| http://haribabuwebinfo.blogspot.in/ |
நீர் நிரப்பிவைத்த
மேக நீர்த்தேக்கங்களில்
எங்கோ உடைப்பு ஏற்பட்டதென
முரசறைந்து சொல்லப்பட்டன
ஹோவென்ற சத்தத்துடன்
ஒரு அடர் மழையாய்...
இரு கை கொண்டு
உடைப்பை அடைத்ததாய்
சொல்லப்படும் குழந்தைப்பிராய
கதைகளை மறந்துவிட்ட
பள்ளிக்கூட பட்டாம்பூச்சிகள்
ஓடி ஒதுங்கினர்
கிடைத்த இடங்களில்...
களவாடிய நீரை
சிந்திச் சிதறி
எடுத்துச்செல்லும்
குடி நீர் ஊர்தியில்
அவ்வப்போது குளிக்கும்
வாய்ப்பு பெரும்
இந்த கறிய ஒழுங்கைகள்
மழை நீரில் முங்கி
மூச்சுப் பயிற்சி
செய்திருந்தன...
வானம் பார்த்து
வாய் பிளந்து கிடந்த
குழிமேல் மேடையமைத்து
சுழன்று சுழன்று
நடனம் ஆடுகின்றன
நீர்த்திவலைகள் ஒன்று கூடி...
கூரை விளிம்புகளில்
கூடி நின்ற மழைத்துளிகள்
ஒவ்வொன்றாய்,
தேங்கிக் கிடந்த
மழை நீரில்
குதித்து விளையாடின
சொட்டு சொட்டாய்...
- ராம்ப்ரசாத் சென்னை
மீண்டும் மற்றுமொரு பதிவினூடாகச் சந்திக்கின்றேன்,,,,,,,,,,,,,,,,,,அன்புடன்,
WWW.HARIBABINFOWEB.CO.CC-ஹரி பாபு(HARI BABU).மேக நீர்த்தேக்கங்களில்
எங்கோ உடைப்பு ஏற்பட்டதென
முரசறைந்து சொல்லப்பட்டன
ஹோவென்ற சத்தத்துடன்
ஒரு அடர் மழையாய்...
இரு கை கொண்டு
உடைப்பை அடைத்ததாய்
சொல்லப்படும் குழந்தைப்பிராய
கதைகளை மறந்துவிட்ட
பள்ளிக்கூட பட்டாம்பூச்சிகள்
ஓடி ஒதுங்கினர்
கிடைத்த இடங்களில்...
களவாடிய நீரை
சிந்திச் சிதறி
எடுத்துச்செல்லும்
குடி நீர் ஊர்தியில்
அவ்வப்போது குளிக்கும்
வாய்ப்பு பெரும்
இந்த கறிய ஒழுங்கைகள்
மழை நீரில் முங்கி
மூச்சுப் பயிற்சி
செய்திருந்தன...
வானம் பார்த்து
வாய் பிளந்து கிடந்த
குழிமேல் மேடையமைத்து
சுழன்று சுழன்று
நடனம் ஆடுகின்றன
நீர்த்திவலைகள் ஒன்று கூடி...
கூரை விளிம்புகளில்
கூடி நின்ற மழைத்துளிகள்
ஒவ்வொன்றாய்,
தேங்கிக் கிடந்த
மழை நீரில்
குதித்து விளையாடின
சொட்டு சொட்டாய்...
- ராம்ப்ரசாத் சென்னை








0 comments:
Post a Comment