பல இணைய தளங்களிலிருந்து சேகரித்தவைகளை பலருக்கும் பயனாக அமையும் என்ற நோக்கம் கருதி இந்த பிளாக்கில் பதிந்துள்ளேன் - உங்கள் அன்புக்குரிய "ஹரி பாபு".

Search This Blog

Thursday, March 20, 2014

பதிவுகளை காப்பி அடிப்பதை தடுக்க



இணையத்தின் வளர்ச்சி காரணமாக கிட்டத்தட்ட அனைத்து விசயங்களும் எளிதாகிவிட்டன. நம்முடைய கருத்துக்களை மற்றவர்களிடம் பகிர்வதும் எளிதாகிவிட்டது. அதே சமயம் மற்றவர்கள் பகிர்ந்தவற்றை காப்பி அடிப்பது அல்லது காப்பி செய்வதும் எளிதாகிவிட்டது. தற்போது பல பதிவர்களுக்கு வருத்தத்தை கொடுப்பது பதிவு திருட்டு.

ஒரு பதிவை பகிர்வதற்கும், திருடுவதற்கும் ஒரே வித்தியாசம் தான். பதிவின் எழுத்தாளரிடம் அனுமதி பெற்று பகிர்ந்தால் அது பகிர்வு. அனுமதி இல்லாமலும், எழுதியவரின் பெயரை, ப்ளாக்கை குறிப்பிடாமலும் பகிர்ந்தால் அது திருட்டு. தற்போது இணையத்தின் வளர்ச்சிக் காரணமாக நமது பதிவுகள் Copy செய்யப்படுவதை முற்றிலுமாக தடுக்க இயலாது. ஆனால், அதை தடுப்பதற்கு சில வழிகளை செய்யலாம். அதில் ஒன்று, நமது பதிவுகள் காப்பி அடிக்கப்படுவதை தடுக்க,Copy செய்யும் முறையை முடக்க வேண்டும்(Disable Copy and Paste).

அவ்வாறு செய்ய:

1. முதலில் Blogger Dashboard => Template => Backup/Restore Template என்ற பகுதிக்கு சென்று, Download Full Template என்பதை க்ளிக் செய்து உங்கள் டெம்ப்ளேட்டை பேக்கப் எடுத்துக் கொள்ளுங்கள்.


2. பிறகு அதே பக்கத்தில் Edit Html பகுதிக்கு சென்று, அங்கு

<body>
என்ற Code-ஐ தேடி, அதனை பின்வருமாறு மாற்றவும். 
<body bgcolor="#FFFFFF" ondragstart="return false" onselectstart="return false">



3. பிறகு Save Template என்பதை க்ளிக் செய்யவும்.


குறிப்பு: சில டெம்ப்ளேட்களில் Body Tag-ல் வேறு சிலவும் சேர்ந்திருக்கும்.
 உதாரணத்திற்கு, 
<body expr:class='&quot;loading&quot; + data:blog.mobileClass'>

அது போன்று இருந்தால், அந்த code-ல் இறுதியில் > என்பதற்கு முன் ஒரு இடைவெளி விட்டு 
bgcolor="#FFFFFF" ondragstart="return false" onselectstart="return false"
என்பதை சேர்க்கவும்.


குறைகள்: இப்படி செய்வதால், வாசகர்கள் பதிவில் நாம் சொன்னதை மேற்கோள் காட்டவும் காப்பி செய்ய முடியாது. :( :( :(

ஆனாலும் , நமது பதிவுகள் காப்பி செய்யப்படுவதற்கு பல்வேறு வழிகள் இருக்கின்றன. அவற்றை சொல்ல எனக்கு விருப்பமில்லை.


Reference: http://www.hypergurl.com/




இன்றைய இணையம்:

1. ஹாரிபாட்டர் ரசிகர்களுக்காக Pottermore என்ற இணையதளம் வரும் அக்டோபர் மாதம் முதல் தொடங்க இருக்கிறது. அதற்கு முன் சிலருக்கு மட்டும் இந்த மாதத்திலேயே பார்க்கும் வசதியை அளிக்கிறது. கடந்த 31-ஆம் தேதி முதல், வரும் ஆகஸ்ட் ஆறாம் தேதி வரை தினமும், சில நேரங்கள் மட்டும் கேள்வி கேட்கும். அதற்கான சரியான பதில் அளித்தால் அதன் மூலம் கணக்கு தொடங்கி பார்க்கலாம். வாய்ப்பு கிடைக்காதவர்கள் அக்டோபர் மாதம் வரை காத்திருக்கவும். 

தள முகவரி: http://www.pottermore.com/

2. கூகிளின் புதிய இயங்குதளமான Chrome OS-ல் நமது கணக்குகள் ஹேக் செய்யப்படும் வாய்ப்புகள் இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.


மீண்டும் மற்றுமொரு பதிவினூடாகச் சந்திக்கின்றேன்,,,,,,,,,,,,,,,,,,அன்புடன், WWW.HARIBABINFOWEB.CO.CC-ஹரி பாபு(HARI BABU).

0 comments: