பல இணைய தளங்களிலிருந்து சேகரித்தவைகளை பலருக்கும் பயனாக அமையும் என்ற நோக்கம் கருதி இந்த பிளாக்கில் பதிந்துள்ளேன் - உங்கள் அன்புக்குரிய "ஹரி பாபு".

Search This Blog

தமிழன் வலைதளம்

தமிழுக்கும் அமுதென்று பேர் அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்உயிருக்கு நேர்!

தமிழன் வலைதளம்

தமிழுக்கும் அமுதென்று பேர் அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்உயிருக்கு நேர்!

தமிழன் வலைதளம்

தமிழுக்கும் அமுதென்று பேர் அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்உயிருக்கு நேர்!

தமிழன் வலைதளம்

தமிழுக்கும் அமுதென்று பேர் அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்உயிருக்கு நேர்!

தமிழன் வலைதளம்

தமிழுக்கும் அமுதென்று பேர் அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்உயிருக்கு நேர்!

Showing posts with label பிளாக்கர் பாடம். Show all posts
Showing posts with label பிளாக்கர் பாடம். Show all posts

Monday, October 26, 2015

ப்ளாக்கரில் HTTPS பாதுகாப்பு வசதி அறிமுகம்


ஒவ்வொரு நாளும் இணையம் வளர்ச்சி அடைந்துக் கொண்டே வருகிறது. அதே நேரம் இணைய தாக்குதல்களும் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. இணைய தாக்குதலிலிருந்து பாதுகாப்பு பெறHTTPS வசதியை ப்ளாக்கர் தளம் அறிமுகப்படுத்தியுள்ளது.


HTTPS என்றால் என்ன?
பாதுகாப்பான மீயுரை பரிமாற்ற நெறிமுறை (HTTPS) என்பது ஒரு கணினி பிணைய இயக்க இணையத்தில் பாதுகாப்பான முறையில் எந்த ஒரு தகவலையும் (Software deployment) பயன்படுத்தும் ஒரு தகவல் தொடர்பு நெறிமுறை ஆகும். இதுவரை இணையத்தில் ஒரு முகவரியைக் கொடுக்கும் போது ஹெடிடிபி(http) என்றே கொடுக்கப்பட்டு வந்தது. அறிவியல் வளர்ச்சியின் போக்கால் நமது இணைய தகவல் திருடப்பட்டு தவறான வழிகாட்டுதலுக்கு உள்ளாக்கப்படக்கூடாது என்ற யோசனையில் httpயை விடுத்து போக்குவரத்து அடுக்கு பாதுகாப்புக்காக (SSL/TLS) https (hyper text transfer protocol secure) அதாவது பாதுகாப்பான மீயுரை பரிமாற்ற நெறிமுறை பயன்படுத்தப்படுகிறது.-Wikipedia
சுருக்கமாக சொன்னால் ஒரு இணையதளத்திற்கும், அதன் பார்வையாளர்களுக்கும் இடையில் நடைபெறும் தகவல் பரிமாற்றத்தை பாதுகாக்கும் முறை ஆகும்.

விரிவாக காண இணைய பாதுகாப்புதொடரை படிக்கவும்.
தற்போது இந்த வசதியை ப்ளாக்கர் தளம் இலவசமாக வழங்குகிறது.மீண்டும் மற்றுமொரு பதிவினூடாகச் சந்திக்கின்றேன்,,,,,,,,,,,,,,,,,,அன்புடன்,www.haribabuwebinfo.blogspot.in-ஹரி பாபு(HARI BABU). நன்றி:

Thursday, March 20, 2014

பதிவுகளை காப்பி அடிப்பதை தடுக்க



இணையத்தின் வளர்ச்சி காரணமாக கிட்டத்தட்ட அனைத்து விசயங்களும் எளிதாகிவிட்டன. நம்முடைய கருத்துக்களை மற்றவர்களிடம் பகிர்வதும் எளிதாகிவிட்டது. அதே சமயம் மற்றவர்கள் பகிர்ந்தவற்றை காப்பி அடிப்பது அல்லது காப்பி செய்வதும் எளிதாகிவிட்டது. தற்போது பல பதிவர்களுக்கு வருத்தத்தை கொடுப்பது பதிவு திருட்டு.

ஒரு பதிவை பகிர்வதற்கும், திருடுவதற்கும் ஒரே வித்தியாசம் தான். பதிவின் எழுத்தாளரிடம் அனுமதி பெற்று பகிர்ந்தால் அது பகிர்வு. அனுமதி இல்லாமலும், எழுதியவரின் பெயரை, ப்ளாக்கை குறிப்பிடாமலும் பகிர்ந்தால் அது திருட்டு. தற்போது இணையத்தின் வளர்ச்சிக் காரணமாக நமது பதிவுகள் Copy செய்யப்படுவதை முற்றிலுமாக தடுக்க இயலாது. ஆனால், அதை தடுப்பதற்கு சில வழிகளை செய்யலாம். அதில் ஒன்று, நமது பதிவுகள் காப்பி அடிக்கப்படுவதை தடுக்க,Copy செய்யும் முறையை முடக்க வேண்டும்(Disable Copy and Paste).

அவ்வாறு செய்ய:

1. முதலில் Blogger Dashboard => Template => Backup/Restore Template என்ற பகுதிக்கு சென்று, Download Full Template என்பதை க்ளிக் செய்து உங்கள் டெம்ப்ளேட்டை பேக்கப் எடுத்துக் கொள்ளுங்கள்.


2. பிறகு அதே பக்கத்தில் Edit Html பகுதிக்கு சென்று, அங்கு

<body>
என்ற Code-ஐ தேடி, அதனை பின்வருமாறு மாற்றவும். 
<body bgcolor="#FFFFFF" ondragstart="return false" onselectstart="return false">



3. பிறகு Save Template என்பதை க்ளிக் செய்யவும்.


குறிப்பு: சில டெம்ப்ளேட்களில் Body Tag-ல் வேறு சிலவும் சேர்ந்திருக்கும்.
 உதாரணத்திற்கு, 
<body expr:class='&quot;loading&quot; + data:blog.mobileClass'>

அது போன்று இருந்தால், அந்த code-ல் இறுதியில் > என்பதற்கு முன் ஒரு இடைவெளி விட்டு 
bgcolor="#FFFFFF" ondragstart="return false" onselectstart="return false"
என்பதை சேர்க்கவும்.


குறைகள்: இப்படி செய்வதால், வாசகர்கள் பதிவில் நாம் சொன்னதை மேற்கோள் காட்டவும் காப்பி செய்ய முடியாது. :( :( :(

ஆனாலும் , நமது பதிவுகள் காப்பி செய்யப்படுவதற்கு பல்வேறு வழிகள் இருக்கின்றன. அவற்றை சொல்ல எனக்கு விருப்பமில்லை.


Reference: http://www.hypergurl.com/




இன்றைய இணையம்:

1. ஹாரிபாட்டர் ரசிகர்களுக்காக Pottermore என்ற இணையதளம் வரும் அக்டோபர் மாதம் முதல் தொடங்க இருக்கிறது. அதற்கு முன் சிலருக்கு மட்டும் இந்த மாதத்திலேயே பார்க்கும் வசதியை அளிக்கிறது. கடந்த 31-ஆம் தேதி முதல், வரும் ஆகஸ்ட் ஆறாம் தேதி வரை தினமும், சில நேரங்கள் மட்டும் கேள்வி கேட்கும். அதற்கான சரியான பதில் அளித்தால் அதன் மூலம் கணக்கு தொடங்கி பார்க்கலாம். வாய்ப்பு கிடைக்காதவர்கள் அக்டோபர் மாதம் வரை காத்திருக்கவும். 

தள முகவரி: http://www.pottermore.com/

2. கூகிளின் புதிய இயங்குதளமான Chrome OS-ல் நமது கணக்குகள் ஹேக் செய்யப்படும் வாய்ப்புகள் இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.


மீண்டும் மற்றுமொரு பதிவினூடாகச் சந்திக்கின்றேன்,,,,,,,,,,,,,,,,,,அன்புடன், WWW.HARIBABINFOWEB.CO.CC-ஹரி பாபு(HARI BABU).

ஒவ்வொரு பதிவிற்கும் தனித்தனி META TAG



தேடுபொறி ரகசியங்கள் பற்றிய பதிவில் Meta Tag பற்றி சொல்லியிருந்தேன். Meta Tag என்பதுதேடல்பொறி உகப்பாக்கத்தில் (Search Engine Optimization) முக்கிய பங்கு வகிக்கிறது. நம்முடைய தளத்தில் Meta Tags சேர்ப்பது பற்றிவாசகர்களை அதிகரிக்க Meta Tags என்ற பதிவில் பார்த்தோம்.

இரண்டு நாட்களுக்கு முன் கூகிள் வெப்மாஸ்டர் சென்று ப்ளாக்கர் நண்பன் பற்றி பார்வையிட்ட பொழுது, Duplicate Meta Descriptions- 72 என்று காட்டியது. அதற்கான காரணத்தை இணையத்தில் தேடிய பொழுது விடை கிடைத்தது. நாம் சேர்த்த Meta Tag-ல் Description பகுதியில் உள்ளதை அனைத்து பதிவிற்கும் எடுத்துக் கொண்டதால், Duplicate Meta Descriptions என்று காட்டியது. அதனை சரி செய்ய நம்முடைய ஒவ்வொரு பதிவிற்கும் பிரத்யேக Meta Tag சேர்ப்பது தான் வழியாகும்.



அதற்கு  முன் ப்ளாக்கின் தலைப்பை மாற்றிவிட்டீர்களா? என்ற பதிவிற்கு சென்று, அங்கு சொல்லியுள்ள மாற்றத்தை செய்யவும். அதன் பின் பின்வரும் மாற்றத்தை செய்யவும்.

தனித்தனி Meta Tag சேர்க்க:

1. முதலில் Blogger Dashboard => Template => Backup/Restore Template என்ற பகுதிக்கு சென்று, Download Full Template என்பதை க்ளிக் செய்து உங்கள் டெம்ப்ளேட்டை பேக்கப் எடுத்துக் கொள்ளுங்கள்.


2. பிறகு அதே பக்கத்தில் Edit Html பகுதிக்கு சென்று, அங்கு 

<title><data:blog.pageName/> | <data:blog.title/></title>
என்ற Code-ஐ தேடி அதற்கு பின்னால் பின்வரும் Code-ஐ சேர்க்கவும்.
<meta expr:content='data:blog.pageName' name='description'/>


3. பிறகு Save Template என்பதை க்ளிக் செய்யவும்.

இவ்வாறு செய்வதன் மூலம், நம்முடைய பதிவின் தலைப்பையே அந்த பதிவிற்கான Meta Description ஆக காட்டும். இதன் மூலம் Duplicate Meta Descriptions என்பதை தவிர்க்கலாம்.


இன்றைய இணையம்:

 1. ட்விட்டர் தளம் மாற்றம் அடைந்ததை பலர் அறிந்திருப்பீர்கள். இது வரை விருப்பமுள்ளவர்கள் பழைய ட்விட்டரை பயன்படுத்தும் வசதி இருந்து வந்தது. விரைவில் அந்த வசதியை நிறுத்தப் போகிறது.


2. கூகிள் சாட்டில் ஒருவருடன் பேசிக்கொண்டிருக்கும் போது யூடியூப் வீடியோ இணைப்பை அனுப்பினார். அதை க்ளிக் செய்தால் தனி பக்கத்திற்கு செல்லாமல், அதே பக்கத்தில் சிறியதாக வீடியோ ஓடிக்கொண்டிருந்தது. இந்த வசதி எப்போது வந்தது என்று தெரியவில்லை.






3. ஆப்பிள் ஐபோன் மற்றும் ஐபேட்களுக்கான மின்னணு புத்தகங்களை தயாரிக்கும் Push Pop Press என்னும் நிறுவனத்தை பேஸ்புக் வாங்கியுள்ளது. மின்னணு புத்தகங்கள் என்றால் சாதரணமான PDF புத்தகங்கள் இல்லை. இதில் ஆடியோ, வீடியோ மற்றும் கிராபிக்ஸ் போன்றவைகளும் பார்க்கலாம். இதன் மூலம் பேஸ்புக் என்ன செய்யப் போகிறது என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும். 


மீண்டும் மற்றுமொரு பதிவினூடாகச் சந்திக்கின்றேன்,,,,,,,,,,,,,,,,,,அன்புடன், WWW.HARIBABINFOWEB.CO.CC-ஹரி பாபு(HARI BABU).

Friday, April 13, 2012

உங்கள் ப்ளாக்கில் மால்வேர் உள்ளதா?





மால்வேர் (Malware) என்பது கணினியை தாக்கும் மென்பொருள் ஆகும். இது தீமை இழைக்கும் மென்பொருள் என்பதால் இதனை தமிழில் "தீம்பொருள்" என்று அழைக்கிறார்கள். இதனை நம் கணினிக்கு அனுப்புவதன் மூலம் அத்தீம்பொருளை உருவாக்கியவர்கள் இணையம் மூலம் நமது தகவல்களை திருட முடியும். இங்கு ப்ளாக்கை தாக்கும் மால்வேர் பற்றி மட்டும் பார்ப்போம்.

மால்வேர் எப்படி தாக்குகிறது?

மால்வேர் நிரல்களை அல்லது மால்வேரினால் பாதிக்கப்பட்ட தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட நிரல்களை நமது ப்ளாக்கில் நிறுவுவதால் நம்முடைய ப்ளாக்கிற்கும் மால்வேர் வந்துவிடும். இதனால் சில சமயம் நம் ப்ளாக்கை பார்க்கும் அனைவரின் கணினியிலும் வந்துவிடும். சில சமயம் என்று குறிப்பிட்டதற்கு காரணம் சில மால்வேர்களினால் நமது கணினிக்கு எந்த பாதிப்பும் வராது. ஆனால் நமது ப்ளாக்கை திறந்தால் அது வேறொரு விளம்பர தளத்திற்கு redirect ஆகும். இது மாதிரியான மால்வேர்களுக்கு ஆட்வேர் (Adware) என்று பெயர். சமீபத்தில் ஒரு தமிழ் திரட்டியின் ஓட்டுபட்டையில் இந்த பிரச்சனை வந்தது. பிறகு சரிசெய்யப்பட்டுவிட்டது.


நமது ப்ளாக்கில் மால்வேர் உள்ளதா? 

இதனை கண்டுபிடிக்க கூகிள் தளம் நமக்கு உதவுகிறது. கூகிள் தேடலில் உங்கள் ப்ளாக் முகவரியைத் தேடி பாருங்கள். உங்கள் ப்ளாக்கில் மால்வேர் இருந்தால் தேடல் முடிவுகளில் உங்கள் ப்ளாக் பெயருக்கு கீழே “This site may harm your computer” என்று சொல்லும்.



அந்த மால்வேர் பற்றிய மேலும் சில தகவல்களை அறிய,

http://www.google.com/safebrowsing/diagnostic?site=blogname.com 

என்ற முகவரிக்கு செல்லவும். இதில் blogname.com என்பதற்கு பதிலாக உங்கள் ப்ளாக் முகவரியை கொடுக்கவும். இதுவும் கூகிள் தரும் வசதிதான். உங்கள் ப்ளாக்கில் மால்வேர் இருந்தால் "Site is listed as suspicious - visiting this web site may harm your computer." என்று சொல்லும். மேலும்  எந்த தளத்தின் மால்வேர் உங்கள் ப்ளாக்கை தாக்கியுள்ளது? என்றும் காட்டும்.


உங்கள் ப்ளாக்கில் மால்வேர் இல்லையென்றால் 'Google has not visited this site within the past 90 days' என்று சொல்லும். 

மால்வேர் நிரலை எப்படி கண்டுபிடித்து நீக்குவது?

மால்வேர் பாதித்துள்ள ப்ளாக்கை சரி செய்வதற்கு எளிய வழி டெம்ப்ளேட் மாற்றுவது. அப்படியில்லாமல் மால்வேர் நிரலை மட்டும் நீக்க வேண்டும் என நினைத்தால் இதற்கு கூகிள் வெப்மாஸ்டர் டூல் உதவுகிறது. இது வரை நீங்கள் உங்கள் தளத்தை அதில் இணைக்கவில்லைஎனில் உடனே இணைத்து விடுங்கள்.

அது பற்றிய தொடர்: கூகிள் வெப்மாஸ்டர் டூல்

அதில் இணைத்தபிறகு உங்கள் ப்ளாக்கில் மால்வேர் வந்தால் கூகிள் வெப்மாஸ்டர் டூல் தளத்தில் பின்வருமாறு காட்டும்.


அதில் Details என்பதை க்ளிக் செய்தால் மால்வேர் உள்ள நிரலை காட்டும்.


பிறகு Blogger Dashboard => Template => Edit Html பகுதிக்கு சென்று, Expand Widget Templates என்பதை க்ளிக் செய்து, பாதிக்கப்பட்டுள்ள நிரலை நீக்கிவிட்டு, Save Template என்பதை க்ளிக் செய்யவும்.

சில முன்னேற்பாடுகள்:

இதனை நீங்கள் முன்னரே படித்திருப்பீர்கள். இப்பதிவுக்கு ஏற்றதென்பதால் இங்கு பகிர்கிறேன்.

1. வாரம் ஒருமுறை அல்லது மாதம் ஒருமுறை உங்கள் ப்ளாக் டெம்ப்ளேட்டை பேக்கப் (Backup) எடுத்துக் கொள்ளுங்கள். இதனால் மால்வேர் பாதித்தால் பழையதை பயன்படுத்திக் கொள்ளலாம். டெம்ப்ளேட்டை பேக்அப் எடுக்க,

Dashboard => Template பக்கத்திற்கு சென்று மேலே வலதுபுறம் Backup/Restoreஎன்னும் பட்டனை க்ளிக் செய்து பதிவிறக்கம் செய்துக் கொள்ளுங்கள்.

2. மாதம் ஒரு முறை உங்கள் ப்ளாக்கை பேக்கப் (Backup) எடுத்துக் கொள்ளுங்கள். இதன் மூலம் உங்கள் பதிவுகள், பின்னூட்டங்கள் என அனைத்தையும் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். ப்ளாக்கை பேக்கப் எடுக்க,

Dashboard => Settings => Other பக்கத்திற்கு சென்று Export Blog என்பதை க்ளிக் செய்து பதிவிறக்கம் செய்துக் கொள்ளுங்கள்.

பதிவிறக்கம் செய்ததை தேவைப்படும்போது பதிவேற்றம் செய்ய விரும்பினால் Import blog என்பதை க்ளிக் செய்து பதிவேற்றம் செய்துக் கொள்ளுங்கள்.

3. நம்முடைய ப்ளாக்கை பிரபலமாக்க திரட்டிகள் பெரிதும் உதவுகின்றன. அதற்காக எல்லா திரட்டிகளின் ஓட்டுபட்டைகளையும் இணைக்காதீர்கள். 

4. நமது ப்ளாக்கை அழகுப்படுத்த பல்வேறு விட்ஜட்களை சேர்ப்போம். அவ்வாறு சேர்க்கும் முன் கவனமாக இருக்கவும். சமீபத்தில் ஆன்லைன் வாசகர்களை காட்டும் ஒரு நிரலியில் மால்வேர் இருந்தது. அதனால் புதிய தளங்களில் இருந்து விட்ஜட்களை சேர்க்க நினைத்தால் முதலில் அந்த தளத்தை கூகிளில் தேடி பார்க்கவும்.

மேலும் ஏதாவது சந்தேகம் இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.

பிற்சேர்க்கை: 

மால்வேர் பாதிக்கப்பட்டுள்ள கணினிகள் மூலம் பதிவிடும் போதும் உங்கள் ப்ளாக்கை மால்வேர் தாக்க வாய்ப்புள்ளது. அதனால் நல்லதொரு ஆன்டிவைரஸ் மென்பொருளை பயன்படுத்தவும். அதனை அடிக்கடி அப்டேட் செய்து வரவும்.




மீண்டும் மற்றுமொரு பதிவினூடாகச் சந்திக்கின்றேன்,,,,,,,,,,,,,,,,,,அன்புடன், WWW.HARIBABINFOWEB.CO.CC-ஹரி பாபு(HARI BABU).

ஃபேஸ்புக்கில் பதிவுகளை பகிர்வது எப்படி?



ஃபேஸ்புக் பட்டனை நம் வலைப்பதிவில் இணைப்பது எப்படி? என்ற பதிவில் கூறியது போல, Social Networking Sites என்றழைக்கப்படும் சமூகத் தளங்களில் முதலிடத்தில் இருப்பது ஃபேஸ்புக் தளமாகும். அந்த தளத்தில் நம்முடைய பதிவுகளை தானியங்கி முறையில் பகிர்வது எப்படி? என்று பார்ப்போம்.


1. உங்கள் ஃபேஸ்புக் கணக்கைக் கொண்டு உள்ளே செல்லுங்கள். உங்களுக்கு கணக்கு இல்லையெனில், புதிதாக உருவாக்கிக் கொள்ளுங்கள்.

2. பிறகு http://www.facebook.com/editnotes.php?import என்ற முகவரிக்கு செல்லுங்கள். அல்லது இந்த link-ஐயே க்ளிக் செய்யுங்கள்.


3. பிறகு வரும் பக்கத்தில் Web Url: என்ற இடத்தில் உங்கள் ப்ளாக்கின் Feed URL-ஐ கொடுக்கவும். உதாரணத்திற்கு,

http://bloggernanban.blogspot.com/feeds/posts/default?alt=rss

**மேலுள்ள முகவரியில் bloggernanban.blogspot.com என்பதற்கு பதிலாக உங்கள் ப்ளாக்கின் முகவரியை சேர்த்து கொடுக்கவும்.



4. அதற்கு கீழே உள்ள Option பட்டனை Select செய்து, Start Importing என்பதை க்ளிக் செய்யவும்.

5. பிறகு உங்கள் பதிவுகளை Preview காட்டும். அதனை சரி பார்த்து பின் Confirmஎன்ற பட்டனை க்ளிக் செய்யவும்.



6. பிறகு உங்கள் ஃபேஸ்புக் முகப்பு பக்கத்தை பார்க்கவும். 

அவ்வளவு தான்.. இனி நீங்கள் புதிய பதிவுகள் பதிவிடும் போதெல்லாம், தானாகவே உங்கள் ஃபேஸ்புக் கணக்கில் பகிரப்படும்.

Update 1:

தற்போது இதில் ஏதோ தவறு இருக்கிறது. அதை சரி செய்ய முயற்சிக்கிறேன்.


Upadate 2:

தற்போது வேலை செய்கிறது. ஆனால் தலைப்பு மட்டும் முழுவதுமாக வருவதில்லை.

Update 3: 

முன்பு பேஸ்புக்கில் சில வார்த்தைகளை மட்டும் தான் பகிர முடியும். ஆனால் தற்போது எவ்வளவு வார்த்தைகள் வேண்டுமானாலும் பகிரும் வசதியை அளித்துள்ளது. அதனால்  உங்கள் ப்ளாக் Rss Feed-ஐ முழுவதுமாக வைத்திருந்தால், பதிவுகளும் முழுவதுமாக வந்துவிடும்.

இதனை சரி செய்ய Blogger Dashboard => settings => others பக்கத்திற்கு சென்று Allow Blog Feed என்பதில் Full என்பதற்கு பதிலாக வேறு ஏதாவது ஒன்றை மாற்றவும்.


மீண்டும் மற்றுமொரு பதிவினூடாகச் சந்திக்கின்றேன்,,,,,,,,,,,,,,,,,,அன்புடன், WWW.HARIBABINFOWEB.CO.CC-ஹரி பாபு(HARI BABU).

சுட்டிகள் புதிய விண்டோவில் திறக்க..



நமது ப்ளாக்கில் நாம் கொடுக்கும் சுட்டிகளை(Links) வாசகர்கள் க்ளிக் செய்தால், அதே விண்டோவில் வராமல் வேறு விண்டோவில் அல்லது Tab-ல் திறக்க வைப்பது எப்படி? என்று பார்ப்போம்.


1. Blogger Dashboard => Design => Edit Html பக்கத்திற்கு செல்லவும்.

2. Download Full Template என்பதை கிளிக் செய்து ஒரு காப்பி எடுத்து வைத்து கொள்ளுங்கள். நாம் டெம்ப்ளேட்டில் மாற்றம் செய்யும் போது தவறு ஏதாவது ஏற்பட்டால் மீண்டும் அதை Upload செய்து கொள்ளலாம். 


3.

<head>
என்ற Code-ஐ தேடி, அதற்கு பின்னால், பின்வரும் Code-ஐ Paste செய்யவும்.

<base target='_blank' />
 4. பிறகு Save Template என்பதை க்ளிக் செய்யவும்.

அவ்வளவு தான்.. இனி உங்கள் ப்ளாக்கில் உள்ள எந்த லிங்கை க்ளிக் செய்தாலும் அது புதிய Tab-ல், அல்லது புதிய Window-வில் திறக்கும்.

கவனிக்க: இவ்வாறு செய்வதனால் நம் தளத்தில் உள்ள பதிவுகள், பின்னூட்டங்கள் போன்ற (நம் தளத்திற்கே கொண்டு செல்லும்) சுட்டிகளும் வேறு Tab அல்லது Window-ல் ஓபன் ஆகும். இதனால் வாசகர்களுக்கு அலுப்பு ஏற்படலாம். இதனையும் கவனத்தில் கொள்ளவும்.




மீண்டும் மற்றுமொரு பதிவினூடாகச் சந்திக்கின்றேன்,,,,,,,,,,,,,,,,,,அன்புடன், WWW.HARIBABINFOWEB.CO.CC-ஹரி பாபு(HARI BABU).

ஒரு நொடியில் ஆயிரம் பின்னூட்டங்கள்



பதிவர்கள் பதிவுகளைப் பிரசுரித்தப்பின் அவர்கள் எதிர்பார்ப்பது வருகையாளர்களையும், பின்னூட்டங்களையும் தான். நமது தளத்திற்கு வருபவர்கள் அனைவரும் பின்னூட்டம் இடுவதில்லை. இந்த பதிவில் பதிவிட்ட உடனே ஆயிரம் பின்னூட்டங்களை பெறுவது எப்படி? என்று பார்ப்போம்.



இஸ்கி:  இந்த செய்முறை சும்மா விளையாட்டுக்காக தான்..


செய்முறை:

1. முதலில் Blogger Dashboard =>Design=>Edit Html பக்கத்திற்கு செல்லவும்.

2. Download Full Template என்பதை கிளிக் செய்து ஒரு காப்பி எடுத்து வைத்து கொள்ளுங்கள். நாம் டெம்ப்ளேட்டில் மாற்றம் செய்யும் போது தவறு ஏதாவது ஏற்பட்டால் மீண்டும் அதை Upload செய்து கொள்ளலாம். 

3.

]]></b:skin>
என்ற Code-ஐ தேடி அதற்கு முன்னால் பின்வரும் Code-ஐ Paste செய்யவும்.

a.comment-link:before{content:"1000";}

***மேலுள்ள code-ல் ஆயிரம் என்பதற்கு பதிலாக நீங்கள் விரும்பும் நம்பரை மாற்றலாம்.
4. பிறகு Save Template என்பதைக்ளிக் செய்யவும்.


இப்பொழுது உங்கள் ப்ளாக்கை பாருங்கள், எத்தனை பின்னூட்டங்கள் என்று?


நன்றி: http://www.anshuldudeja.com



மீண்டும் மற்றுமொரு பதிவினூடாகச் சந்திக்கின்றேன்,,,,,,,,,,,,,,,,,,அன்புடன், WWW.HARIBABINFOWEB.CO.CC-ஹரி பாபு(HARI BABU).

இப்படியும் படிக்கலாம்! (Dynamic Views)



ப்ளாக்கர் தளம் கடந்த மார்ச் 31-ஆம் தேதி அட்டகாசமான வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. உங்கள் ப்ளாக்கை நீங்கள் விதவிதமான டிசைன்களில் பார்க்கலாம், படிக்கலாம். இதற்கு Dynamic Views என பெயரிட்டுள்ளார்கள்.


தற்போது ஐந்து வித டிசைன்களை அறிமுகப்படுத்தியுள்ளார்கள்.


1. Flip Card
2. Mosaic
3. Sidebar
4. Snapshot
5. Timeline

கீழே உள்ள படங்களை பாருங்கள்: (படங்களை பெரிதாக காண படங்களின் மேல் க்ளிக் செய்யவும்)


1. Flip Card View


2. Mosaic View


3. Sidebar View

  
4. Snapshot View


5.Timeline View


உங்கள் ப்ளாக்கையும் இவ்வாறு காண வேண்டுமா?

Browser-ல் உங்கள் ப்ளாக் முகவரியுடன் /view என்பதனையும் சேர்த்து டைப் செய்யவும். உதாரணத்திற்கு,

http://bloggernanban.blogspot.com/view

இதற்கு நீங்கள் இரண்டு விசயங்களை செய்ய வேண்டும்:

1. Blogger Dashboard => Settings => Site Feed பக்கத்தில், Allow Blog Feeds என்பதில்None என்று இருக்க கூடாது. அப்படி இருந்தால் அதை மாற்றவும்.


2. Settings => Formatting பக்கத்தில் Enable Dynamic Views என்பதில் "Yes" என்பதை தேர்வு செய்திருக்க வேண்டும்.


இந்த வசதியை டெம்ப்ளேட்டாக நிரந்தரமாக வைக்கும் வசதியை (வழக்கம் போல) விரைவில் அறிமுகப்படுத்தப் போவதாக ப்ளாக்கர் தளம் கூறியுள்ளது.

இது பற்றிய முழு விவரம்: Fresh new perspectives for your blog




மீண்டும் மற்றுமொரு பதிவினூடாகச் சந்திக்கின்றேன்,,,,,,,,,,,,,,,,,,அன்புடன், WWW.HARIBABINFOWEB.CO.CC-ஹரி பாபு(HARI BABU).

பதிவர்களுக்கு பயனுள்ள 10 தளங்கள்



முஸ்கி 1: இரண்டுமாத இடைவெளிக்கு பிறகு நண்பர்கள் அனைவரையும் பதிவின் மூலம் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். நேரமின்மை காரணமாக என்னால் பதிவிட முடியாமல் இருந்தது. இப்பொழுதும் கொஞ்சம் பிஸியாக (!) தான் இருக்கிறேன். ஆனாலும் நமக்கிடையே உள்ள பிரிவு அதிகமாகக் கூடாது என்பதற்காகவும் , அப்படியே அலெக்ஸா ரேங்கில் (Alexa Rank) முன்னேறுவதற்காகவும்  இந்த பதிவு.

முஸ்கி 2: 
இதுவரை நான் பதிவிட்ட பதிவுகளும், இறைவன் நாடினால் இனி பதிவிடப் போகும் பதிவுகளும் எனது சொந்த படைப்புகள் அல்ல. ஆங்கில தளங்களில் உள்ளவற்றின் மொழிபெயர்ப்புகளே! ஆனால் அந்த தளங்களின் பெயர்களை குறிப்பிடாததற்கு காரணம், ஒரு பதிவை எழுத பத்துக்கும் மேற்பட்ட தளங்களை பார்த்து எழுதுகிறேன். அதனால் தளங்களை குறிப்பிடவில்லை. இந்த பதிவில் அந்த ஆங்கில தளங்களின் பட்டியலை வெளியிடுகிறேன். ப்ளாக்கர் தொழில்நுட்பம் தொடர்பாக பதிவெழுதும் அநேக பதிவர்கள் இதிலிருந்து தான் எழுதுகிறார்கள் என்பது எனது யூகம். அடுத்த பதிவெழுத இன்னும் நேரமாகும் என்பதால் அது வரை நண்பர்கள் இந்த ஆங்கில தளங்களை (விருப்பம் இருந்தால்..) படித்து பயன்பெறவும்.

பதிவர்களுக்கு பயனுள்ள 10 தளங்கள்:

1. http://www.dailyblogtips.com/

2. http://www.problogger.net/

3. http://www.bloggerbuster.com/

4. http://www.anshuldudeja.com/

5. http://www.blogdoctor.me/

6. http://www.abu-farhan.com/

7. http://www.bloggertipsandtricks.com/

8. http://www.newbloggingtipz.com/

9. http://www.blogspottutorial.com/

10. http://www.allblogtools.com/

குறிப்பு: இந்த அனைத்து தளங்களிலும் விளம்பரம் அதிகமாக இருக்கும். பார்த்துக் கொள்ளவும்.



மீண்டும் மற்றுமொரு பதிவினூடாகச் சந்திக்கின்றேன்,,,,,,,,,,,,,,,,,,அன்புடன், WWW.HARIBABINFOWEB.CO.CC-ஹரி பாபு(HARI BABU).

ப்ளாக்கரில் புதிய வசதி: Mobile Template



ப்ளாக்கர் தளம் நாளுக்கு நாள் புதிய வசதிகளை அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறது. தற்போது அது நமது வலைப்பதிவுகளை மொபைல்களில் பார்க்க வசதியாக Mobile Template- ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.




உலகமெங்கும் மொபைல்களில் இணையத்தை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மட்டும் தற்போது பன்னிரெண்டு மில்லியன் நபர்கள் மொபைல்களில் இணையத்தை பயன்படுத்துகிறார்கள் என்று ஒரு சர்வே கூறுகிறது(கொசுறு: அதில் நானும் ஒருவன்).

இதை மையப்படுத்தி வேர்ட்பிரஸ் தளம் ஆரம்பத்திலேயே மொபைல்களில் வலைப்பதிவுகளை பார்க்கும் வசதியை அளித்துள்ளது. ஆனால் ப்ளாக்கர் தளம் தற்போது தான் (இன்று தான் என நினைக்கிறேன்) இந்த வசதியை அளித்துள்ளது.

இந்த வசதியை செயல் படுத்த,

Blogger Dashboard => Settings => Email & Mobile பக்கத்திற்கு செல்லுங்கள்.



அந்த பக்கத்தில் Show Mobile Template என்ற இடத்தில் Yes என்பதை க்ளிக் செய்யவும்.

பிறகு Save Template என்பதை க்ளிக் செய்யவும்.

** Save செய்வதற்கு முன்னால், Mobile Preview என்பதை க்ளிக் செய்து மாதிரி பார்த்துக் கொள்ளலாம்.

இனி மொபைல்களில் உங்கள் ப்ளாக் பின்வருமாறு காட்சி அளிக்கும்.



என்ன கொடுமை சார் இது?

மன்னிக்கவும். வேறு பதிவு எழுத தொடங்கிய நான் இந்த வசதியை பார்த்ததும் "நாம் தான் முதலில் எழுத போகிறோம்" என்ற நினைப்பில் எழுதி முடித்துவிட்டேன். பிறகு மீண்டும் அந்த பக்கத்திற்கு சென்று பார்த்தால் அந்த வசதி இல்லை. காரணம் அது Beta Version (சோதனை ஓட்டம்). மீண்டும் அந்த வசதி கண்டிப்பாக (இறைவன் நாடினால்)வரும். அது வரை காத்திருக்கவும்( என்னை திட்டிக் கொண்டிருக்காமல்..).


டவுட்டு:


பிரபலங்களுக்கு புது படத்தோட preview show காட்டுற மாதிரி, எனக்கு ப்ளாக்கர் தளம் காட்டிருக்கோ..?


இப்பொழுது மீண்டும் இந்த வசதி வந்துள்ளது.இதைப் பற்றிய ப்ளாக்கரின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு:

New mobile templates for reading on the go

சும்மா  ஒரு தகவல்:

இதை பற்றி நான் பதிவிட்ட நாள்: 

December 17, 2010



மீண்டும் மற்றுமொரு பதிவினூடாகச் சந்திக்கின்றேன்,,,,,,,,,,,,,,,,,,அன்புடன், WWW.HARIBABINFOWEB.CO.CC-ஹரி பாபு(HARI BABU).