HAIR BABU |
மாணவர்களிடம் ஆபாசமாகப் பேசுவதாகக் கூறி ஆசிரியை ஒருவரை நிரந்தரப் பணி நீக்கம் செய்யக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம் நாகலூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அறிவியல் ஆசிரியையாக பணியாற்றும் ஒருவர், பாடம் நடத்தும்போது மாணவர்களிடம் பாலியல் ரீதியான எண்ணங்களை தூண்டும் வகையில் ஆபாசக் கதைகள் கூறுவதாகவும், சாப்பிட்ட எச்சில் தட்டை மாணவிகளை கழுவச் சொல்வதாகவும் முறையிடப்பட்டது.
இதுபற்றி கல்வித்துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி அந்த ஆசிரியையை இடமாற்றம் செய்தனர்.இந்நிலையில் சம்பந்தப்பட்ட ஆசிரியையை நிரந்தரப் பணி நீக்கம் (டிஸ்மிஸ்) செய்ய வலியுறுத்தி, பெற்றோர் ஆசிரியர் கழகம், அனைத்து கட்சியினர், பொதுமக்கள் சார்பில் நேற்று மாலை கீழ்வேளூர் உதவி தொடக்க கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஊராட்சி தலைவர் பாப்பி தண்டாயுதபாணி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பிரபாகரன், வார்டு உறுப்பினர் மலர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி,கீழ்வேளூர் வட்டார தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டார தலைவர் சுப்பரமணியம் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் வட்டார மகளிர் அணி செயலாளர் முத்தமிழ் செல்வி, மாநில பொதுக்குழு உறுப்பினர் வைத்தியநாதன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மீண்டும் மற்றுமொரு பதிவினூடாகச் சந்திக்கின்றேன்,,,,,,,,,,,,,,,,,,அன்புடன், WWW.HARIBABINFOWEB.CO.CC-ஹரி பாபு(HARI BABU).
0 comments:
Post a Comment