பல இணைய தளங்களிலிருந்து சேகரித்தவைகளை பலருக்கும் பயனாக அமையும் என்ற நோக்கம் கருதி இந்த பிளாக்கில் பதிந்துள்ளேன் - உங்கள் அன்புக்குரிய "ஹரி பாபு".

Search This Blog

தமிழன் வலைதளம்

தமிழுக்கும் அமுதென்று பேர் அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்உயிருக்கு நேர்!

தமிழன் வலைதளம்

தமிழுக்கும் அமுதென்று பேர் அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்உயிருக்கு நேர்!

தமிழன் வலைதளம்

தமிழுக்கும் அமுதென்று பேர் அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்உயிருக்கு நேர்!

தமிழன் வலைதளம்

தமிழுக்கும் அமுதென்று பேர் அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்உயிருக்கு நேர்!

தமிழன் வலைதளம்

தமிழுக்கும் அமுதென்று பேர் அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்உயிருக்கு நேர்!

Showing posts with label அறிவியல். Show all posts
Showing posts with label அறிவியல். Show all posts

Monday, February 12, 2018

தமிழகத்திற்கு புதிய முறையில் மின்சாரம் கொண்டுவர கமல் ஆலோசனை



Bloom Energy
தமிழகத்திற்கு புதிய முறையில் மின்சாரம் கொண்டுவர கமல் ஆலோசனை
நவீன முறையில் மின்சாரத்தை தயாாிக்கும் தொழில்நுட்பத்தை தமிழகத்திற்கு கொண்டுவருவது தொடா்பாக கமல்ஹாசன் அமொிக்காவில் ஆலோசனை மேற்கொண்டாா்.

அமொிக்காவில் ப்ளூம் பாக்ஸ் என்ற புதிய தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நமக்கு தேவையான மின்சாரத்தை நாமே இந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தி தயாாித்துக் கொள்ளலாம். இதுவே இந்த தொழில்நுட்பத்தின் சிறப்பாக உள்ளது.

இந்த தொழில்நுட்பத்தை அமொிக்காவைச் சோ்ந்த டாக்டா். ஸ்ரீதா் என்பவா் கண்டுபிடித்துள்ளாா். இவருடன் கமல்ஹாசன் இன்று ஆலோசனை நடத்தினாா். அப்போது இந்த தொழில்நுட்பத்தை தமிழகத்திற்கு கொண்டுவர வேண்டும் என்று அவா் கேட்டுக் கொண்டாா்.

இந்த தொழில்நுட்பம் தமிழகத்தில் பயன்படுத்தப்படும் பட்சத்தில் மின்துறையில் தமிழகம் முதன்மை நுகா்வோா் மாநிலமாக மாறும் என்று கருதப்படுகிறது.



மீண்டும் மற்றுமொரு பதிவினூடாகச் சந்திக்கின்றேன்,,,,,,,,,,,,,,,,,,அன்புடன்,www.haribabuwebinfo.blogspot.in-ஹரி பாபு(HARI BABU). நன்றி:

Monday, May 8, 2017

அமேசான், டிஜிட்டல் ஓசன் டேட்டா சென்டர்கள் இந்தியாவிற்கு வந்துள்ளன!

Image result for டிஜிட்டல் ஓசன் டேட்டா





இணைய தளங்கள், வீடியோக்கள், புகை படங்கள் ஆகியவற்றை க்ளவுட் (cloud) சர்வர்களில்  ஹோஸ்ட் செய்யும் சேவையை அமேசான் நிறுவனம் அமேசான் வெப் சர்வீசஸ் எனும் பெயரில் செய்து வருகிறது.  மிகவும் விலை குறைவான செர்வர்களை அமேசானில் வாங்கலாம். அமேசானின் இந்த சேவையின் பலம் அதன் டேட்டா சென்டர்கள் பல்வேறு நாடுகளில் அமைந்திருக்கும். ஆனால் இந்தியாவிற்கு அருகில் உள்ள டேட்டாசெண்டர் சிங்கப்பூரில் மட்டுமே இருந்தது.
இந்தியாவில் இணையம் பயன்படுத்துவோர் எண்ணிக்கையும். இந்தியாவில் இருந்து அமேசான் வெப் சர்வீசஸ்  செர்வர்களை பணம் கட்டி பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 75000 வரை தொட்டதாலும் அமேசான் இந்திய இணைய பயனாளர்கள் மட்டும் இணைய தள சேவை  / வடிவமைப்பு மென்பொருள் நிறுவங்களை திருப்தி படுத்தும் வகையில் மும்பையில் மட்டும் இரண்டு டேட்டா சென்டர்களை திறந்துள்ளது. இங்கே ஆயிரக்கணக்கான செர்வர்கள் இருக்கும்.
இதே போல Cloud ஹோஸ்டிங்க்ளில் குறைந்த காலத்தில் பிரபலமான டிஜிட்டல் ஓசன் நிறுவனம், இந்தியாவில் அதிகமாக சேர்வார்கள் வாங்குகிறார்கள் என்பதை உணர்ந்து பெங்களூரில் தனது டேட்டா சென்டரை ஆரம்பித்துள்ளது.
இதே போல சாப்ட் லேயர் மற்றும் ஐபிஎம் நிறுவனங்கள் இணைந்து இந்திய மென்பொருள் நிறுவனங்களை திருப்தி படுத்த சென்னையில் டேட்டா சென்டரை திறந்துள்ள.


மீண்டும் மற்றுமொரு பதிவினூடாகச் சந்திக்கின்றேன்,,,,,,,,,,,,,,,,,,அன்புடன்,www.haribabuwebinfo.blogspot.in-ஹரி பாபு(HARI BABU). நன்றி:

Friday, April 6, 2012

சத்து குறைபாட்டைப் போக்கும் வாழைப்பழத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் இந்திய, ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள்




இரும்புச் சத்து குறைபாட்டைப் போக்கும் வாழைப்பழத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.


ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ்லாந்து தொழில்நுட்பப் பல்கலைக்கழகமும் இந்திய உயிரிதொழில்நுட்பத் துறையினரும் (டிஒபி) இதற்கான முயற்சியில் மேற்கொண்டுள்ளது.

இதற்கான ஒப்பந்தம், பல்கலைக்கழக துணைவேந்தர் பீட்டர் கோல்ட்ரக் மற்றும் டிஒபியைச் சேர்ந்த ரேணு ஸ்வரூப் ஆகியோர் முன்னிலையில் வியாழக்கிழமை கையெழுத்தானது. 

வேறு நாட்டில் விவசாயம் சம்பந்தமாக ஆராய்ச்சியில் இந்தியா ஈடுபடுவது இதுவே முதல்முறை. இந்த ஆராய்ச்சியின் மூலம் ரத்தசோகையை போக்கும் வகையிலான வாழைப்பழம் இன்னும் நான்கு ஆண்டுகளுக்குள் கண்டுபிடிக்கப்படும்' என்று ஸ்வரூப் தெரிவித்தார்.

மீண்டும் மற்றுமொரு பதிவினூடாகச் சந்திக்கின்றேன், அன்புடன், ஹரி பாபு.

அப்பிளுக்கு மறுபடியும் பதிலடி கொடுக்குமா கூகுள்


அப்பிளுக்கு சளைக்காமல் போட்டியளித்து வரும் நிறுவனங்களில் ஒன்றே கூகுளாகும். ஒரு காலத்தில் இவ்விரு நிறுவனங்களும் வெவ்வேறு தளத்தில் பயணித்துக்கொண்டிருந்தன.
அப்பிள் தனது ஐ பொட், மெக் கணனிகள் என தொழில்நுட்ப உலகில் தனிப் புரட்சியை ஏற்படுத்திக்கொண்டிருந்தது. கூகுள் தனது தேடல்பொறி மற்றும் சமூக வலையமைப்பு என இணையத்தில் புதுமைகளைப் புகுத்திக்கொண்டிருந்தது. எனினும் பின்னர் இந்நிறுவனங்களுக்கிடையில் பனிப் போர் நடக்கத்தொடங்கியது. அப்பிளின் ஐ.ஓ.எஸ் இயங்குதளத்திற்கு போட்டியாக அண்ட்ரோய்ட் எனும் தற்போது உலகையே கலக்கிக்கொண்டிருக்கும் இயங்குதளத்தினை வெளியிட்டது. இது அப்பிளைப் பெரிதும் பாதித்தது.
மறைந்த அப்பிள் நிறுவன ஸ்தாபகர் ஸ்டீவ் ஜொப்ஸ் தனது முழு சொத்தினையும் இழந்தாவது கூகுளுடன் போராடப்போவதாகவும், அண்ட்ரோய்ட் ஐ.ஓ.எஸ். இலிருந்து தயாரிக்கப்பட்ட திருட்டுத் தயாரிப்பு எனவும் சாடியமையானது இதற்கு சிறந்ததொரு எடுத்துக்காட்டு.
பின்னர் அப்பிளின் ஐ போனுக்கு போட்டியளிக்கும் வகையில் செம்சுங் நிறுவனத்துடன் இணைந்து கூகுள் நெக்ஸஸ் ஸ்மார்ட் போன்களைத் தயாரிக்கத்தொடங்கியது. இவ்வாறு அப்பிளுக்கு தகுந்த பதிலடி கொடுப்பதில் கூகுளுக்கு நிகர் கூகுளே. இந்நிலையில் அப்பிள் அண்மையில் புதிய ஐ பேட் இனை அறிமுகப்படுத்தியது. உலகில் அதிகம் விற்பனையாகும் டெப்லட்கள் அப்பிளின் ஐ பேட் ஆகும்.
இதனை நன்கு அறிந்து வைத்துள்ள கூகுள் எசுஸ் நிறுவனத்துடன் இணைந்து டெப்லட் ஒன்றினை அறிமுகப்படுத்தவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஐ பேட் உடன் ஒப்பிடும் போது குறைந்த விலையில் இதனை சந்தைப்படுத்தவுள்ளதாகத் தெரியவருகின்றது. மேலும் 7 அங்குலத் திரையை இது கொண்டிருக்குமெனவும் தகவல் கசிந்துள்ளது.
இதேவேளை அப்பிளும் குறைந்த விலையில் ஐ பேட் மினி என்ற பெயரில் சிறிய டெப்லட்களை அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இத் தகவல்களின் உண்மைத் தன்மை தொடர்பில் சற்றுப் பொறுத்திருந்து தான் தெரிந்துகொள்ள வேண்டும். எவ்வாறாயினும் குறைந்த விலையில் டெப்லட்கள் வெளியாகுமாயின் அதனால் நன்மையடையப் போவது 3 ஆந் தரச் சந்தைப் பாவனையாளர்களே!



மீண்டும் மற்றுமொரு பதிவினூடாகச் சந்திக்கின்றேன், அன்புடன், ஹரி பாபு.

பல் வலியை நீக்கும் தாவரப் பசை


தென் அமெரிக்காவில் உள்ள அமேசான் காடுகளில் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம் கொண்ட அரிய வகை செடிகள் இருக்கின்றன. இந்த செடிகளில் பல் வலியை நீக்கும் சக்தி இருப்பதை அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தற்போது கண்டுபிடித்துள்ளனர்.
இதில் இருந்து பசை தயாரிக்க காப்புரிமையை கோரி இருக்கிறார்கள். இந்த பற்பசை தயாரிக்கப்பட்டால் அது கடுமையான பல் வலிக்கு பெரிய நிவாரணம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மீண்டும் மற்றுமொரு பதிவினூடாகச் சந்திக்கின்றேன், அன்புடன், ஹரி பாபு.

மூளையில் பதிவாகி வாட்டி வதைக்கும் சோகங்களை ரப்பர் வைத்து அழிக்கலாம்


மூளையில் பதிவாகி வாட்டி வதைக்கும் சோகங்களை ரப்பர் வைத்து அழிப்பது போல அழிக்க வாய்ப்பு இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

பழங்கால நினைவுகளை அசைபோட்டு பார்ப்பது சுகம்தான். ஆனால் சிலருக்கு அது சுமையாக அமைந்து விடுகிறது. கணவன், மனைவி அல்லது குடும்ப உறுப்பினர்களின் திடீர் மறைவு, காதல் ஏமாற்றம், தொழில் நஷ்டம், சொத்துகளை இழத்தல் போன்றவற்றை மறக்க முடியாமல் சிரமப்படுகின்றனர்.

இது தீராத மன அழுத்தத்தையும் ஏற்படுத்துகிறது. இதற்கு தீர்வு காணும் நோக்கில் கனடாவின் மெக்கில் பல்கலையின் நரம்பியல் நிபுணர் டெரன்ஸ் காடர் தலைமையில் சமீபத்தில் ஆய்வு நடத்தப்பட்டது.
ஆய்வில் தெரியவந்தது பற்றி அவர் கூறியதாவது: தசை பாதிப்பு, விபத்து போன்றவற்றால் சிலர் கையை இழக்கின்றனர். ஆனால் கையை இழந்த பிறகுகூட சில வேளைகளில் அவர்கள் கை வலிப்பதாக உணர்கின்றனர். கை இருந்தபோது ஏற்பட்ட வலியின் தாக்கம் இது. பிளாஷ்பேக் தகவலை மூளை அசை போடுவதால்தான் இல்லாத கைகூட அவர்களுக்கு வலிக்கிறது. இது மட்டுமின்றி, கடந்த கால சம்பவங்கள் சிலருக்கு நிரந்தர சோகத்தை ஏற்படுத்தி விடுகின்றன. இதுவும் முந்தைய ரகத்தை சேர்ந்ததுதான்.
புதிதாக ஒரு வலி ஏற்படும்போதோ சோக நினைவுகளில் மூழ்கும்போதோ மத்திய நரம்பு மண்டலத்தில் பிகேஎம் ஸீட்டா என்ற புரோட்டீன் என்சைம் அளவு அதிகரிக்கிறது. இதனால் நியூரான்கள் இடையே தகவல்கள் சிறப்பாக பரிமாறப்படுகின்றன. எப்போதோ வலி சோகம் ஏற்பட்டது பற்றிய தகவல்களை மூளை அலசுகிறது. புதிய வலி சோகத்துடன் பழைய சோகமும் சேர்ந்துகொள்கிறது.
நரம்பு மண்டலத்தில் இந்த என்சைம் அளவை குறைத்தால், அதாவது, என்சைமை ரப்பர் வைத்து அழிப்பது போல அழித்தால் பழைய சோகங்கள் வலிகள் தாக்காது. நீண்ட கால சோகம், மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்க இது நல்ல மருத்துவ முறையாக பயன்படும். இவ்வாறு காடர் கூறினார்.





மீண்டும் மற்றுமொரு பதிவினூடாகச் சந்திக்கின்றேன், அன்புடன், ஹரி பாபு.

கர்ப்பிணிகள் உணவு கட்டுப்பாடுடன் இருந்தால் குண்டான குழந்தை பிறக்கும்: ஆய்வில் தகவல்




திருமணமான பெண்கள் உடல் எடையை குறைக்க சாப்பாட்டில் கட்டுப்பாடுகளை மேற்கொள்கின்றனர். அதேபோன்று கர்ப்ப காலத்திலும் கடைபிடிப்பதால் விபரீத விளைவுகள் ஏற்படும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

அதாவது கர்ப்பிணி ஆக இருக்கும் பெண் உணவில் கட்டுப்பாட்டை மேற்கொள்வதன் மூலம் அவருக்கு குண்டான குழந்தை பிறக்கும் வாய்ப்பு ஏற்படுகிறது. அதே நேரத்தில் அக்குழந்தையை எதிர்காலத்தில் சர்க்கரை நோய் பாதிக்கும். இது குறித்த ஆராய்ச்சியை மான்செஸ்டர் பல்கலைக் கழக நிபுணர்கள் செம்மறி ஆட்டின் மூலம் நிகழ்த்தினர்.
கர்ப்பமாக இருந்த பெண் ஆட்டுக்கு உணவு கட்டுப்பாடுகளை விதித்தனர். அந்த ஆடு கொழு கொழு வென குண்டான குட்டியை ஈன்றது. முன்னதாக, ஆட்டிக்குட்டி பிறக்கும் முன்பே அதன் மூளையை பரிசோதித்தனர். அதன் மூளை திசுக்களின் டி.என்.ஏ. மூலக்கூறுகளில் மாற்றம் ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது.
அதுதான் குட்டிகளை கொழு கொழு வென பிறக்க செய்வது தெரிய வந்தது. அதே நேரத்தில் நன்றாக தீனி அளிக்கப்பட்ட ஆடு சாதாரண எடையுள்ள குட்டிகளை ஈன்றது. அதேபோன்று தான் மனிதர்களிலும் மாற்றங்கள் ஏற்படுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.எனவே கர்ப்பிணிகள் சாப்பாட்டில் கட்டுப்பாடு வைத்து கொள்ளவேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றன.





மீண்டும் மற்றுமொரு பதிவினூடாகச் சந்திக்கின்றேன், அன்புடன், ஹரி பாபு.

சர்க்கரை நோயாளிகளுக்கு ஓர் இனிப்பான செய்தி: இன்சுலினுக்கு பதில் புதிய ஹார்மோன்


அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலை கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் சர்க்கரை நோயாளிகளுக்காக ஒரு புதிய பயனுள்ள சிகிச்சையை கண்டறிந்து உள்ளனர்.
இந்த சிகிச்சைக்காக ஒரு புதிய ஹார்மோன் கண்டுபிடித்து உள்ளனர். இந்த புதிய ஹார்மோன் இன்சுலினுக்கு ஒரு பயனுள்ள மாற்றாக இருக்கிறது. இது இன்சுலின் செய்யும் அதே வேலையை செய்கிறது. 

மீண்டும் மற்றுமொரு பதிவினூடாகச் சந்திக்கின்றேன், அன்புடன், ஹரி பாபு.

ஒளி வீசும் தாவரங்களும் மீன்களும்!

இது 100-வது பதிவு


இந்தியாவிலும் இலங்கையிலும் கிராமப்புறங்களில் வாழ்வோர் இரவு நேரத்தில் ஒரு காட்சியைக் கண்டிருப்பீர்கள். சூரியன் மறைந்த பின்னர் மினுக்மினுக்கென்று அங்குமிங்கும் பறந்து செல்லும் மின்மினிப் பூச்சியைக் கண்டிருப்பீர்கள். கிராம மக்கள் நாள் தோறும் இதைக் காண்பதால் இதில் அதிசயம் ஏதுமில்லை.


ஆனால் இதே வகையில் பல தாவரங்களும், மீன்களும், நத்தைகளும் பூரான்களும் ஒளி வீசும் விந்தைச் செய்தி பலருக்கும் தெரியாது.


இயற்கை உருவாக்கிய விந்தைகளில் ஒன்று தான் இந்த மின்மினிகள். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் வாழ்ந்த காளிதாசன் என்னும் வடமொழிக் கவிஞன் இரவில் ஒளி வீசும் தாவரங்கள், மலைக் குகைகள் பற்றி வடமொழியில் கவி பாடியுள்ளான். அவனது காலத்தில் இப்படி ஓளி வீசும் தாவரங்கள் இந்தியாவிலும் இருந்தன போலும். ஆனால் இன்று உலகின் வேறு பகுதிகளில் மட்டுமே அவை உள்ளன.



தாவர வகைகளில் நாய்க்குடை என்றும் காளான் என்றும் அழைக்கப்படும் பூஞ்சன் FUNGI வகைத் தாவரங்களைப் பலரும் பார்த்திருப்பீர்கள். ஆஸ்திரேலியாவில் இத்தகைய காளான்கள் பல இரவு நேரத்தில் ஒளியை உமிழ்கின்றன.


இவற்றில் சில வீசும் வெளிச்சத்தில் புத்தகங்களைக் கூடப் படிக்கலாம்! விஷச் சத்துள்ள இக்காளான்களின் பெயர் PLEUROTUS NIDIFORMIS. மற்றொரு வகையின் பெயர் POROMYCENA MANIPULARIS. இவை தலைவலித் தைலம் தயாரிக்கப் பயன்படும் யூகலிப்டஸ் மரங்களுக்கு அருகில் வளருகின்றன. இவை இரவு நேரத்தில் ஏன் இப்படி வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன என்பது விஞ்ஞானிகளுக்கும் புரியாத புதிராக உள்ளது.

இன்னுமொரு சுவையான செய்தி உண்டு. நியூசிலாந்து நாட்டில் குகைகளில் ஒளி வீசும் பூச்சிகள் உள்ளன. இவைகளைப் பார்க்க ஆண்டு தோறும் பல்லாயிரக் கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். ஆனால் இவை மனிதச் சத்தத்தைக் கேட்டால் ஒளி வீசுவதை நிறுத்தி விடும்.


ஆகையால் சுற்றுலாப் பயணிகள் அமைதியாக நின்று இவைகளைப் பார்க்க வேண்டும். இவை நீல நிற ஒளியை வெளியிடுகின்றன. குகையின் மேல் புறத்திலிருந்து இந்தப் பூச்சிகள் ஒட்டடை, நூலாம்படை போலத் தொங்கும் இந்த வெளிச்சத்தை நோக்கி வரும் பூச்சிகளைப் பிடித்துத் தின்று விடும். இவைகளின் பெயர் ARACHNO CAMPA.


மின்மினிப் பூச்சிகளில் (FIRE FLIES, GLOW WORMS) 2000 வகைகள் உள்ளன. இவை தவிர 1500 வகை மீன்கள் கடலுக்கடியில் ஒளி வீசுகின்றன. மலேசியாவில் DYAKIA STRIATA என்ற ஒரு வகை நத்தை நீல நிற ஒளியை வீசுகின்றது. தன்னைச் சாப்பிட வரும் பிராணிகள் மிரட்டி விரட்டவே இவை இப்படி ஒளியைச் சிந்துகின்றன.


ஒரு வகைப் பூரான் ஒளியை உமிழும் திரவத்தைப் பயன்படுத்தி ஏனைய பிராணிகளின் உடலில் கொப்புளத்தைக் கூட உண்டாக்கி விடுமாம். LUMINO DESMUS என்ற வகை ரயில் வண்டிப் பூச்சி ஒளியைச் சிந்துவதோடு தன்னைத் தாக்கும் பிராணிகள் மீது சயனைடு வாயுவையும் வீசுமாம்.


கடலுக்கடியில் ஆழம் செல்லச் செல்ல இருள் மண்டி விடும். இங்கு வாழும் 1500 வகை மீன்கள் தங்களாக உடல் மூலம் விளக்கேற்றி இரை தேடுகின்றன.


ANGLER FISH எனப்படும் தூண்டில் மீன் தனது மூக்கின் மீதுள்ள மீன்பிடித் தூண்டிலில் ஒளியைக் தோன்ற செய்கிறது. மின்சார பல்பு போன்ற தோற்றமுள்ள இதை நோக்கி ஏனைய மீன்கள் வரும். அவ்வளவு தான் அவற்றைக் கபளீகரம் செய்து விடும் இந்த ANGLER FISH.


கலபகாஸ் என்னும் தீவுக்கருகில் கடலுக்கடியில் VIPER FISH என்ற வகை மீன்கள் வசிக்கின்றன. இவைகளின் வாயில் விளக்கு போல வெளிச்சம் தெரியும். வாயைத் திறந்தவுடன் இந்த ஒளியை நோக்கி வரும் மீன்களின் கதை முடிந்தது. இதை மரண விளக்கு என்று அழைத்தாலும் தவறில்லை.


இவை எல்லாவற்றையும் விட மிகவும் விந்தையான மீன் இனம் LANTERN EYE மீன் வகைகள் தான். மீன் வகைகளில் அதிகமான ஒளியை வீசுவதால் இவைகளுக்குப் பொருத்தமாக லாந்தர் விளக்கு மீன் என்று பெயரிட்டுள்ளனர். மேலும் இவை கண்களைச் சுற்றும் போது விளக்குச் சுற்றுவது போல ஒளியும் இடம் மாறும்.


HATCHET FISH என்ற மீன் வகை தன்னைச் சுற்றி எந்த அளவுக்கு வெளிச்சம் உள்ளதோ அதே அளவுக்கு உடலிலிருந்து ஒளியை வெளி விடுமாம். இப்படிச் சமமான ஒளியிருந்தால் இதை ஏனைய மீன்கள் காண முடியா. இது ஒரு தற்காப்பு உத்தி.


மனிதன் கண்ணாடிகளையும், லென்ஸ் எனப்படும் உருப் பெருக்காடிகளையும் கண்டு பிடிப்பதற்கு முன்னதாகவே மீன்கள் கண்டுபிடித்து விட்டன போலும். REFLECTING FISH எனப்படும் பிரதிபலிப்பு மீனின் உடல் முழுவதும் கண்ணாடி போலும், லென்ஸ் போலும் செதில்கள் உள்ளன. இந்த மீன் உண்டாக்கும் வெளிச்சத்தை அவை பிரதிபலிக்கின்றன.


நியூசிலாந்தில் ஒன்றரை அடி நீளத்திற்கு வளரும் மண்புழு சுரக்கும் வழவழப்பான திரவம் கூடச் சிறிது நேரத்திற்கு ஒளியைக் கசியும். இந்த ஒளி மயமான பாதையைக் கொண்டே அவை சென்ற திசையை அறிந்து விடலாம்.


ஒளியைக் கசியக் கூடிய பூச்சிகளைப் பற்றிப் பேசினால் நியூசிலாந்து தான் நினைவுக்கு வரும். இவை திருவிழாக் காலங்களில் போடும் மின்சார விளக்குகள் போல ஒரே நேரத்தில் எரிந்தும், அணைந்தும் காடுகளையும், குகைகளையும் அலங்கரிக்கும். இந்தியாவில் மைசூரிலுள்ள பிருந்தாவன் அணையிலும், இங்கிலாந்தில் BLACK POOL என்னுமிடத்திலும் இரவு நேர மின்சார விளக்கு அலங்காரத்தைக் காண ஆண்டுதோறும் லட்சக் கணக்கில் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். இதே பணியை மின்மினிப் பூச்சிகளும் செய்கின்றன.


இறுதியாக, இந்தப் பூச்சிகளும் மீன்களும் எப்படி ஒளி வீசுகின்றன? ஏன் ஒளி வீசுகின்றன என்பதை பார்ப்போம்.


இந்த ஒளி வீச்சுக்கு அவை உடலிலுள்ள சில இரசாயனப் பொருட்களைப் பயன் படுத்துகின்றன. LUCIFERIN என்ற பொருள் ஆக்ஸிஜனுடன் கலந்து ஒளியை வீசும். இதற்கு LUCIFERASE என்ற என்ஸைமில் உள்ள ADENOSINE கிரியா ஊக்கியாக உதவி செய்கிறது. கிஜிறி என்று சுருக்கமாக அழைக்கப்படும் TRIPHOSPHATE என்ற புரதச் சத்தை இவை பயன் படுத்துகின்றன. இந்த வகையில் ஒளியைத் தயாரிக்க அவை தனது சக்தியில் 2 விழுக்காட்டை மட்டுமே பயன் படுத்துகின்றன.


தற்கால விஞ்ஞானிகள் இந்த உத்தியை அவர்களுடைய ஆராய்ச்சியில் பயன் படுத்துகின்றனர். LUCIFERIN, LUCIFERASE ஆகியவைகளை உற்பத்தி செய்யும் Gene எனப்படும் மரபணுக்களை clonning என்ற முறையில் காப்பி எடுத்து வேறு சில தாவரங்களில் ஏற்றுகின்றனர். இவ்வகையில் ஒரு புகையிலைச் செடியைக் கூட ஒளி வீசும் செடியாக மாற்றி விட்டார்கள். சில வகை பாக்டீரியாக்களில் இந்த ஒளி வீசும் ஜீனை ஏற்றினால் தீமை பயக்கும் பாக்டீரியாக்கள் எங்கு இருக்கின்றன என்றும் கண்டு பிடிக்கலாம். டின்களில் அடைக்கப்பட்ட உணவுகள், மாமிசம் ஆகியவை கெட்டுப் போனால் கூட இந்த முறையில் கண்டு பிடித்து விடலாம்.


இன்னும் சிலர் சாலைகளில் உள்ள மின்சார விளக்குகளை எடுத்து விடலாம், மின்மினிப் பூச்சிகளின் ஜீன்களை மரத்தில் ஏற்றிச் செலவில்லாமலேயே வெளிச்சம் பெறலாம் என்று கூறுகின்றனர். செவ்வாய்க் கிரகத்திலிருந்து மண்ணை எடுத்து வந்து அதில் இந்த ஜீன்களை ஏற்றினால் அங்கு உயிரினம் உள்ளதா என்பதைக் கூடக் கண்டு பிடித்து விடலாம். ஏனெனில் ATP எனப்படும் ADENOSINE TRIPHOSPHATE புரதச் சத்து இல்லாமல் எந்த உயிரினமும் தோன்ற முடியாது LUCIFERIN, LUCIFERASE என்ற இரசாயனம் செயல் படவும் இவை தான் அடிப்படைப் பொருள்.


ஒரு விந்தையான விஷயம் என்னவென்றால் மனிதன் உண்டாக்கும் வெளிச்சத்துடன் உஷ்ணமும் உருவாகிறது. ஆனால் இயற்கை உயிரினங்கள் உமிழும் இந்த ஒளியில் வெப்பம் என்பதே இல்லை.


மீன்களும், மின்மினிப் பூச்சிகளும் ஒளியை வீசுவது ஏன்? மின்மினிப் பூச்சியின் இனப் பெருக்கத்திற்காக அதாவது ஆண் பூச்சிகளைக் கவர்வதற்காகப் பெண் பூச்சிகள் மினுமினுக்கின்றன. சில வகைப் பூச்சிகளில் ஆண், பெண் இரண்டும் ஒளி வீசுகின்றன. மீன்கள் இரையைப் பிடிப்பதற்காக இப்படிச் செய்கின்றன. பூரான், நத்தை போன்றவை எதிரிகளை மிரட்டி விரட்ட இப்படிச் செய்கின்றன. ஆனால் காளான் போன்ற கீழ்நிலத் தாவரங்கள் எதற்காக இப்படிச் செய்கின்றன என்று தெரியவில்லை.


அண்மைக் காலத்தில் இந்த மின்மினிகள் குறித்து இரண்டு அருமையான நூல்கள் வெளியாகியுள்ளன. HILDA SIMON என்பவர் எழுதிய LIVING LANTERNS என்ற புத்தகமும் JOHN TYLER என்பவர் எழுதிய GLOW WORMS என்ற புத்தகமும் சுவையான பல தகவல்களைத் தருகின்றன.


மத்தியஅமெரிக்காவில் மின்சார வெட்டுக் காரணமாக ஒரு மருத்துவ மனையில் விளக்குகள் இல்லாமற் போன போது ஒரு அவசர ஆப்ரேஷனை ஒளிவீசும் பூச்சிகளின் வெளிச்சத்திலேயே நடத்தி விட்டனர் டாக்டர்கள்.


மத்திய அமெரிக்காவில் CLICK BEETLE என்ற வண்டின் முன்புறம் 2 பச்சை நிற ஒளி விளக்குகளும், வால் புறத்தில் ஆரஞ்சு நிற ஒளி விளக்கும் உள்ளன. இதை AUTOMOBILE அதாவது கார் வண்டு என்பார்கள். தலைப் புறத்தில் பச்சை விளக்கும் வால் புறத்தில் சிவப்பு விளக்கும் உள்ளதல்லவா.


காடுகளில் வழியே நடப்போர் இவைகளைப் காலில் கட்டிக் கொண்டு அந்த வெளிச்சத்திலேயே நடப்பார்களாம் இன்னும் சிலர் இவைகளைக் கண்ணாடி பாட்டிலில் போட்டு வைத்து வீட்டிற்கு விளக்குப் போல பயன்படுத்துவார்களாம்!


இயற்கையின் மாபெரும் விந்தைகளில் ஒன்றான மின்மினி, மீன்கள், பூச்சிகள், தாவரங்கள் குறித்துத் தொடர்ந்து ஆராய்ச்சி நடைபெறுகிறது.


ஒலியை வெளியிடும் தாவரங்கள், பூச்சிகள் மீன்களின் ஆங்கிலப் பெயர்கள்:


01. PHYROPHORUS NOCTILUCAS மத்திய அமெரிக்க வண்டு
02. PLATYURA சிலந்திவலை போல மின்னி ஒளி வீசும் பூச்சி
03. ARACHNO CAMPA நியூசிலாந்தில் ஒட்டடை போலத் தொங்கி ஒளி வீசும் பூச்சி
04. PHYROPHORUS LAGIOPTHALMUS/ AUTOMOBILE BEETLE/ CLICK BEETLE தலையில் 2 பச்சை விளக்கு, வாலில் ஆரஞ்சு விளக்கு
05. PLEUROTUS NIDIFORMIS ஆஸ்திரேலியக் காளான் வகை
06. POROMYCENA MANIPULARIS
07. JELLY FISH
08. BACTERIA
09. LANTERN EYE FISH
10. VIPER FISH
11. ANGLER FISH
12. HATCHET FISH
13. LUMINO DESMUS
14. DYAKIA STRIATA மலேசிய நத்தை


நன்றி: சுவாமிநாதன்



இந்த பதிவு சித்தர் கோட்டை எனும் இணையதளத்தில் 21 MARCH, 2011 அன்று வெளியிடப்பட்டது



மீண்டும் மற்றுமொரு பதிவினூடாகச் சந்திக்கின்றேன்,
அன்புடன்,
ஹரி பாபு.

புலங்களும் சாதனைகளும்

அறிமுகம்
 நாம் வாழும் இயல் உலகை (real world) பண்பு அடிப்படையில் (qualitatively) வேறுபட்ட பின்வரும் ஏழு களங்களாகப் (spheres) பிரிக்கலாம்.















01.விண்வெளி அல்லது அண்ட வெளி (astrosphere)

02.வளிமண்டலம் (atmosphere)  
 
03.பாறைக்கோளம் (lithosphere)   
04.நீர்மக்கோளம் (hydrosphere )  
05.உயிர்க்கோளம் (biosphere)  
06.பண்பாட்டுவெளி அல்லது சமூகம் (Noosphere or Society)   

07.உளவெளி (psychosphere)     

  இந்தக் களங்களில் எதுவும் தனித்து நிலவுவதில்லை. இவை அனைத்துமே ஒன்றோடொன்று ஊடுருவியவை மட்டுமின்றி, ஊடாட்டம் புரிபவையும் கூட. ஒரு களத்தின் எந்தவொரு நிகழ்வும் பிற களங்களின் மீது தாக்கம் விளைவிக்கிறது.


ஒவ்வொரு களத்துக்கும் அதற்கே உரிய தரவுத் தளமும் (data base)நிகழ்வுகளும் (phenomena) உண்டு. ஒரு களத்தின் தரவுத் தளம் வரலாற்றியலாக வளர்ந்து வரும் தகவல் அமைப்பாகும். இந்த அமைப்பு தொடர்ந்த புறநிலை, அகநிலை (6) நோக்கீடுகள் வழியாகத் தொகுக்கப் படுகிறது.

புறநிலை நோக்கீடுகள் (observations) அல்லது கவனிப்புகள் ஐம்புலன்கள் வழியாகவும் கருவிகளை கொண்டும் தொகுக்கப் படுகின்றன. கருவிகள் புலன் திறமைகளை விரிவுபடுத்தும் புறநிலை அமைப்புகளாகும்.

அக நோக்கீடுகள் அல்லது காட்சிப் படிமங்கள் புலன், கருவி வழிப் பெறப்படும் புறநிலைத் தகவல்களைச் சிந்தனை செய்முறைகளின் மூலம் (by thought experiments) சரிபார்க்கப்பட்ட அல்லது மதிப்பிடப்பட்ட நுண்காட்சித் தெளிவுகளாகும். இவை அடிகோள்கள் (axioms) தேற்றங்கள் (theorems)நெறிமுறைகள் (principles) துணை அல்லது கிளைத் தேற்றங்கள் (lemmas) இயல் விதிகள் (laws) தனி, சிறப்பு, பொதுக்கோட்பாடுகள் (particular, special and general theories) ஆக அமைகின்றன. இவை அனைத்தும் குறிப்பிட்ட கள நிகழ்வுகளை உருவகிக்கப் பயன்படும் அறிதல் கட்டமைப்புக் கூறுபாடுகளாக அமைகின்றன. இத்தகைய குறிப்பிட்ட களஞ்சார்ந்த தரவுத்தளத்தை உருவாக்கவும் களத்துக்கே உரிய தனித்த நிகழ்வுகளை உருவகிக்கவும் அறிதல் முறைகளாக (cognitive methods)  பகுத்தாய்தல் முறையும் (Analysis) தொகுத்தறிதல் முறையும் (synthesis) பயன்படுகின்றன.

மனிதன் குறிப்பிட்ட களத்தையும் அதன் நிகழ்வுகளையும் புரிந்து கொள்ளவும் விளக்கவும் அடிகோள் முதல் பொதுக் கோட்பாடு வறையிலான கோட்பாட்டுக் கட்டமைப்புக் கூறுகளை உருவாக்குகிறான். இத்தகைய கோட்பாட்டு நிலை வழிகாட்டுதல்கள் தொழில் நுட்ப வளர்ச்சிக்கும் பொருளாக்கக் கருவிகளின் வளர்ச்சிக்கும் (development of  production tools) வித்திடுகின்றான்.

ஒவ்வொரு பொருட் களத்துக்கும் கட்டமைப்பும், வகைமை இயக்கமும் களத்துக்கான பொதுப் பொருண்ம அலகும் (unit  entiy  of  matter) உண்டு.  இந்த அலகு குறிப்பிட்ட களப் பண்புகளையும் நிகழ்வுகளையும் வரையறுக்கும் அலகாகும். இதே போல குறிப்பிட்ட கள நிகழ்வுகளைப் பரந்த நிலையில் வரன்படுத்தும் அல்லது கட்டுப்படுத்தும் அடிப்படை நிகழ்வும் விசையும் உண்டு. களப் பொருண்ம அலகினைச் சார்ந்த அக்களத்தை அறிய முயலும் பல்வேறு அறிவியல் புலங்கள் (fields  of  science) உருவாகின்றன. எனவே இயல் உலகின் (real  world)  ஒவ்வொரு களத்தையும் ஒன்றுக்கு மேற்பட்ட அறிவியல் புலங்கள் ஆய்வு செய்கின்றன. இந்த அறிவியல் புலங்களின் வளர்ச்சிக்கேற்ப மனித குலம் குறிப்பிட்ட களத்தில் நிகழ்த்தும் ஆய்வுச் செயல்பாடும் அதன் வழி ஈட்டும் வெற்றிகளும் அமைகின்றன. முதலில் விண்வெளிக் களத்தை இக்கட்டுரையில் காண்போம்.

விண்வெளிக்களம்

*விண்களமும் களவிரிவெல்லையும

 விண்வெளியின் ஒட்டுமொத்தம் புடவி(universe) எனப்படுகிறது. புடவியின் அடுத்த உள்ளமைப்பு பெரும் பால்வெளி (metagalaxy)அல்லது பேரண்டம் (macrocosmos) அல்லது பெருவிண்மீன்திரள் (super  cluster) எனப் படுகிறது. பெரும் பால்வெளியின் அடுத்த உள்ளமைப்பு கள விண்மீன்திரள் (local  cluster)  எனப்படுகிறது. இந்தக் கள விண்மீன் திரளின் கண் பல பால்வெளி (galaxy) அல்லது அண்டம் (cosmos) அல்லது விண்மீன் திரள்கள் அமைகின்றன. ஒவ்வொரு தனித்த பால்வெளியிலும் கோடிக்கணக்கான – ஏறத்தாழ பத்துக் கோடி விண்மீன்கள் உள்ளன. புடவியில் இது போல பத்துக் கோடிப் பால்வெளிகள் அல்லது அண்டங்கள் உள்ளன. நமது சூரியக் குடும்பம் ஒரு விண்மீன் குடும்பமே.

சூரியக் குடும்பத்தில் கோள்கள், துணக் கோள்கள் எனப்படும் நிலாக்கள் சிறு கோள்கள், விண்கற்கள், புகைக்கொடி எனப்படும் வால் விண்மீன் குடும்பங்களுக்கிடையிலும் பால்வெளிகளுக்கிடையிலும் உடுக்கணவெளியில் புடவி தோன்றிய போதுநிலவிய நுண்ணலைக் கதிர் வீச்சுப் பின்னணி நிலவுகிறது.

*களஞ்சார்ந்த அறிவியல் புலங்கள்
விண்வெளி ஆய்வின் முதன்மைப்புலம் வானியலே. எனினும் வானியல் ஒரு சார்புப்புலம் ஆகும். இது வடிவியல், கணிதவியல், இயற்பியல், வேதியியல், வானியற்பியல், விண் (மீன்) வேதியியல் ஆகிய அடிப்படை அறிவியற் புலங்களைச் சார்ந்த அறிவின் தொகுப்பாகும்.

 *விண்வெளியை விளக்கும் கோட்பாடுகள்
விண்வெளியைப் புரிந்து கொள்ளவும் விளக்கவும் பின்வரும் கோட்பாடுகள் எழுந்துள்ளன.

01.புடவித் தோற்றக் கோட்பாடு
02.பொருண்மைத் தோற்றக் கோட்பாடு
03.பால்வெளித் தோற்றக் கோட்பாடு
04.தனிமங்கள் தோற்றக் கோட்பாடு
05.விண்மீன் தோற்றக் கோட்பாடு
06.கோள் தோற்றக் கோட்பாடு
07.நிலாத் (துணைக் கோள்) தோற்றக் கோட்பாடு
08.சிறு கோள், விண் கல், வால் விண்மீன் உருவாக்கம் குறித்த   கோட்பாடு.

மேற்கூறிய அனைத்து விண்வெளி மட்டக் கட்டமைப்பும் இயக்கமும் பற்றிய புரிதலும் அதற்கான கோட்பாட்டுக் கட்டமைப்புக் கூறுகளும் உருவாக்கப் பட்டுள்ளன.

*விண்வெளிக்கள விசைகள்
 விண்வெளிக் கள மடங்களின் ஆளும் விசைகளாக ஈர்ப்பு விசை (gravity)   மெல்விசை (weak  force) வல்விசை (strong  force) மின்காந்த விசைகள் (electro  magnetic  forces  ) செயல்படுகின்றன.

*விண்வெளி உட்களங்களும் அடிப்படை பொருண்ம அலகுகளும்
விண்வெளி பரந்து விரிந்த பெருங்களம் என்பதால், படிமலர்ச்சி சார்ந்த அதன் பல உட்களங்களைப் பொறுத்து பல மட்டப் பொருண்ம அலகுகள் (units  of  matter) அமைகின்றன.

புடவி தோன்றிய பெருவெடிப்பு நிலையில் (big  bang  stage) கதிர்வீச்சின் அலகான ஒளியன் (photon) அதன் பொருண்ம அலகாக அமைகிறது.

பொருண்மத் தோற்ற நிலையில் பொருளின் முதல் தோற்ற அலகான பொருளன் (quark) பொருண்ம அலகாகிறது. பிறகு மின்னனும் (electron)நேர்மியும் (proton)  முதனிலைப் பொருண்ம அலகுகளாகின்றன.

 அடர்த்தி அலைவுகளால் (density  oscillations)  ஏற்படும் பால்வெளித் தோற்ற நிலையில் விண்மீன் தோற்றஞ்சார்ந்த நான்கு தலைமுறைகளில் ஒவ்வொரு தலை முறைக்கும் ஒரு வகைப் பொருண்மை அலகு நிலவுகிறது. முதல் தலைமுறையில் அணுக்கருவும் அதை குறிப்பிட்ட வட்டணைக் கூடுகளில்(orbital  shells) சுற்றி வரும் மின்னன்களும் இரண்டாம் தலைமுறையில் நீரினி வளிமமான நீரகமும், அதன் இரட்டுறுப்பான எல்லியமும் சார் பொருள் விகுதி; சூரிய எடையில் பெரும் பகுதி எல்லியத்தாலானது; அடிப்படை பொருண்மை அலகுகளாக அமைகின்றன. மூன்றாம் தலைமுறையில் தளர்தனிமங்களும் (குறைந்த அணுவெடைத் தனிமங்களும்) நான்காம் தலைமுறையில் அடர் தனிமங்களும் (உயரெடைத் தனிமங்கள்) பொருண்ம அலகுகளாக அமைகின்றன.


சுருங்க, முதல் தலைமுறையில் அணுவகத்துகள்களும்(subatomic  particles)இரண்டு முதல் நான்காம் தலைமுறைகளில் தனிமங்களும் அடிப்படை பொருண்ம அலகுகளாக அமைதலைக் கண்ணுறலாம்.

கோள்களின் தோற்ற நிலையில் மூலக் கூறுகளும் சேர்மங்களும்(compounds) வளர்நிலையில் சேர்மப் படிமங்களும் (கனிமங்களும்) அடிப்படை பொருண்மக் கூறுகளாக அமைகின்றன.

விண்வெளி உறழ்பொருள் நிலைப் பொருண்மம் (inert  stage  matter) மட்டுமே ஓங்கலாக ஆட்சி செலுத்துவதால் அடிப்படையில் இதுவோர் உறழ்பொருட் களமாகும்.

*விண்வெளிக் கட்டமைப்பும் வகைமை இயக்கமும் விசைகளும்

விண்வெளிக் களத்தைப் பொறுத்தமட்டில் கட்டமைப்பும் வகைமை இயக்கமும் ஆளும் விசைகளும் படிமலர்ச்சி சார்ந்த அதன் உட்களங்களைச் சார்ந்தமைகின்றன. பெரு வெடிப்பிலும் அதையடுத்த மூன்று மணித் துளிகளிலும் கதிர்வீச்சு ஆற்றலும் ஈர்ப்பு விசையும் புடவியின் சீரான விரிதல் நிகழ்வை ஆண்டன. வெப்பக் கதிர்வீச்சு புடவியைச் சீராக விரிவுறச் செய்கிறது. ஈர்ப்பு அதற்கு எதிராகச் செயல்படுகிறது. என்வே பெருவெடிப்பெடுத்ததும் முதலில் செயல்படும் எதிர்விசை ஈர்ப்பு விசையே இதை ஏந்தும் பொருண்ம ஊடகமான ஈர்ப்பன் என்ற பொருண்ம அலகு அமைவதாகக் கருதப் படுகிறது.

ஆனால், இதுவரை ஈர்ப்பன் என்ற பொருண்ம அலகு கண்டுபிடிக்கப்படவில்லை. அதே போல் அணுவகத்துகளின் அடிப்படை அலகான பொருளனும் இது வரை கண்டுபிடிக்கப் படவில்லை. புடவி சீராக விரிவடைதலே இக்கட்டத்தின் அடிப்படை வகைமை இயக்கமாகும். இந்நிலையில் புடவியின் அமைப்பும் கட்டமைப்பும் தனித்தனியான மின்மி, நொதுமிக் குழம்பாலான சீரான ஊடகத்தோடு அமைந்தன.

கோள்களில் பல்வேறு வானியல் நிகழ்வுகளால் சிதறிய பொருள் திரள்கள் துணைக்கோள்கள் எனும் நிலாக்களாகி, தாய்க் கோள்களைச் சுற்றி வரலாயின. இதைவிடச் சிறிய கோள்கள் குறுங்களாகவும், அதை விடவும் சிறியவை விண்கற்களாகவும் தாய்க்கோள் வட்டணையிலும் தாய் விண்மீன் வட்டணையிலும் சுற்றி வரலாயின.

இவ்வாறு துணைக்கோள்கள் கோள்களைச் சுற்றி வர, கோள்கள் தாய் விண்மீனைச் சுற்றிவர, விண்மீன்கள் வட்டணைகளில் சுற்றிவர அண்டங்கள் பேரண்ட மைய வட்டணைகளிலும் பேரண்டங்கள் புடவி மைய வட்டணைகளிலும் சுற்றி வருகின்றன.

*விண்வெளி ஆராய்ச்சியின் அகக் கட்டமைப்பு வளர்ச்சி

விண்வெளி ஆராய்ச்சி தற்கால அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சியால் மிக வேகமாக முன்னேறி வருகிறது. கலீலியோவின் தொலைநோக்கி முதல் இன்றைய தொலைநோக்கியான அப்புள் தொலைநோக்கி வரை, தொழில் நுட்பப் பெருவளர்ச்சி பெற்று, வானியல் ஆராய்ச்சியில் முனைப்பான முன்னேற்றங்களுக்கு வழிவகுத்துள்ளது. இவற்றோடு நில்லாமல் புறவெளிக் கோள்களைக் கண்டறிய புதிய கெப்ளர் தொலைநோக்கியும் செயற்பாட்டுக்கு வந்துள்ளது. நமது புவி பால்வழி எனப்படும் வானகங்கைப் பால்வெளியிலும் நமது பால்வழி கன்னி விண்மீன் பெருந்திரளிலும் அமைந்துள்ளது.

மீண்டும் மற்றுமொரு பதிவினூடாகச் சந்திக்கின்றேன்,
 அன்புடன்,
 ஹரி பாபு.