பல இணைய தளங்களிலிருந்து சேகரித்தவைகளை பலருக்கும் பயனாக அமையும் என்ற நோக்கம் கருதி இந்த பிளாக்கில் பதிந்துள்ளேன் - உங்கள் அன்புக்குரிய "ஹரி பாபு".

Search This Blog

Thursday, April 12, 2012

இனிய தமிழ் புத்தாண்டு






நட்புக்கள் அனைவரும் மனம் முழுதும் மகிழ்ச்சி பொங்க நலமுடனும் வளமுடனும், வாழ இனிய தமிழ் புத்தாண்டு , மற்றும் சித்திரைத்திருநாள் வாழ்த்துக்கள்.



நம்மை மகிழ்விக்கும் தமிழுக்கு நன்றியோடு...தமிழுக்கு மட்டுமே சொந்தமான...நாம் மறந்து போன சில பழமொழிகள்...



உப்பிட்டவரை உள்ளளவும் நினை.

***

அன்னம் இட்டாரைக்கன்னம் இடலாமா.

***

மலை அத்தனை சுவாமிக்கு கடுகு அத்தனை கர்ப்பூரம்.

***

இட்ட வீட்டுக்கு பிட்டிட்டுக்கொண்டு,இடிந்த வீட்டுக்கு மண்ணிட்டுக்கொண்டு திரிகிறது போல.

***

இறைக்க இறைக்க கிணறு சுரக்கும்.

***

பானையிலே பதக்கு நெல் இருந்தால் மூலையிலே முக்குறுணி தெய்வம் கூத்தாடும்.

***

உற்ற சிநேகிதன் உயிருக்கு அமிர்தம்.

***

சொறிந்து தேய்க்காத எண்ணெய்யும் பரிந்து இடாத சோறும் பாழ்.



மீண்டும் என் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்..


மீண்டும் மற்றுமொரு பதிவினூடாகச் சந்திக்கின்றேன்,,,,,,,,,,,,,,,,,,அன்புடன்,WWW.HARIBABINFOWEB.CO.CC-ஹரி பாபு(HARI BABU).

0 comments: