலிபத்தில் வந்தவனின்
இளமைகள் சுரண்டப்பட்டு..
இன்பங்கள் அழிக்கப்பட்டு..
வேலிகட்டி வாழ்கிறேன்..
வெளிநாட்டில்...நானும்..
போதுமென்று அளவோடு...
புறப்பட யத்தனித்த நேரத்திலே..
அலைபேசியில் அழைக்கிறான்..
ஆசையோடு..அன்பு மகன்...
அப்பா..!எனக்கு கல்யாணம்..!
மறக்காமல் இந்த மாதம்..
பணம் சேர்த்து அனுப்பிடு..! என்று.
பண மரமாகிப் போனெனோ..நான்..?
என் பாசத்தின் விலைதனை
அறிவானோ..அவனும்..?
மீண்டும் தொடருகிறேன்...
மீதமுள்ள நாட்களை...
வாழ்வில் இணைந்த உள்ளங்கள்..
நலமோடு வாழவே..!
மீண்டும் மற்றுமொரு பதிவினூடாகச் சந்திக்கின்றேன்,,,,,,,,,,,,,,,,,,அன்புடன், WWW.HARIBABINFOWEB.CO.CC-ஹரி பாபு(HARI BABU). நன்றி:
0 comments:
Post a Comment