இனியவளே..!
உந்தன் கண்ணீரை சுமக்க..
என் கன்னத்திற்கு இடம் கொடு..!
உன் வலிகளை சுமக்க..
என் மார்பிற்கு இடம் கொடு..!
உன் உள்ளத்தை சுமக்க..
என் இதயத்திற்கு இடம் கொடு..!
உன் சோகத்தை சுமக்க
என் தேகத்திற்கு இடம் கொடு..!
உன் பாவங்களை சுமக்க..
என் பாதத்திற்கு இடம் கொடு..!
உன் உடலை சுமக்க..
என் உடலிற்கு இடம் கொடு..!
என்று சொன்னவனே..!
உன்னன்பு உண்மையென்று..
என்னை தந்ததற்கு..என்னுள்
இளைப்பாறி ஏமாற்றிச்சென்றாயே..?-என்
இதயம் இரவலென நினைத்தாயோ.?
அந்த இரவலுக்கு இணையாக..
இன்னொரு துணையை எனக்குள்
நீ கொடுத்தாயோ..?
இறைவா..!
இருவரின் தவறில் உதித்திட்ட ஒரு
உயிரின் பாவத்தின் கணக்கதினை
உரு கொடுக்கும் பெண்ணில் ஏன்
முழுவதுமே இணைத்தாய்..!
அத்தவறின் பிணக்குகளின் பாதியை
ஆணோடு பிணைத்திருக்ககூடாதா..?
ஆண்களும் அந்த அல்லல் சுமைதனை
அனுபவிக்கக் கூடாதா..?
மீண்டும் மற்றுமொரு பதிவினூடாகச் சந்திக்கின்றேன்,,,,,,,,,,,,,,,,,,அன்புடன், WWW.HARIBABINFOWEB.CO.CC-ஹரி பாபு(HARI BABU). நன்றி:
0 comments:
Post a Comment