பல இணைய தளங்களிலிருந்து சேகரித்தவைகளை பலருக்கும் பயனாக அமையும் என்ற நோக்கம் கருதி இந்த பிளாக்கில் பதிந்துள்ளேன் - உங்கள் அன்புக்குரிய "ஹரி பாபு".

Search This Blog

Friday, April 6, 2012

அப்பிளுக்கு மறுபடியும் பதிலடி கொடுக்குமா கூகுள்


அப்பிளுக்கு சளைக்காமல் போட்டியளித்து வரும் நிறுவனங்களில் ஒன்றே கூகுளாகும். ஒரு காலத்தில் இவ்விரு நிறுவனங்களும் வெவ்வேறு தளத்தில் பயணித்துக்கொண்டிருந்தன.
அப்பிள் தனது ஐ பொட், மெக் கணனிகள் என தொழில்நுட்ப உலகில் தனிப் புரட்சியை ஏற்படுத்திக்கொண்டிருந்தது. கூகுள் தனது தேடல்பொறி மற்றும் சமூக வலையமைப்பு என இணையத்தில் புதுமைகளைப் புகுத்திக்கொண்டிருந்தது. எனினும் பின்னர் இந்நிறுவனங்களுக்கிடையில் பனிப் போர் நடக்கத்தொடங்கியது. அப்பிளின் ஐ.ஓ.எஸ் இயங்குதளத்திற்கு போட்டியாக அண்ட்ரோய்ட் எனும் தற்போது உலகையே கலக்கிக்கொண்டிருக்கும் இயங்குதளத்தினை வெளியிட்டது. இது அப்பிளைப் பெரிதும் பாதித்தது.
மறைந்த அப்பிள் நிறுவன ஸ்தாபகர் ஸ்டீவ் ஜொப்ஸ் தனது முழு சொத்தினையும் இழந்தாவது கூகுளுடன் போராடப்போவதாகவும், அண்ட்ரோய்ட் ஐ.ஓ.எஸ். இலிருந்து தயாரிக்கப்பட்ட திருட்டுத் தயாரிப்பு எனவும் சாடியமையானது இதற்கு சிறந்ததொரு எடுத்துக்காட்டு.
பின்னர் அப்பிளின் ஐ போனுக்கு போட்டியளிக்கும் வகையில் செம்சுங் நிறுவனத்துடன் இணைந்து கூகுள் நெக்ஸஸ் ஸ்மார்ட் போன்களைத் தயாரிக்கத்தொடங்கியது. இவ்வாறு அப்பிளுக்கு தகுந்த பதிலடி கொடுப்பதில் கூகுளுக்கு நிகர் கூகுளே. இந்நிலையில் அப்பிள் அண்மையில் புதிய ஐ பேட் இனை அறிமுகப்படுத்தியது. உலகில் அதிகம் விற்பனையாகும் டெப்லட்கள் அப்பிளின் ஐ பேட் ஆகும்.
இதனை நன்கு அறிந்து வைத்துள்ள கூகுள் எசுஸ் நிறுவனத்துடன் இணைந்து டெப்லட் ஒன்றினை அறிமுகப்படுத்தவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஐ பேட் உடன் ஒப்பிடும் போது குறைந்த விலையில் இதனை சந்தைப்படுத்தவுள்ளதாகத் தெரியவருகின்றது. மேலும் 7 அங்குலத் திரையை இது கொண்டிருக்குமெனவும் தகவல் கசிந்துள்ளது.
இதேவேளை அப்பிளும் குறைந்த விலையில் ஐ பேட் மினி என்ற பெயரில் சிறிய டெப்லட்களை அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இத் தகவல்களின் உண்மைத் தன்மை தொடர்பில் சற்றுப் பொறுத்திருந்து தான் தெரிந்துகொள்ள வேண்டும். எவ்வாறாயினும் குறைந்த விலையில் டெப்லட்கள் வெளியாகுமாயின் அதனால் நன்மையடையப் போவது 3 ஆந் தரச் சந்தைப் பாவனையாளர்களே!



மீண்டும் மற்றுமொரு பதிவினூடாகச் சந்திக்கின்றேன், அன்புடன், ஹரி பாபு.

0 comments: