பூத்திடும் மலர்கள் தோற்றிடும் வகையில்
புன்னகை செய்யாதே -நான்
பார்த்திடும் கணங்கள் பறித்திடும் வகையில்
மின்னல் ஆகாதே-யாழ்ப்
பாணத் தமிழில் வரைந்திடும் காதல்
கவிதை உனக்காக
ஏழாலை மண்ணின் பசுமைகள் சொல்லும்
உவமைகள் உனக்காக
நிலாவரை மிஞ்சும் எந்தன் காதல் ஆழம்
மாதகல் முரலாய் எந்தன் காதல் மின்னும் !
வரணிப் பானியிலேயான பனங்கட்டி -என்
உறக்கம் பாதியிலே பறித்தாய் நீ தட்டி
பிரயாணம் போகையிலே எனைக் கட்டி
வருமானம் தந்தாயே முத்தக் கட்டி
சுன்னாகத்து மின்சாரம் உன்னை கடன் கேட்கும்
சரசாலை மாம்பழத்தின் சுவை தோற்கும்!
காரைநகர் கடல் போயி காதல் செய்வோம் -எம்
ஈழத்து சிவன் கோவில் வரம் பெறுவோம்
மயிலிட்டி சுறா போல் குதிக்காதே -நாம்
ராஜா போய் வருவோம் முறைக்காதே
எழுத்துருவாக்கம்
கவிஞர் அகரமுதல்வன்
மீண்டும் மற்றுமொரு பதிவினூடாகச் சந்திக்கின்றேன்,
அன்புடன்,
ஹரி பாபு.








0 comments:
Post a Comment