பல இணைய தளங்களிலிருந்து சேகரித்தவைகளை பலருக்கும் பயனாக அமையும் என்ற நோக்கம் கருதி இந்த பிளாக்கில் பதிந்துள்ளேன் - உங்கள் அன்புக்குரிய "ஹரி பாபு".

Search This Blog

தமிழன் வலைதளம்

தமிழுக்கும் அமுதென்று பேர் அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்உயிருக்கு நேர்!

தமிழன் வலைதளம்

தமிழுக்கும் அமுதென்று பேர் அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்உயிருக்கு நேர்!

தமிழன் வலைதளம்

தமிழுக்கும் அமுதென்று பேர் அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்உயிருக்கு நேர்!

தமிழன் வலைதளம்

தமிழுக்கும் அமுதென்று பேர் அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்உயிருக்கு நேர்!

தமிழன் வலைதளம்

தமிழுக்கும் அமுதென்று பேர் அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்உயிருக்கு நேர்!

Showing posts with label அறிவியல் தொழில்நுட்பம். Show all posts
Showing posts with label அறிவியல் தொழில்நுட்பம். Show all posts

Monday, February 12, 2018

தமிழகத்திற்கு புதிய முறையில் மின்சாரம் கொண்டுவர கமல் ஆலோசனை



Bloom Energy
தமிழகத்திற்கு புதிய முறையில் மின்சாரம் கொண்டுவர கமல் ஆலோசனை
நவீன முறையில் மின்சாரத்தை தயாாிக்கும் தொழில்நுட்பத்தை தமிழகத்திற்கு கொண்டுவருவது தொடா்பாக கமல்ஹாசன் அமொிக்காவில் ஆலோசனை மேற்கொண்டாா்.

அமொிக்காவில் ப்ளூம் பாக்ஸ் என்ற புதிய தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நமக்கு தேவையான மின்சாரத்தை நாமே இந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தி தயாாித்துக் கொள்ளலாம். இதுவே இந்த தொழில்நுட்பத்தின் சிறப்பாக உள்ளது.

இந்த தொழில்நுட்பத்தை அமொிக்காவைச் சோ்ந்த டாக்டா். ஸ்ரீதா் என்பவா் கண்டுபிடித்துள்ளாா். இவருடன் கமல்ஹாசன் இன்று ஆலோசனை நடத்தினாா். அப்போது இந்த தொழில்நுட்பத்தை தமிழகத்திற்கு கொண்டுவர வேண்டும் என்று அவா் கேட்டுக் கொண்டாா்.

இந்த தொழில்நுட்பம் தமிழகத்தில் பயன்படுத்தப்படும் பட்சத்தில் மின்துறையில் தமிழகம் முதன்மை நுகா்வோா் மாநிலமாக மாறும் என்று கருதப்படுகிறது.



மீண்டும் மற்றுமொரு பதிவினூடாகச் சந்திக்கின்றேன்,,,,,,,,,,,,,,,,,,அன்புடன்,www.haribabuwebinfo.blogspot.in-ஹரி பாபு(HARI BABU). நன்றி:

Monday, May 8, 2017

பட்ஜெட்டுக்குள் அடங்கும் சிறந்த பத்து ஸ்மார்ட் போன்கள்

Image result for mobile
குறைவான விலையில் ஆன்றாய்டு சாதனங்களை பெற விரும்புபவர்களின் பட்ஜெட்டிற்கேற்ற  ஸ்மார்ட் போன்களின் பட்டியல் இதோ …!
1.Swipe Elite Plus
                     விலை : Rs. 6,999.
செயலி : 64-bit குவால்காம் ஸ்னாப்டிராகன்
ராம்    : 2GB
திரை அளவு   :  5 அங்குலம்
ரிசொலூசன் : 1920 x 1080p
முன் காமிரா   :  13MP
பின் காமிரா   :  8MP
பேட்டரி             : 3050 mAh
2.Coolpad Note 3 Lite
                          விலை : Rs.6999.
செயலி : 64-bit குவால்காம் ஸ்னாப்டிராகன்
ராம்    : 3GB
திரை அளவு   :  5 அங்குலம்
முன் காமிரா   :  13MP
பின் காமிரா   :  5MP
பேட்டரி             : 2500mAh

  1. Acer liquid Z530
                        விலை : Rs.6999.
செயலி :  Media Tek SOC
ராம்    : 3GB
திரை அளவு   :  5 அங்குலம்
முன் காமிரா   :  13MP
4.Lenovo Vibe K5
                           விலை : Rs.6999.
செயலி : குவால்காம் ஸ்னாப்டிராகன் 415 qoc
ராம்     : 2GB
திரை அளவு   :  5 அங்குலம்
ரெசொலூசன்  :1280 x 720p
முன் காமிரா     :  13MP
பின் காமிரா     :  5MP
பேட்டரி              : 2750mAh
5.Lenovo Vibe P1M
                           விலை : Rs.6999.
                           செயலி :  quad-core  MediaTek SoC
ராம்    : 2GB
திரை அளவு   :  5 அங்குலம்
முன் காமிரா   :  8MP
பேட்டரி             : 4000mAh
மேலும் ரூ. 7000 க்கு மேலான ஸ்மார்ட் போன்கள் :
6.Cool pad note 3
                          விலை : Rs.8999.
செயலி : MediaTek MT6753
ராம்    : 3GB
திரை அளவு   :  5.5  அங்குலம்
ரெசொலூசன்  :1280 x 720p
முன் காமிரா   :  13MP
பின் காமிரா   :  5MP
பேட்டரி             : 3000mAh
ஓ.எஸ்      : ஆண்7டராய்டு 5.1


  1. Xolo Black 1X
                           விலை : Rs.7999.
செயலி : MediaTek MT6753
ராம்    : 3GB
முன் காமிரா   :  13MP
பின் காமிரா   :  5MP
பேட்டரி             : 2400mAh
ஓ.எஸ்      : ஆண்டராய்டு 6.0


  1. Micromax Canvas Pulse 4G
                           விலை : Rs.7999.
செயலி : MediaTek MT6753
ராம்     : 3GB
முன் காமிரா     :  13MP
பின் காமிரா    :  5MP
பேட்டரி              : 2100mAh
ஓ.எஸ்      : ஆண்டராய்டு 5.1
9.Xiaomi Redmi Note 3

                             விலை : Rs.9999.
                           செயலி :Qualcomm Snapdragon 650
ராம்    : 2GB
முன் காமிரா   :  16MP
பின் காமிரா   :  5MP
பேட்டரி             : 4000mAh
ஓ.எஸ்      : ஆண்டராய்டு 5.1
  1. Meizu M3 Note
                           விலை : Rs.9999.
செயலி :  MediaTek Helio P10
ராம்    : 3GB
முன் காமிரா   :  13MP
பின் காமிரா   :  5MP
பேட்டரி         : 4100mAh
ஓ.எஸ்      : ஆண்ட்ராய்டு 5.1.1

மீண்டும் மற்றுமொரு பதிவினூடாகச் சந்திக்கின்றேன்,,,,,,,,,,,,,,,,,,அன்புடன்,www.haribabuwebinfo.blogspot.in-ஹரி பாபு(HARI BABU). நன்றி:

Friday, April 6, 2012

அப்பிளுக்கு மறுபடியும் பதிலடி கொடுக்குமா கூகுள்


அப்பிளுக்கு சளைக்காமல் போட்டியளித்து வரும் நிறுவனங்களில் ஒன்றே கூகுளாகும். ஒரு காலத்தில் இவ்விரு நிறுவனங்களும் வெவ்வேறு தளத்தில் பயணித்துக்கொண்டிருந்தன.
அப்பிள் தனது ஐ பொட், மெக் கணனிகள் என தொழில்நுட்ப உலகில் தனிப் புரட்சியை ஏற்படுத்திக்கொண்டிருந்தது. கூகுள் தனது தேடல்பொறி மற்றும் சமூக வலையமைப்பு என இணையத்தில் புதுமைகளைப் புகுத்திக்கொண்டிருந்தது. எனினும் பின்னர் இந்நிறுவனங்களுக்கிடையில் பனிப் போர் நடக்கத்தொடங்கியது. அப்பிளின் ஐ.ஓ.எஸ் இயங்குதளத்திற்கு போட்டியாக அண்ட்ரோய்ட் எனும் தற்போது உலகையே கலக்கிக்கொண்டிருக்கும் இயங்குதளத்தினை வெளியிட்டது. இது அப்பிளைப் பெரிதும் பாதித்தது.
மறைந்த அப்பிள் நிறுவன ஸ்தாபகர் ஸ்டீவ் ஜொப்ஸ் தனது முழு சொத்தினையும் இழந்தாவது கூகுளுடன் போராடப்போவதாகவும், அண்ட்ரோய்ட் ஐ.ஓ.எஸ். இலிருந்து தயாரிக்கப்பட்ட திருட்டுத் தயாரிப்பு எனவும் சாடியமையானது இதற்கு சிறந்ததொரு எடுத்துக்காட்டு.
பின்னர் அப்பிளின் ஐ போனுக்கு போட்டியளிக்கும் வகையில் செம்சுங் நிறுவனத்துடன் இணைந்து கூகுள் நெக்ஸஸ் ஸ்மார்ட் போன்களைத் தயாரிக்கத்தொடங்கியது. இவ்வாறு அப்பிளுக்கு தகுந்த பதிலடி கொடுப்பதில் கூகுளுக்கு நிகர் கூகுளே. இந்நிலையில் அப்பிள் அண்மையில் புதிய ஐ பேட் இனை அறிமுகப்படுத்தியது. உலகில் அதிகம் விற்பனையாகும் டெப்லட்கள் அப்பிளின் ஐ பேட் ஆகும்.
இதனை நன்கு அறிந்து வைத்துள்ள கூகுள் எசுஸ் நிறுவனத்துடன் இணைந்து டெப்லட் ஒன்றினை அறிமுகப்படுத்தவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஐ பேட் உடன் ஒப்பிடும் போது குறைந்த விலையில் இதனை சந்தைப்படுத்தவுள்ளதாகத் தெரியவருகின்றது. மேலும் 7 அங்குலத் திரையை இது கொண்டிருக்குமெனவும் தகவல் கசிந்துள்ளது.
இதேவேளை அப்பிளும் குறைந்த விலையில் ஐ பேட் மினி என்ற பெயரில் சிறிய டெப்லட்களை அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இத் தகவல்களின் உண்மைத் தன்மை தொடர்பில் சற்றுப் பொறுத்திருந்து தான் தெரிந்துகொள்ள வேண்டும். எவ்வாறாயினும் குறைந்த விலையில் டெப்லட்கள் வெளியாகுமாயின் அதனால் நன்மையடையப் போவது 3 ஆந் தரச் சந்தைப் பாவனையாளர்களே!



மீண்டும் மற்றுமொரு பதிவினூடாகச் சந்திக்கின்றேன், அன்புடன், ஹரி பாபு.

மூளையில் பதிவாகி வாட்டி வதைக்கும் சோகங்களை ரப்பர் வைத்து அழிக்கலாம்


மூளையில் பதிவாகி வாட்டி வதைக்கும் சோகங்களை ரப்பர் வைத்து அழிப்பது போல அழிக்க வாய்ப்பு இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

பழங்கால நினைவுகளை அசைபோட்டு பார்ப்பது சுகம்தான். ஆனால் சிலருக்கு அது சுமையாக அமைந்து விடுகிறது. கணவன், மனைவி அல்லது குடும்ப உறுப்பினர்களின் திடீர் மறைவு, காதல் ஏமாற்றம், தொழில் நஷ்டம், சொத்துகளை இழத்தல் போன்றவற்றை மறக்க முடியாமல் சிரமப்படுகின்றனர்.

இது தீராத மன அழுத்தத்தையும் ஏற்படுத்துகிறது. இதற்கு தீர்வு காணும் நோக்கில் கனடாவின் மெக்கில் பல்கலையின் நரம்பியல் நிபுணர் டெரன்ஸ் காடர் தலைமையில் சமீபத்தில் ஆய்வு நடத்தப்பட்டது.
ஆய்வில் தெரியவந்தது பற்றி அவர் கூறியதாவது: தசை பாதிப்பு, விபத்து போன்றவற்றால் சிலர் கையை இழக்கின்றனர். ஆனால் கையை இழந்த பிறகுகூட சில வேளைகளில் அவர்கள் கை வலிப்பதாக உணர்கின்றனர். கை இருந்தபோது ஏற்பட்ட வலியின் தாக்கம் இது. பிளாஷ்பேக் தகவலை மூளை அசை போடுவதால்தான் இல்லாத கைகூட அவர்களுக்கு வலிக்கிறது. இது மட்டுமின்றி, கடந்த கால சம்பவங்கள் சிலருக்கு நிரந்தர சோகத்தை ஏற்படுத்தி விடுகின்றன. இதுவும் முந்தைய ரகத்தை சேர்ந்ததுதான்.
புதிதாக ஒரு வலி ஏற்படும்போதோ சோக நினைவுகளில் மூழ்கும்போதோ மத்திய நரம்பு மண்டலத்தில் பிகேஎம் ஸீட்டா என்ற புரோட்டீன் என்சைம் அளவு அதிகரிக்கிறது. இதனால் நியூரான்கள் இடையே தகவல்கள் சிறப்பாக பரிமாறப்படுகின்றன. எப்போதோ வலி சோகம் ஏற்பட்டது பற்றிய தகவல்களை மூளை அலசுகிறது. புதிய வலி சோகத்துடன் பழைய சோகமும் சேர்ந்துகொள்கிறது.
நரம்பு மண்டலத்தில் இந்த என்சைம் அளவை குறைத்தால், அதாவது, என்சைமை ரப்பர் வைத்து அழிப்பது போல அழித்தால் பழைய சோகங்கள் வலிகள் தாக்காது. நீண்ட கால சோகம், மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்க இது நல்ல மருத்துவ முறையாக பயன்படும். இவ்வாறு காடர் கூறினார்.





மீண்டும் மற்றுமொரு பதிவினூடாகச் சந்திக்கின்றேன், அன்புடன், ஹரி பாபு.

நியூட்ரினோக்கள் ஒளியை விட வேகமாகச் செல்லவில்லை: பரிசோதனைகள் தெரிவிப்பு




நியூட்ரினோக்கள் எனப்படும் அடிப்படைத்துகள்களின் வேகம் குறித்து மீது நடத்தப்பட்ட மீள்பரிசோதனைகள் அவை ஒளியை விட வேகமாகச் செல்லவில்லை என நிரூபித்திருக்கின்றன.
அறிவியல் தொழில்நுட்பம்,
கடந்த ஆண்டு செப்டம்பரில் நடத்தப்பட்ட சோதனை முடிவுகள் நியூட்ரினோக்கள் ஒளியை மிஞ்சிய வேகத்தில் செல்வதாகக் கூறப்பட்டது. இத்தாலியில் உள்ள கிரா சாசோ என்ற நிலத்தடி ஆய்வுகூடத்தின் ஒப்பேரா பிரிவு இந்த ஆய்வுகளை மேற்கொண்டது. இந்த ஆய்வின் முடிவுகளுக்கு பல எதிர்ப்புகளும் எழுந்தன. இது மெய்யானால் ஐன்ஸ்டைனின் சார்புக் கோட்பாட்டைப் பற்றிய விளக்கம் வேறுபடக்கூடும். சார்புக் கோட்பாட்டின் படி ஒளியின் வேகமே இந்த அண்டத்தில் இருக்கக்கூடிய மிகக்கூடிய வேகமாகும்.
அறிவியல் தொழில்நுட்பம்,ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்
அதே ஆய்வுகூடத்தில் இக்காரசு என்ற வேறொரு பிரிவினரால் தற்போது மேற்கொள்ளப்பட்ட மீள்பரிசோதனைகள் நியூட்ரினோக்கள் ஒளியின் வேகத்திலேயே செல்லுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இது பற்றிய முடிவுகள் இணையதளங்களில் வெளியாகியுள்ளன. செனீவாவில் அமைத்துள்ள செர்ன் எனப்படும் அணு ஆய்வுக்கான ஐரோப்பிய ஆய்வுகூடத் வேகமுடுக்கியில் இருந்து 730 கிமீ தூரத்திற்கு செலுத்தப்பட்ட நியூட்ரினோக்களைக் கண்டறிய 600 தொன்கள் (430,000 லீட்டர்கள்) திரவ ஆர்கன் இக்காரசு குழுவினரின் இந்தப் பரிசோதனைகளில் பயன்படுத்தப்பட்டது.
அறிவியல் தொழில்நுட்பம்,
பாடசாலைகளில் படித்த ஒளியின் வேகத்திலேயே நாம் நிற்கிறோம் என இக்காரசு ஆய்வுக்குழுவின் பேச்சாளர் சாண்ட்ரோ செண்ட்ரோ தெரிவித்தார். இந்த முடிவுகள் எமக்கு ஆச்சரியத்தைத் தரவில்லை என அவர் கூறினார்.
நியூட்ரினோக்களின் வேகம் குறித்த சர்ச்சைகளுக்கு முடிவு கட்டும் முகமாக மேலும் தனிப்பட்ட பரிசோதனைகள் சிலவற்றை இம்மாத இறுதியில் நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் மற்றுமொரு பதிவினூடாகச் சந்திக்கின்றேன், அன்புடன், ஹரி பாபு.

புற்றணுக்களை தேடிக் கொல்லும் 'டி.என்.ஏ' நானோ ரோபோ!

புற்று நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டிருக்கும் அதேவேளையில் இந்த நோய்க்கான நவீன சிகிச்சைகளும் வளர்ந்துகொண்டுதான் இருக்கின்றன.

ஆனால், புற்றுநோய்க்கு எதிரான இந்த மருத்துவ முயற்சிகளுக்கு எல்லாம் சிம்ம சொப்பனமாய் இருப்பது ஒரேயொரு பிரச்சினைதான். அது, புற்றுநோய் உயிரணுக்கள் அழிக்கப்படும்போது பாதிப்புக்குள்ளாகி இறந்துபோகும் ஆரோக்கியமான உயிரணுக்களால் ஏற்படும் மோசமான பின்விளைவுகள்!

புற்றுநோய் சிகிச்சையில் உள்ள இந்த தலையாய பிரச்சினைக்கு ஒரு தீர்வை சொல்ல வந்திருக்கிறது புற்றணுக்களை தேடிக் கொல்லும் திறனுள்ள டி.என்.ஏ. நானோ ரோபோ! `டி.என்.ஏ. ஓரிகேமி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்த நானோ ரோபோவை உருவாக்கியிருப்பவர் அமெரிக்காவிலுள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர் ஷான் டக்ளஸ். 

 ரோபோ தெரியும், அதென்ன டி.என்.ஏ. நானோ ரோபோ? மனித மரபணுக்கள் டி.என்.ஏ. எனும் மூலக்கூறுகளால் ஆனவை. டி.என்.ஏ.வால் ஆன, நானோ அளவுடைய ரோபோ டி.என்.ஏ. நானோ ரோபோ எனப்படுகிறது. டி.என்.ஏ.வை பல வடிவங்களில் உருவாக்கும் திறனுள்ள தொழில்நுட்பம்தான் டி.என்.ஏ. ஓரிகேமி! டி.என்.ஏ.வின் வேதியியல் கட்டமைப்பினை புரிந்துகொள்ளும் டி.என்.ஏ. மாடலிங் சாப்ட்வேரில், நமக்கு தேவையான ஒரு வடிவத்தை `க்ளிக் செய்தால், டி.என்.ஏ.வைக் கொண்டு அந்த வடிவத்தை அது உருவாக்கிவிடும். இந்த டி.என்.ஏ. ஓரிகேமி சாப்ட்வேரை பயன்படுத்தி சிப்பி வடிவத்தில் உள்ள ஒரு டி.என்.ஏ. நானோ ரோபோவை உருவாக்கினார் ஆய்வாளர் ஷான் டக்ளஸ். இதற்குள் புற்றுநோய் மருந்தை வைத்து, அதை நோயாளியின் உடலுக்குள் செலுத்தி புற்றணுக்களை அழிப்பதே டக்ளஸின் திட்டம். இந்த சிப்பி நானோ ரோபோக்கள், புற்றணுக்களை எதிர்கொள்ளும்போது மட்டும் தன்னுள் இருக்கும் மருந்தை வெளியேற்றி அவற்றைக் கொல்ல வேண்டும்.

அதற்காக சிப்பி நானோ ரோபோவுக்கு இரண்டு பூட்டுகள் வடிவமைக்கப்பட்டன. ஜிப் போல திறந்து மூடிக்கொள்ளும் தன்மையுடைய இந்த பூட்டுகள் ஒவ்வொன்றும் `ஆப்டாமர் எனப்படும் டி.என்.ஏ. இழைகளாலானவை. இவை குறிப்பிட்ட ஒரு மூலக்கூற்றை எதிர்கொள்ளும்போது மட்டும் திறந்துகொள்ளும் வண்ணம் வடிவமைக்கப்பட்டவை. இந்த நானோ ரோபோக்களின் சிகிச்சை திறனை பரிசோதிக்க, ரத்த புற்றணுக்களான லியூக்கீமியா உயிரணுக்களின் மேற்புறத்தில் இருக்கும் மூலக்கூறுகளை எதிர்கொள்ளும்போது திறந்துகொண்டு மருந்தை வெளியேற்றும் வண்ணம் ஒரு சிப்பி நானோ ரோபோ வடிவமைக்கப்பட்டது. பின்னர் அந்த சிப்பிக்குள், உயிரணுக்களின் வளர்ச்சியை தடை செய்து அவற்றை கொல்லும் திறனுடைய ஒரு மருந்து வைக்கப்பட்டது.
இறுதியாக, மருந்து தாங்கிய சிப்பி நானோ ரோபோக்கள் ஆரோக்கியமான ரத்த அணுக்கள் மற்றும் ரத்த புற்றணுக்கள் கலந்த ஒரு உயிரணு கலவைக்குள் செலுத்தப்பட்டன. மூன்று நாட்கள் கழித்து, ரத்த புற்றணுக்களுள் பாதி அழிக்கப்பட்டன. ஆனால் ஆரோக்கியமான ரத்த உயிரணுக்களில் ஒன்றுகூட பாதிக்கப்படவில்லை என்பது கண்டறியப்பட்டது. இந்த சிப்பி நானோ ரோபோவுக்குள், புற்றணுக்களின் செயல்பாடுகளை தடை செய்யும் திறனுள்ள ஒன்றுக்கு மேற்பட்ட மருந்துகளை புகுத்தி உடலுக்குள் செலுத்தினால், லியூக்கீமியா உயிரணுக்களை ஒன்று விடாமல் மொத்தமாக அழித்துவிடலாமாம். இதன் மூலம் லியூக்கீமியா வகை ரத்த புற்றுநோய்க்கு முழுமையான சிகிச்சையளிக்க முடியும் என்கிறார் டக்ளஸ்.

முக்கியமாக, சிப்பி நானோ ரோபோக் களின் ஆப்டாமர் பூட்டுகளை மாற்றுவதன் மூலம், உடலின் எந்த வகையான உயிரணுவையும் தாக்கி அழிக்க முடியும் என்கிறார் டக்ளஸ். இதுதான் மருத்துவ உலகின் தற்போதைய பரபரப்பான செய்தி. எந்தவித பாகுபாடுமின்றி வேகமாக வளரும் திறனுள்ள எல்லா உயிரணுக்களையும் கொன்றுவிடும் தன்மையுள்ளது கீமோதெரபி சிகிச்சை. கீமோதெரபியில் இருக்கும் இந்த முக்கியமான சிக்கலை, இரண்டு பூட்டுகளைக் கொண்ட சிப்பி நானோ ரோபோக்கள் தீர்த்து வைக்கும் என்றும் நம்பிக்கை அளிக்கிறார் டக்ளஸ்.அதாவது, சிப்பி நானோ ரோபோவுக்குள் இருக்கும் மருந்தை வெளியேற்ற அதன் இரண்டு பூட்டுகளை திறந்தாக வேண்டும்.

இந்த பூட்டுகளை திறக்க, சிப்பி நானோ ரோபோக்கள் சந்திக்கும் உயிரணுக்களின் மேற்புறத்தில் குறிப்பிட்ட சில மூலக்கூறுகள் இருக்க வேண்டியது அவசியம். இந்த மூலக்கூறுகள், புற்றணுக்களில் மட்டும்தான் இருக்கும். ஆக, சிப்பி நானோ ரோபோ சிகிச்சையில் புற்றணுக்கள் மட்டுமே கொல்லப்படும். எந்தவித பின்விளைவுகளும் இருக்காது! ஆமாம் என்று ஆமோதிக்கிறார் டென்மார்க்கிலுள்ள ஆர்ஹஸ் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர் யூர்கன் ஜெம்ஸ். மேலும், டி.என்.ஏ. ஓரிகேமி தொழில்நுட்பத்தின் மூலம் புத்திசாலியான மருந்துகளை கண்டுபிடிக்க முடியும் என்பது உண்மைதான்.

இதை டக்ளஸின் ஆய்வுக்குழு ஆதாரப்பூர்வமாக நிரூபித்திருப்பது பாராட்டத்தக்கது என்கிறார் ஜெம்ஸ். டி.என்.ஏ. ஓரிகேமி கொடுத்திருக்கும் இந்த டி.என்.ஏ. நானோ ரோபோ, புற்றுநோய் மருத்துவத்துக்கு கிடைத்த ஒரு மகத்தான பரிசு என்பது மறுக்க முடியாத உண்மைதான் என்கிறார்கள் பால் ராத்மண்ட் உள்ளிட்ட உலகின் பிற புற்றுநோய் ஆய்வாளர்கள். 

மீண்டும் மற்றுமொரு பதிவினூடாகச் சந்திக்கின்றேன், அன்புடன், ஹரி பாபு.

மனிதன் வசிப்பதற்கு ஏற்ற கிரகங்கள் கண்டுபிடிப்பு



பால் மண்டலத்தில் பூமியைப் போல மிதமான வெப்பநிலையுடன் மனிதர்கள் வசிப்பதற்கு ஏற்ற கிரகங்கள் ஆயிரக்கணக்கில் இருப்பதாக வானவியல் வல்லுநர்கள் கண்டறிந்துள்ளனர்.


இதுகுறித்து, பிரான்சின் கிரனோபில் நகரில் உள்ள கிரகங்கள் மற்றும் வானியல் கல்வி நிறுவனத்தின் பேராசிரியர் சேவியர் போன்பில்ஸ் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். அவர்கள் கூறியதாவது: பால் மண்டலத்தில் சுமார் 16,000 கோடி கிரகங்கள் (ரெட் ட்வார்ப்) உள்ளன. இதில் 40 சதவீதம் பூமியைப் போலவே (சூப்பர் எர்த்) உள்ளன. 


அவற்றின் மேற்பரப்பு தண்ணீர் ஓடுவதற்கேற்ப உள்ளதுடன், உயிரினங்கள் வசிப்பதற்கேற்ற மிதமான வெப்பநிலையும் உள்ளன. இவை ஒவ்வொ ன்றும் பூமியைப் போல 1 முதல் 10 மடங்கு பெரியதாக உள்ளன.

எனினும், நட்சத்திரங்களின் அளவோடு ஒப்பிடும்போது 80 சதவீதம் மட்டுமே இருக்கும். இவை சூரியனோடு ஒப்பிடும்போது, மங்கலாகவும், குளிர்ச்சியாகவும் உள்ளன. ஜூபிடர் மற்றும் சனி கிரகங்களைப் போல மிகமிக தொலைவில் இவை அமைந்துள்ளன. இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மீண்டும் மற்றுமொரு பதிவினூடாகச் சந்திக்கின்றேன், அன்புடன், ஹரி பாபு.

உறுப்பு மாற்றுச் சிகிச்சைக்கு உதவி!

சிறுநீரகம் போன்ற உடல் உறுப்புகள் பழுதடைந்தவர்கள் பிறரிடம் இருந்து பெறும் உறுப்பால் இயல்பு நிலையை அடைய முடியும் என்பது இன்றைய மருத்துவத் துறையின் வரம். ஆனால் கொடையாளர் எல்லோரின் உறுப்பையும் தேவைப்படுவோரின் உடம்பு ஏற்காது என்பது இதில் உள்ள சங்கடம். இதற்குத் தீர்வு காணும் வகையில் ஸ்டெம் செல் ஊசி முறையை மருத்துவ விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். 
 
இதன்மூலம் எந்த உறுப்பையும் எவரது உடம்பும் ஏற்கும்படி அவரது நோய் எதிர்ப்பு அமைப்பை மாற்றலாம் என்கிறார்கள். உறுப்பு மாற்றுச் சிகிச்சையில் இது ஒரு முக்கியமான முன்னேற்றமாகக் கருதப்படுகிறது. அமெரிக்காவில் நோயாளிகள் சிலருக்கு இந்த முறையில் மருந்து செலுத்தப்பட்டது வெற்றிகரமாக அமைந்திருக்கிறது என்று தெரிவிக்கப்படுகிறது. இப்போதைக்கு, மாற்று உறுப்புப் பொருத்திக்கொண்டவர்களுக்கு அதை அவர்களின் நோய் எதிர்ப்பு அமைப்பு ஏற்காத நிலையில், அதைச் சமாளிக்க வாழ்நாள் முழுவதும் மருந்து சாப்பிடும் நிலைதான் உள்ளது.
அவ்வாறு சாப்பிடும் மருந்துகளால் பக்க விளைவுகளும் ஏற்படுகின்றன. அதாவது, மாற்று உறுப்பை உடம்பு ஒரு மாதிரி சகித்துக் கொண்டாலும் அதிக ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி, தீவிரமான நோய்த் தொற்று போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன.
 
தங்களின் புதிய ஸ்டெம் செல் ஊசியால், இனிமேல் நோயாளிகள் மாற்று உறுப்பு எதிர்ப்பைச் சமாளிக்கும் மருந்திலிருந்து விடைபெறலாம் என்று இவர்கள் கூறுகிறார்கள்.
நார்த் வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தின் பீன்பர்க் மருத்துவக் கல்லூரிப் பேராசிரியர் ஜோசப் லீவன்தால் இதுபற்றிக் கூறுகையில், ``தற்போது தொடர்ந்து நடந்துகொண்டிருக்கும் இந்த ஆய்வின் ஆரம்பகட்ட முடிவுகள் உற்சாகம் தருவதாக உள்ளன. எதிர்காலத்தில் உறுப்பு மாற்றுச் சிகிச்சையில் இது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தலாம்'' என்கிறார். 

மீண்டும் மற்றுமொரு பதிவினூடாகச் சந்திக்கின்றேன், அன்புடன், ஹரி பாபு.

மனித நோய்களை கண்டுபிடிக்கும் ரோபோ




பலவிதமான ரோபோக்கள் வடிவமைக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளன. இந்த நிலையில் தற்போது மனிதர்களின் நோயை கண்டறியும் ரோபோக்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இவை ஒரு உயிரினம் போன்று தாங்கள் பணியை செய்ய முடியும்.
 
 

இதை இங்கிலாந்தில் உள்ள நியூகேஸ்டில் பல் கலைக்கழகத்தின் சர்வதேச நிபுணர்கள் குழு வடிவமைத்துள்ளது. மைக்ரோ ரோபோ என அழைக்கப்படும் இவற்றில் மைக்ரோ எலெக்ட் ரானிசுடன் சைபர் பிளாசம் கலக்கப்பட்டுள்ளது. இது அட்லாண்டிக் கடலில் ஆழ் பகுதியில் வாழும் 'லேம்பிரே' என்ற உயிரினத்தின் செயல்பாடு போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.
 
சைபர் பிளாசத்தில் எலெக்ட்ரானிக்ஸ் நம்பு மண்டலம், கண், மூக்கு உள்ளிட்ட உணர்வு உறுப்புகள் உள்ளன. இவை பாலூட்டிகளின் செல்களில் இருந்து தயாரிக்கப்பட்டவை. இவற்றை செயற்கை தசை என்று அழைக்கின்றனர்.

மீண்டும் மற்றுமொரு பதிவினூடாகச் சந்திக்கின்றேன், அன்புடன், ஹரி பாபு.

மனங்களைக் கவரும் விண்டோஸ் 8


நுகர்வோருக்கான முன் பயன்பாட்டிற்கான விண்டோஸ் 8 பதிப்பினைப் பலரும் தரவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக பொறியியல் கல்லூரி மாணவர்கள், தகவல் தொழில் நுட்பத்துறையில் இயங்குபவர்கள், இதனைப் பயன்படுத்திப் பார்த்துவிட்டுத் தங்கள் கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.


விண்டோஸ் 8 தொடுதிரை பயன்பாட்டினை எல்லாரும் பயன்படுத்திப் பார்க்க இயல வில்லை. ஆனால் அந்த அனுபவம் சிறப்பாக இருக்கும் என அதனை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். இதனால், தொடுதிரை வசதியுடன் கூடிய விண்டோஸ் 8 கம்ப்யூட்டரையே வாங்க வேண்டும் என முடிவு செய்து, பலர் அடுத்த கம்ப்யூட்டர் வாங்குவதனை ஒத்தி வைத்துள்ளனர். இவர் களின் மனதைக் கவர்ந்த, பயனுள்ள சில முக்கிய சிறப்புகளை இங்கே பட்டியலிடலாம். 

1. கேம்ஸ்: விண்டோஸ் போன் 7 சிஸ்டத்தில், மைக்ரோசாப்ட் தன் எக்ஸ்பாக்ஸ் லைவ் சாதனத்திலிருந்து கேம்ஸ்களை மிக எளிதாக மாற்றும் வசதி தந்திருந்தது. விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டமும் அதே கட்டமைப் பில் உருவாக்கப்பட்டிருப்பதால், அதே போன்று கேம்ஸ்களை எளிதாக மாற்ற முடிகிறது. இதனால், செலவும் குறைகிறது. குறிப்பாக, சிலர் வித்தியாசமான முறையில் சில பிரபலமாகாத விளையாட்டுக்களைத் தரவிறக்கம் செய்து விளையாட எண்ணு வார்கள். இவர்களுக்கு விண்டோஸ் 8, எக்ஸ்பாக்ஸ் லைவ் சாதனக் கூட்டு மிகவும் பயனுள்ளதாகவும், மகிழ்ச்சி தருவதாகவும் அமைந்துள்ளது. 
2. டேப்ளட்ஸ்: டேப்ளட் பிசிக்களை அனை வரும் பயன்படுத்தும் காலம் இப்போதைக்கு இல்லை என்றாலும், ஒரு நாளில் அது நடந்தே தீரும். அவ்வாறு மாறுபவர்களுக்கு விண்டோஸ் 8 நல்ல ஒரு வழித்தடமாக அமைந்துள்ளது. கவனத்தை ஈர்க்கிறது. இதன் தொடுதிரை பயன்பாடு, டேப்ளட் பிசிக்கு மக்களை மாற்றும் சிறப்பாக அமைந்துள்ளது. இதனைப் பயன்படுத்தியவர்கள், நிச்சயம் டேப்ளட் பிசிக்கு மாறுவது எளிமையாக வும் இனிமையாகவும், பயனுள்ளதாகவும் இருப்பதை உணர்வார்கள். விண்டோஸ் போன் 7ல் இந்த சிஸ்டத்தினைப் பயன் படுத்தியவர்களுக்கு, விண்டோஸ் 8 மிகவும் எளிதாகவும், பிடித்துப் போனதா கவும் அமையும்.
3. மெசேஜ் அனுப்புதல்: விண்டோஸ் 8 சிஸ்டம் பொதுவான சமூக தளங்களான, பேஸ்புக், லைவ் மற்றும் ட்விட்டர் தளங்களுடன் மெசேஜ் அனுப்பும் செயல் பாட்டில் இணைந்து இயங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இவை எல்லாம் ஒரே இடத்தில் கிடைப்பது இதன் சிறப்பு. இதனால், வெவ்வேறு இணைய தளங்களைத் திறந்து இயங்கும் தேவை தவிர்க்கப்படுகிறது. பலவகையான தர்ட் பார்ட்டி புரோகிராம்களை இயக்கும் நிலை யும் தேவைப்படவில்லை. பல பிரபல மான தளங்களுடன் இணைந்த மெசேஜிங் சிஸ்டம் கிடைப்பது அனைவருக்கும் மகிழ்ச்சியாக உள்ளது. இதுவும் விண்டோஸ் 7 சிஸ்டத்திலிருந்து விண்டோஸ் 8க்கு வந்த ஒரு வசதியாகும்.
4. அப்ளிகேஷன் ஸ்டோர்: விண்டோஸ் சிஸ்டம் பயன்படுத்துபவர்களுக்கென ஓர் அப்ளிகேஷன் ஸ்டோர் தனியே முன்பு இயங்கியது. அது பலர் அறியாமலேயே இருந்து வந்தது, ஒரு சிலர் மட்டும் மிக நன்றாகவே பயன்படுத்தி வந்தனர். விண்டோஸ் 8 சிஸ்டம் வந்த பின்னர், இதனைக் கண்டு கொள்ளாமல் இருக்க முடியாது. மெட்ரோ அப்ளிகேஷன் புரோகிராம்களை மிக எளிதாக, விண்டோஸ் 8 மூலம் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். அது மட்டுமின்றி, அவை தானாகவே அப்டேட் செய்து கொள்ளும் வகையில் தரப் பட்டுள்ளன. இதனால், பலவகையான அப்டேட் அப்ளிகேஷன் களை காலத்தே இறக்கிப் பதிவதும், மிகப் பழைய நிலையில் அப்ளிகேஷன்களை இயக்குவதும் இனி நடக்கப்போவது இல்லை. எனவே, கம்ப்யூட்டரை மாற்றினால் கூட, இன்ஸ்ட லேஷன் டிஸ்க், ட்ரைவர் என எதனையும் தேட வேண்டிய தில்லை. அனைத்தையும் அப்ளிகேஷன் ஸ்டோரிலிருந்து இறக்கிக் கொண்டு பயன்படுத்தலாம். 
5. பாதுகாப்பின் ஸ்திரத்தன்மை: மெட்ரோ அப்ளிகேஷன்கள் அமைந்துள்ள WinRT API கட்டமைப்பு, இந்த அப்ளிகேஷன்கள் பயன்படுத்துபவர்கள் தரும் டேட்டா மற்றும் சிஸ்டம் இணைந்த செயல் பாட்டில் என்ன செய்திட வேண்டும் எனத் துல்லிதமாக வரையறை செய்கின்றன. மெட்ரோ வில் இயங்கும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர், மற்ற தர்ட் பார்ட்டி அப்ளிகேஷன்களை இயங்கவே விடாது. இது டெவலப்பர்களுக்கு ஒரு தடைச் சுவராக இருக்கலாம். ஆனால், பயனாளர்களுக்கு பாதுகாப்பு கவசமாக அமைந்துள்ளது. இதனால், தர்ட் பார்ட்டி அப்ளிகேஷன்கள் எதுவும் சிஸ்டத்தினைக் கெடுக்க முடியாது; பயனாளர்களின் டேட்டாவினை அறிந்தோ அறியாமலோ சீரழிக்க முடியாது.
6. இணைந்த இன்டர்பேஸ்: மைக்ரோசாப்ட் தன் அனைத்து சிஸ்டங்களையும் மெட்ரோ யூசர் இடைமுகத்துடன் இணைத்துக் கொண்டு வருகிறது. பெர்சனல் கம்ப் யூட்டர், போன், டேப்ளட் பிசி மற்றும் வீடியோ முனையங்கள் அனைத்தும் இதனைக் கட்டமைப்பாகக் கொண்டே இயங்கு கின்றன. இதனால், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் எந்த ஒரு புதிய சாதனத்தைப் பயனாளர் ஒருவர் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டாலும், அவருக்கு அது ஏற்கனவே பழகிய ஒன்றாகத்தான் இருக்கும். 
7. க்ளவ்ட் இணைப்பு: விண்டோஸ் 8 சிஸ்டத்துடன், கிளவ்ட் அடிப்படையிலான செயல்முறை ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இதனால், லைவ் ஐ.டி. ஒன்றின் மூலம் விண்டோஸ் 8 சிஸ்டம் இயங்கும் கம்ப்யூட்டர் ஒன்றில் பதிந்தால், அனைத்து இணைந்த டேட்டா வும் உடனே கிடைக்கும். எடுத்துக் காட்டாக, நான் விண்டோஸ் 8 நுகர்வோர் முன் பயன்பாடு இயக்கத்தில் இணைந்தவுடன், என்னுடைய ட்விட்டர், பேஸ்புக் மற்றும் லைவ் மெசஞ்சர் அக்கவுண்ட்கள் அனைத்தும் பதியப்பட்டன. ஏனென்றால், போனிலும் நான் அதே லைவ் ஐ.டி.யைப் பயன்படுத்துகிறேன். இதில் உள்ள எந்த டேட்டாவினை நான் மாற்றினாலும், உடனே அது மற்ற பயன்பாட்டு தொகுப்பு களிலும் அப்டேட் செய்யப்பட்டு காட்டப்படும். ஏதேனும் ஒரு சாதனத்தை மாற்றுகையில் இது மிகவும் பயனுள்ளதாக உள்ளது. ஏனென்றால், ஒவ்வொரு இணைப்பினையும் புதிய தாகப் பதிய வேண்டியதில்லை. பதிந்த பின்னர் டேட்டாவினை மீண்டும் உருவாக்கத் தேவையில்லை.
8. ஒருங்கிணைந்த பிற தள சேவைகள்: விண்டோஸ் 8 சிஸ்டம், மற்ற தளங்களுடன் ஏற்படுத்திக் கொள்ளும் ஒருங்கிணைந்த கட்டமைப்பு, அனைவருக்கும் மகிழ்ச்சியையும், மனதிற்கு நிறைவினையும் தரும் வகையில் உள்ளது. எடுத்துக்காட்டாக, விண்டோஸ் சிஸ்டத்தில் தரப்பட்ட மை பிக்சர்ஸ் (My Pictures) இதுவரை ஒரு டைரக்டரியாக மட்டுமே செயல்பட்டது. இப்போது, இது ஆல்பம் மற்றும் லைப்ரரீஸ் (Album and Libraries) என்ற புதிய வசதியைக் கொண்டுள்ளது. இதன் மூலம் படங்கள் எங்கிருந்து வந்தன என்ற தகவலை நாம் பெற முடியும். சேவைத் தளங்களான Flickr மற்றும் Facebook போன்றவை, Libraries என்ற வகையில் சிஸ்டத்துடன் ஒருங்கிணைக் கப்பட்டுள்ளன. மற்ற தர்ட் பார்ட்டி அப்ளிகேஷன்களும் இந்த பிரிவில் இணைந்து கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. 
இதே போல People Hub என்ற பிரிவில், நாம் பல்வேறு தளங்கள் (Facebook, email accounts, LinkedIn, போன்றவை)வாயிலாக அறிந்து வைத்திருக்கும் நபர்கள், நண்பர்கள் குறித்த தகவல்கள் இடம் பெறுகின்றன.இதனால் நம் தகவல்கள், அப்ளிகேஷன்கள் அடிப்படையில் அமையாமல், நாம் பயன்படுத்தும் சிஸ்டத்திற்குள் கொண்டு வரப்படுகின்றன. எனவே நாம் பிற தளங்களுக்கு அடிக்கடி அனாவசியமாகச் சென்று வரும் வேலை மிச்சமாகிறது. 
9. மின்னஞ்சல்: விண்டோஸ் போன் 7 சிஸ்டம் அதன் மிகச் சிறப்பான இமெயில் கிளையண்ட் அமைப்பிற்காகப் பல பாராட்டுதல்களைப் பெற்றது. இதே வசதி இங்கு விண்டோஸ் 8 சிஸ்டத்தில் பெரிய திரைக்கேற்ப வகையில் அமைக்கப் பட்டுள்ளது. பல இமெயில் அக்கவுண்ட்கள் இதில் ஒருங்கிணைக்கப் பட்டு, பயனாளர் களுக்கு அனைத்தும் ஒரே குடையின் கீழ் வழங்கப்படுகின்றன. இதனால் இவற்றை விரைவாகவும், எளிதாகவும் கையாள முடிகிறது.
10. எளிமை: விண்டோஸ் 8 சிஸ்டத்தின் ஒரு சிறப்பு அதன் மெட்ரோ அப்ளிகேஷன்கள். இவற்றுடன் நாம் இணைந்து பணியாற்றினால், இந்த சிஸ்டத்தின் எளிமை நமக்குப் புரிய வரும். இதுவரை விண்டோஸ் சிஸ்டத்தில், ஒரே நேரத்தில், பல பணிகளை எடுத்துப் பலவாறாகப் பணியாற்றியவர்கள், பல நேரங்களில் தடுமாறிப் போனார்கள். ஒரு சில அப்ளி கேஷன்கள் தங்களுக்கு வேண்டிய இயக்க சூழ்நிலை கிடைக்கவில்லை என்றால், முடங்கிப்போயின. ஆனால், விண்டோஸ் 8 தரும் மெட்ரோ அப்ளிகேஷன்கள் இயக்கத்தில் முடங்கிப் போகும் சூழ்நிலையே ஏற்படாது. நம்பிக்கையோடு, அப்ளி கேஷன்களை இயக்கி வசதிகளை அனுபவிக்கலாம்.
அப்ளிகேஷன் ஸ்டோர் மூலம் எந்நேரமும் நமக்குக் கிடைக்கக் கூடிய புரோகிராம்கள், ஒரே இடத்தில் அனைத்து இமெயில் கிளையண்ட் புரோகிராம்கள், மெசேஜ் அனுப்ப ஒரே இடம், வெவ்வேறு அப்ளிகேஷன்கள் மற்றும் இணைய தளங்களுக்கு அடிக்கடி மாறிச் சென்று இயக்க வேண்டாமல், ஒரே இடத்தில் இயக்க சூழ்நிலை பெறும் வசதி என அனைத்தும் எளிமையாக்கப் பட்டுள்ளன. தற்போது இருக்கிற சிஸ்டம் ட்ரே நோட்டிபிகேஷன், பஸ்ஸர், நாய்ஸ், டாஸ்க்பார் ஐகான்ஸ் என்ற வழக்கமான விண்டோஸ் சூழ்நிலை இல்லாமல், எளிமையான, வேகமான, வசதியான ஒரு சூழ்நிலைக்கு நம்மை அழைத்துச் செல்வதனால், பயனாளர்களைக் கட்டிப் போட்டு குஷிப்படுத்தும் கட்டமைப்பாக விண்டோஸ் 8 அனைவருக்கும் தோன்றுகிறது. 

மீண்டும் மற்றுமொரு பதிவினூடாகச் சந்திக்கின்றேன், அன்புடன், ஹரி பாபு.