பல இணைய தளங்களிலிருந்து சேகரித்தவைகளை பலருக்கும் பயனாக அமையும் என்ற நோக்கம் கருதி இந்த பிளாக்கில் பதிந்துள்ளேன் - உங்கள் அன்புக்குரிய "ஹரி பாபு".

Search This Blog

Sunday, May 6, 2012

திருத்த முடியா கவிதை நான்-4 (தொடர் கவிதை –நான்காம் பாகம்)


 

 
உன்னால் மட்டும் எப்படி முடிகிறதோ..? உன்
இதழோடு புன்னகை பூக்களை பூக்கவிட்டு என்
இதயத்தில் இதமாக இடியை இறக்குகிறாய்..?  
இரத்த நாளங்களை பெயர்த்தெடுத்து அதில்
ஊஞ்சல்கட்டி ஆடுகிறாய்.-என் இதயத்தில்
இரத்தப்பூக்களை பூக்கச்செய்கிறாய்...?

நான் எழுதும் கவிதையை நீ ரசிக்கிறாய்..!
நான் ரசிக்கும் கவிதையாய் நீ இருக்கிறாய்..!என்
கவிதையாய் நானும் கொஞ்சம் மாறக்கூடாதோ..?இந்த
கன்னியும் எனை கொஞ்சம் கொஞ்சக்கூடாதா..?
கொஞ்சும் எண்ணம் உன்னுள் குடி கொண்டதா..?
     
வெளி உலகம் கண்டுவிட்டால் வேதனை..என்று..
வேலி போட்டு நடிக்கின்றாய்..!என்னை
வெளிச்சமிலா நரகத்தில் தள்ளி தினம்
வேதனை பட வைக்கிறாய்..!-என்
வெந்த இதயத்தில் வேல்பாய்ச்சுகிறாய்..!

காதல் கற்றது உன்னிடம் என்பதால் நான்
கேள்விக்கணைகளை தொடுக்கிறேன்..
கேள்விகணைகளை நான் தொடுத்தால்...நீயோ அமைதி
வேள்விகளை தினம் நடத்துகிறாய்...
என்னுள் பல திருத்தங்கள்.. நீ..செய்தாலும்..
உன்னால்..திருத்த முடியா கவிதையாக நான்..

மீண்டும் மற்றுமொரு பதிவினூடாகச் சந்திக்கின்றேன்,,,,,,,,,,,,,,,,,,அன்புடன், WWW.HARIBABINFOWEB.CO.CC-ஹரி பாபு(HARI BABU). நன்றி:

0 comments: