பல இணைய தளங்களிலிருந்து சேகரித்தவைகளை பலருக்கும் பயனாக அமையும் என்ற நோக்கம் கருதி இந்த பிளாக்கில் பதிந்துள்ளேன் - உங்கள் அன்புக்குரிய "ஹரி பாபு".

Search This Blog

Saturday, April 14, 2012

ஹிஷாலியின் கவிதைச் சோலை


கல்யாண முத்திரையில்…!

என் சேமிப்புகள் எல்லாம்
செலவாகியது கவிதையின்
சிணுங்களில்….
படித்துவிட்டு பக்கம் பக்கமாய்
வட்டியிட்டு காட்டு
முத்தங்களில்…
அதை அசையும்
சொத்துகளாய் குவிப்போம்
வரவு செலவு வாழ்க்கையில்…
மீதத் தொகையில் மீண்டும்
தொடங்கிடுவோம்
காதல் காசோலையில் கையெப்பம்மிடும்
கல்யாண முத்திரையில்…!

என் மறு பக்கம்…!


என் ஊரு மதுரப் பக்கம்
எனக்குள்ளும் ஆயிரம் வெக்கம்
எனக்கில்லை காதல் பக்கம் – இருந்தும்
எழுந்துவிட்டேன் கவிதை சொர்க்கம்
பிறந்ததும் பாட்டியின் பக்கம்
பேர்வைத்தது பள்ளியின் பக்கம்
படித்துவிட்டேன் ஒழுக்கத்தின் பாக்கம் – இருந்தும்
பாரினிலே கண்ணீர் சொர்க்கம்
தந்தையோ மதுவின் பக்கம்
தாயோ தங்கையின் பக்கம்
தனிமையே வாழ்வின் பக்கம் – இருந்தும்
தன்னடக்கமே என் வயதின் சொர்க்கம்
கடந்துவிட்டேன் பூவின் பக்கம்
கல்யாணமோ தோல்வியின் பக்கம்
காலமோ முதுமையின் பக்கம் – இருந்தும்
கண்ணகியாய் சாவதே என் மூச்சின் சொர்க்கம்

லைலா மஜ்னுவைவிட…!


உன்னிடம்
நான் இருக்கேனா என்றும்
என்னிடம்
நீ இருக்கிறாயா என்று
சோதிப்பதிலே
நம் காதல் சாதிக்கிறது
லைலா மஜ்னுவைவிட…!

கற்றுக்கொள்ள…!


எப்படியும்
நீ சொல்லமாட்டாய்
அப்படியும்
உன்னுடன் சேர்ந்து
ஒவ்வொரு நொடியிலும்
வாழ்கிறேன்
காதல் முகவரியை
கற்றுக்கொள்ள…!

எப்படி வந்தது காதல்…!


    கிளைக்கும் இலைக்கும்
    காதல் வந்தது பறவையால்
    மலருக்கும் மணத்திற்கும்
    காதல் வந்தது சூரியனால்
    பசிக்கும் உணவுக்கும்
    காதல் வந்தது மனிதனால்
    இன்பத்திற்கும் துன்பத்திற்கும்
    காதல் வந்தது இறைவனால்
    பணத்திற்கும் தங்கத்திற்கும்
    காதல் வந்தது ஆசையினால்
    உனக்கும் எனக்கும் காதல்
    வந்தது உயிரணுக்களால் பெண்ணே

உண்மை காதலின் நிலவரம்…!


பேசிய இரவுகளை விட
உன்னுடன்
பேசாத இரவுகளை தான்
அதிகம் விருபுகிறேன்
ஏன் தெரியுமா ?
பேசும் போது
காதல் கோவிலாகிறது
காமம் தீபமாகிறது
பேசாத போது
காதல் காமமாகிறது
காமம் கவிதையாகிறது

என் தோழியே …!



கண்ணீர் சிந்துங்கள்…!


இன்று இதயம் பறித்தவன் எங்கோ
இடம் பெயர்க்கிறான் – அவன்
எண்ணிய கனவுகளை இனிதே
நிறைவேற்ற…
உறவுகளே வாருங்கள்
ராபீக் அண்ணாவின் உன்னது
ஆத்மா உயிர்ப்பிக்க ஒரு துளி
கண்ணீர் சிந்துங்கள்…!





மீண்டும் மற்றுமொரு பதிவினூடாகச் சந்திக்கின்றேன்,,,,,,,,,,,,,,,,,,அன்புடன், WWW.HARIBABINFOWEB.CO.CC-ஹரி பாபு(HARI BABU).

0 comments: