பல இணைய தளங்களிலிருந்து சேகரித்தவைகளை பலருக்கும் பயனாக அமையும் என்ற நோக்கம் கருதி இந்த பிளாக்கில் பதிந்துள்ளேன் - உங்கள் அன்புக்குரிய "ஹரி பாபு".

Search This Blog

Friday, April 6, 2012

நான் ராசா அவள் ராணி



இது 
அழைக்கபடாத விருந்தாளி!
நான் அரவணைத்து கொண்ட 
குழந்தை,
என்னை கவிஞன் ஆக்கிய  
ஆன்மா ....
காதல் காதல் காதல் !

தேவதைகள் ஆயிரம் 
தெருவிறங்கி வந்தாலும் 
மனம் ஓடாது அவளை விட்டு 
ஆதலினால் 
காதல் கொள்கை வெல்லும் !

அழுக்காக்கபட்ட எனது -ஆடைகள் 
அவள் பார்வையிலே 
சலவை செய்யப்படும்  
ஆதலினால் 
காதல் சலவை செய்யும் !

பூங்காவில் பூக்களுக்கு 
பட்டாம்பூச்சிகள் முத்தம் கொடுக்கும் 
போதெல்லாம்-என் 
உதடுகளுக்கு பசியெடுக்கும் 
ஆதலினால் 
காதல் பட்டினி செய்யும் !

பங்குனி வெயில் படை எடுத்தாலும் 
சுடுவது இல்லை எம்மை 
ஆதலினால் 
காதல் குளிர்மை கொள்ளும் !

எத்தனை தடவைகள் 
சண்டை போட்டாலும் 
ரத்தம் காண்பதில்லை 
ஆதலினால் 
காதல் புனிதம் செய்யும் !

தென்றல் வீசும் தருணங்களில் 
புனிதம் வேறு 
முகம் பெறும் ,
உதடுகள் பசி தீர்க்கும்,
மொட்டுக்கள் பூவாகும் ,
உதடுகள் உரசவென்று காதல் தவம் 
கிடக்கும் !
ஆதலினால் 
காதல் பூகம்பத்தை உண்டு பண்ணும் பூ 

நான் ராசா 
அவள் ராணியென
காதல் கொள்கை கொண்டு 
காதல் ராஜாங்கம் 
செய்து கொள்கிறோம் !
எழுத்துருவாக்கம் 
கவிஞர் அகரமுதல்வன் 




மீண்டும் மற்றுமொரு பதிவினூடாகச் சந்திக்கின்றேன், 
அன்புடன், 
ஹரி பாபு.

0 comments: