பல இணைய தளங்களிலிருந்து சேகரித்தவைகளை பலருக்கும் பயனாக அமையும் என்ற நோக்கம் கருதி இந்த பிளாக்கில் பதிந்துள்ளேன் - உங்கள் அன்புக்குரிய "ஹரி பாபு".

Search This Blog

Saturday, April 14, 2012

என்னவள் ஒரு தேவதை

பால்கனி சுவற்றில்
வெட்சி மலர் போல்‌
உன் விரல்க‌ளை
பூக்க‌ விட்டு நிற்கிறாய்...

உன்னருகே வந்து
உன் இதழ் பிரியும்
அத்தனை வார்த்தைகளையும்
என் செவிகளில் 
ஒன்று சேர்த்து நிற்கிறேன்...

ம‌ல‌ர் தாவும் வ‌ண்டாய்
என் விர‌ல்க‌ள் சுவ‌ற்றில்
பூத்த‌ உன் விர‌ல்க‌ளில்
வ‌ந்த‌ம‌ர‌ முய‌ல‌,
அதை முன்பே எதிர்பார்த்த‌வ‌ளாய்
கூட்டுக்குள் அடைந்த‌ ந‌த்தைபோல்
உன் விர‌ல்க‌ளை
இழுத்துக்கொண்டு 
எதிர்திசையில் நிலாமுகம் திருப்பி
இத‌ழோர‌ம் மெல்லிய‌
புன்ன‌கையை த‌வ‌ழ‌ விடுகிறாய்...


நீ த‌வ‌ழ‌ விட்ட‌
பொன்ன‌கையில் 
ம‌றைந்து நின்ற 
ஊடல் முத்துக்களை ரசித்தவாறே
என் இத‌ழ் த‌வறிச்
சிந்திய‌ ந‌முட்டுச்சிரிப்பை
சேக‌ரித்துக்கொண்டிருந்தேன்
நினைவ‌டுக்குக‌ளில்...


- ராம்ப்ரசாத் சென்னை





மீண்டும் மற்றுமொரு பதிவினூடாகச் சந்திக்கின்றேன்,,,,,,,,,,,,,,,,,,அன்புடன், WWW.HARIBABINFOWEB.CO.CC-ஹரி பாபு(HARI BABU).

0 comments: