மாடியில் இருந்து கீழே துப்பினால் குடிசை மீது விழும்.குடிசையில் இருந்து மேலே
துப்பினால் மாடியே விழும் என்ற முன்னர் அறிந்த பழமொழி.சமூகத்தில் நிர்க்கதியா
னவர்கள் நிராகரிக்கப் பட்டவர்கள் வறுமையின் கோரப்பிடிக்குள் உழன்று கொண்டி
ருக்கிறவர்கள் அடுத்தவேளை உயிர்வாழ்தலுக்கான தேடலின் நிமித்தம் நகர்ந்து
கொண்டிருக்கிறவர்கள் என முற்றிலுமாக ஒரு நிஜமான இதுவரை சரிவரப் பதிந்து
விடாத உலகத்தைப் பற்றிய பதிவு இது.எந்த வித சமரசமும் இல்லாத படைப்பு என
இதனை சொல்லி ஆனந்தித்துக் கொள்ள முடியும்.

பாடல் இல்லை குத்து வசனங்கள் இல்லை.இரத்தவெறி இல்லை.
அணைந்து எரியும் மாய விளக்கு வெளிச்சத்தில் கட்டிப்புரளும் காம நடனங்கள்
இல்லை.இரட்டை அர்த்த மலினங்கள் இல்லை.இயல்பு வாழ்க்கைக்கு ஒவ்வாத
நாயகத்துதிகளும் ஒருவன் பலரைப் புரட்டி எடுப்பதும் கிட்டத்தட்டக் கடவுள்களாக
தம்மை உயர்த்திக் கொள்ளத் துடிக்கும் நாயகத்துவம் இல்லவே இல்லை.இது தமிழ்ப்
படம் தானா என்று சந்தேகப் படுகிறவர்களுக்கு ஒரு வார்த்தை.இது தான் தமிழில்
முதல் படம்.

ஒரு இன்ஸ்பெக்டரிடம் அடுத்தடுத்து இரண்டு பேர்
ஒருவன் வேலு இன்னொருத்தி ஆர்த்தி ஒரே ஏரியாவில் வசிக்கிறவர்கள் என்ற
தகவலுடன் இருவேறு விஷயங்களுக்காக புகார் அளிக்க வருகிறார்கள்.முதலில்
வேலு.

வேலு முறுக்குக் கம்பெனிக்கு கொத்தடிமையாக விற்கப்பட்ட
சிறுவன்.அங்கேயே வருடங்களைக் கழித்து விட்டு குடும்பக் கடனை அடைத்து கிட்டத்
தட்ட வெளியே வந்துவிடக் கூடிய நிலையில் அம்மா அப்பா இருவரும் இறந்து
போகின்றனர்.அந்த தகவல் அந்த முதலாளியால் மறைக்கப் படுகிறது மூன்று மாதங்கள்
கழித்து தெரிகையில் அழுது கொண்டே தமிழ் நாட்டுக்கு வந்து சேர்பவன் சேரும் இடம்
சென்னை.அங்கே ஒரு விலைக்காதலி ஒருவர் மட்டும் அவனது மயக்கத்துக்கு இறங்கு
கின்றாள்.அவளது சிபாரிசில் அன்றைய உணவுக்குப் பின் ஒரு தெருவோர இட்லிக்
கடையில் வேலை கிடைக்கின்றது.அங்கே அருகாமையில் வசிக்கிற ஜோதியும் அவள்
அம்மாவும் தினமும் வேலைக்கு செல்கையில் இருவருக்கும் பிடிக்காமல் போய்
முட்டிக்கொண்டு அது தொடர்கிறது.

வேலுவுக்கு எடுபிடியாக இன்னொரு சிறுவன் வருகிறான்.இருவருக்கும்
இடையில் அழகான நட்பொன்று பூக்கிறது.எத்தனையோ முயன்றும் வேலுவால் ஜோதியிடம்
தன் காதலை தெரியப் படுத்த முடியவில்லை.அப்போது தான் இன்ஸ்பெக்டர் தன்னை
அழைத்ததாக கூறி தன் கதையை முடிக்கிறான்.
இரண்டாம் பகுதியில் இரண்டாவதாக இன்ஸ்பெக்டரை
பார்க்கும் ஆர்த்தி தன் அப்பார்ட்மெண்டின் மேல் வீட்டில் வசிக்கும் பணக்காரப் பையன்
தன்னிடம் மெல்ல நட்பாகிப் பிறகு நெருங்கி தன்னை அவுட்டிங்க் அழைத்து சென்றதையும்
அதன் பின் அவனது ஃபோனில் இருந்த தன் வீடியோக்களை அழித்து அவனது மெமரி
கார்டை உருவிக்கொண்டு வந்து விட்ட தன்னை வண்டியில் வந்து இடித்ததாகவும் அவனிடம்
இருந்து தன்னை காப்பாற்றுமாறும் வேண்டிக்கொள்கின்றாள்.

ஆர்த்தி என நினைத்து அவள் வீட்டுக் கதவைத் திறக்கும் வேலைக்காரி
ஜோதி மீது திராவகத்தை ஊற்றுகிறான் மாடிவீட்டுப் பையன்.,அவனது அம்மா ஒரு செல்வாக்கான
பள்ளி நடத்தும் பணக்காரி.அவள் மந்திரி சிபாரிசில் இன்ஸ்பெக்டரை வளைத்து தன் மகனை
வெளியே எடுக்க ஆவண செய்கிறாள்.

இன்ஸ்பெக்டர் ஜோதியை குணப்படுத்த தன்னால் உதவமுடியும் என்று பொய்
சொல்லி வேலுவை கன்வின்ஸ் செய்து அவனை பழியேற்க செய்கிறார்.வேலு தன்னால் ஜோதிக்கு
உதவ முடிந்த திருப்தியோடு ஜெயில் செல்கிறான்.பத்து லட்ச ரூபாய் லஞ்சம் பெற்றுக்கொண்டு
ஜோதியை கவனிக்காமல் தன் சுயநலத்துக்காக வேலுவை மாட்டி விட்ட இன்ஸ்பெக்டர் பற்றியும்
வேலுவின் சொல்லாத காதல் பற்றியும் தியாகம் பற்றியும் ஜோதியிடம் சொல்கிறான்.அதன் பின்னர்
கிளைமேக்ஸ்.
நிகழ்வுகளின் கதம்பமாக அல்ல ஒழுங்காகக் கோர்க்கப் பட்ட துளசி
மாலையாக மணக்கின்றது கதை.இரண்டாம் பகுதி முதற்பகுதியை விட வேகமாக பறக்கிறது என்று
சொன்னால் அது மிகை அல்ல.இந்தப் படத்தின் இவ்வ/ளவு துல்லியத்தன்மைக்கான காரணம் இதில்
நடித்திருக்கும் அனைவருக்கும் இது முதல்படம்.ரொம்பத் தேடினால் ஒன்று அல்லது இரண்டு பேர்
தேறலாம் ஏற்கனவே நடித்தவர்கள்.32 எம் எம் படமாக இதுவிரிவது மிக கச்சிதமான உணர்வை
பெயர்க்கின்றது.முக்கியமாக ஜோதியாக நடித்திருக்கும் நடிகையும் வேலுவும் ரொம்பவும் மனசுக்குள்
நிற்கிறார்கள்.தமிழின் அடுத்த கண் கவர் நாயகி இப்படத்தின் ஆர்த்தியாக நடித்திருக்கிற மனிஷா யாதவ்
தான் என உங்கள் தலை மீது அடித்து சொல்கிறேன்.

இசையும் ஒளிப்பதியும் மிக அருமை.படம் முடிந்து வெளியே வந்த பல மணி
நேரங்களுக்கு சொல்ல முடியாத துக்கத்தில் அழுந்துகின்றனது நம் மனம்.அது இந்தப் படத்தின் மாபெரும்
வெற்றி.இப்படத்தினை தவறவிடுவது நம் வாழ்வின் ஒரு மிக அபூர்வமான அனுபவத்தை இழப்பது என்றே
சொல்வேன்.
பின் குறிப்புக்கள்:
இந்தப் படத்தின் சப் ஸ்டோரீஸ்….மிக முக்கியமான திரைக்கதை சொல்லியாக பாலாஜி
சக்திவேலை அடையாளப் படுத்துகின்றன.

1வேலுவுக்குத் துணையாக வரும் சிறுவன் அவனுக்குள் ஒளிந்திருக்கும் நடிகன்.அவனிடம் மிளிர்கின்ற
பெண்மை இவையனைத்தும் வெளிப்படும் அந்த ஐந்து நிமிட நேரங்கள் படம் ரெக்கை விரிக்கின்றது.
;வாழ்த்துக்கள் இயக்குநர்.

2.ரோஸ் ஆக வரும் நடிகையின் முகபாவங்களும் குறைவான வசனமும் உடல்மொழியும் கச்சிதம்.
வேலு சுருண்டு விழுந்து கிடக்கிறான்.அப்போது அவனை ஏறேடுக்கும் ரோஸ்
இயல்பான மன உடல் நிலைகளில் வேலுவை மீட்கிறாள்.இது முதல் கூறு.இரண்டாம் கூறு ரோஸ்
நல்ல போதையில் தள்ளாடியபடி நிற்கிறாள்.அவளை நல்ல உடை நல்ல தோற்றத்தில் வேலு
சந்திக்கிறான்.பணம் கொடுக்கிறான்.மூன்றாம் கூறு வேலு ரோசை தேடிப் போகிறான்.அவள் திருந்தி,
விபசாரத்தை கைவிட்டு விட்டு பூ விற்கும் தொழிலைப் பார்க்கிறதற்காக வேறு ஏரியா சென்று விட்டது
ஒரு செய்தியாக மட்டுமே அறிகின்றான்.

3.பணத்தை என் அக்கவுண்டில போட சொல்லு என அம்மாவை மிரட்டும் மகன்.அங்கே இந்த ஒரே
காட்சியில் அதுவரையிலான ஒரு மகன் வளர்க்கப்பட்ட விதம் தந்தையற்ற சூழல் இன்னபிற இன்னபிற
எல்லாம் மனதுக்குள் ஆணியடிக்கிறார் இயக்குநர்.

சுஜாதாவின் வஸந்தகாலக்குற்றங்கள் நாவலில் வருகிற சுனில் பாத்திரத்தின்
இன்னொரு டைமன்ஷன் இந்த பாத்திரத்தில் வெளிப்படுகின்றது.இன்ஸ்பெக்டரை சந்தித்து ஒரே நாள்
இருவேறு விண்ணப்பங்கள் கொடுக்கப் படுவதும் கூட அதே சுஜாதாவின் கமிஷணருக்குக் கடிதம் என்ற
நாவலில் வருகின்ற ஆரம்பம் போல இருக்கிறது குறிப்பிடத் தக்கது.இவற்றை காப்பி என்ற பதத்தில்
குற்றமாய் சொல்லவில்லை.அதன் ஷெல் மட்டுமே எடுத்துக் கொண்டு கதையை தன் அகத்தில் இருந்து
உருவாக்கியதை பாராட்டுவதே நோக்கமாகிறது.

ஆரண்யகாண்டம் அதற்கடுத்தாற்போல் வழக்கு எண் 18/9…உலகத்தரம் இனி தமிழ்ப் படமும்.
அற்புதமான படம்.
மீண்டும் மற்றுமொரு பதிவினூடாகச் சந்திக்கின்றேன்,,,,,,,,,,,,,,,,,,அன்புடன், WWW.HARIBABINFOWEB.CO.CC-ஹரி பாபு(HARI BABU). நன்றி:
0 comments:
Post a Comment