பல இணைய தளங்களிலிருந்து சேகரித்தவைகளை பலருக்கும் பயனாக அமையும் என்ற நோக்கம் கருதி இந்த பிளாக்கில் பதிந்துள்ளேன் - உங்கள் அன்புக்குரிய "ஹரி பாபு".

Search This Blog

தமிழன் வலைதளம்

தமிழுக்கும் அமுதென்று பேர் அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்உயிருக்கு நேர்!

தமிழன் வலைதளம்

தமிழுக்கும் அமுதென்று பேர் அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்உயிருக்கு நேர்!

தமிழன் வலைதளம்

தமிழுக்கும் அமுதென்று பேர் அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்உயிருக்கு நேர்!

தமிழன் வலைதளம்

தமிழுக்கும் அமுதென்று பேர் அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்உயிருக்கு நேர்!

தமிழன் வலைதளம்

தமிழுக்கும் அமுதென்று பேர் அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்உயிருக்கு நேர்!

Saturday, January 14, 2023

My Business Card

மீண்டும் மற்றுமொரு பதிவினூடாகச் சந்திக்கின்றேன்,,,,,,,,,,,,,,,,,,அன்புடன்,www.haribabuwebinfo.blogspot.in-ஹரி பாபு(HARI BABU). நன்றி:

Tuesday, June 30, 2020

அலுவலக பணியாளர்களுக்கு அறிய வாய்ப்பு ! எக்சல் கோப்பின் மூலம் பேஸ்புக்கை பயன்படுத்தலாம்!!



ஃபேஸ்புக் (Facebook) பிரபல சமூக வலைத்தளமாக இருப்பதால் பல அலுவலகங்கள், பள்ளி கல்லூரிகள், நிறுவனங்களில் தடை செய்யப்பட்டுள்ளது. ஏனெனில் பலரும் அதிக நேரத்தை அதிலேயே செலவிடுவதால் வேலை பாதிப்பு ஏற்படுகிறது. ஆனாலும் பேஸ்புக் பயன்படுத்துவோர் விடுவதாக இல்லை. இதன் மூலம் MS-Excel இல் பேஸ்புக்கை பயன்படுத்தலாம்.


நீங்கள் வேலை பார்க்கும் இடங்களில் தெரியாமல் பேஸ்புக் பயன்படுத்தவும் மற்றவர்களுக்குப் பார்த்தாலும் கண்டறிய முடியாத வசதியை Hardlywork.in எனும் தளம் தருகிறது. இது தோற்றத்தில் ஒரு எக்சல் ஷீட்டில் (MS-Excel Sheet) வேலை செய்வது போன்று காட்சியளிக்கும். ஆனால் இதில் உங்கள் Facebook NewsFeed, Wall, Messages, Likes, Comments என அனைத்தையும் எக்சல் ஷீட்டிலேயே பார்த்துக் கொள்ளலாம்.


முதலில் Hardlywork தளத்திற்குச் சென்று ” Gimme dem spreadsheets” என்ற பட்டனைக் கிளிக் செய்யவும். பின்னர் உங்கள் Facebook ஐடி / பாஸ்வேர்டு கொடுத்து Login செய்யவும்.


அடுத்து உங்கள் பேஸ்புக் ப்ரோபைலை இந்த தளம் பயன்படுத்த அனுமதி கேட்கும். Okay பட்டனைக் கிளிக் செய்யுங்கள். இப்போது எக்சல் ஷீட் போன்று தளத்தில் தோன்றும். இதனைப் பயன்படுத்தும் முறைகளைப் பார்ப்போம்.


1. மூன்று வகையான Themes உள்ளன. (Mac,Excel 2003 and Excel 2007)

2. நண்பர்களைத் தேட Excel Functions bar இல் அடித்துத் தேடலாம்.
3. உங்களுக்கு வரும் Notification / செய்திகளைக் கிளிக் செய்து பார்க்கலாம்.
4. Load More பட்டன் மூலம் பழைய செய்திகளைப் பார்க்கலாம்.
5. Hover வசதி - செய்திகளுக்கு அருகில் மவுசை வைத்தால் அதிலிருக்கும் படங்கள் / வீடியோக்களை Preview பார்க்கலாம். Likes and Comments எண்களின் அருகே மவுசைக் கொண்டு சென்றால் யாரெல்லாம் செய்திருக்கிறார்கள் என்று பார்க்கலாம்.
6. இது தான் முக்கியமான செயல். யாராவது தீடிரென்று வந்து விட்டால் Space Bar ஐத்தட்டுங்கள். சாதாரண எண்கள், கணக்குகள் நிறைந்த எக்சல் பைலாக தளம் மாறிவிடும்.
7. இந்தத் தளத்திலிருந்து Logout செய்யப் பயன்படும்.

இணையதள முகவரி : http://hardlywork.in/
மீபதிவினூடாகச் சந்திக்கின்றேன்,,,,,,,,,,,,,,,,,,அன்புடன்,www.haribabuwebinfo.blogspot.in-ஹரி பாபு(HARI BABU). நன்றி:

ரௌட்டர் (Router) பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!!





ரௌட்டர் சாதனத்தைப் பயன்படுத்துவதன் மூலம், நமக்கு வழங்கப்படும் இணைய தொடர்பினைப் பலர் ஒரே நேரத்தில் பயன்படுத்தலாம். இணையத்துடன் இணைந்து கொள்ள நமக்கு ஒரு இணைய முகவரி (IP address) தேவை.


நம் வீடுகளைப் போல, ஒவ்வொரு இணைய முகவரியும் ஒன்றுக்கொன்று வேறுபாடாக இருக்கும், இருக்க வேண்டும். ஒரு ரௌட்டர், உங்கள் இணைய சேவை நிறுவனத்தால் வழங்கப்படும் பொதுவான தனி முகவரி கொண்டு உங்கள் மோடத்துடன் இணைப்பை ஏற்படுத்துகிறது. அதன் பின்னர், இந்த ரௌட்டர் அதனுடன் இணைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு சாதனத்திற்கும் தனியான முகவரி ஒன்றைத் தருகிறது. இதன் மூலம் ஒவ்வொரு சாதனமும் இணைய இணைப்பினைப் பெறுகிறது.


பொதுவாக, ரௌட்டர் ஒன்றில் அதனை வயர் மூலம் மற்ற சாதனங்களுடன் இணைப்பதற்கு நான்கு போர்ட்கள் (4 Ethernet ports) தரப்பட்டிருக்கும். இந்த ரௌட்டர் வயர்லெஸ் ரௌட்டராக இருக்கும் பட்சத்தில், கூடுதலாக பல வயர்லெஸ் சாதனங்களை இணைக்கலாம். இதன் மூலம் உங்கள் வீட்டில் உள்ள அனைத்து சாதனங்களையும் இணையத்துடன் தனித்தனியே இணைக்கலாம்.


ஆனால், இணைய சேவை நிறுவனம் தரும் ஒரே ஒரு இணைய சேவை முகவரி மட்டுமே பயன்படுத்தப்படும். இதனால் ரௌட்டர் மூலம் பல சாதனங்களுக்கிடையே இணைய சேவை பகிர்ந்து கொள்ளப்படுகிறது. ஒவ்வொரு சாதனத்தையும் ரௌட்டர் வழியே இணைத்த பின்னர், http://www.whati smyip.com/ என்ற முகவரிக்குச் சென்றால், உங்களுடைய ஐ.பி. முகவரி கிடைக்கும். இவற்றிலிருந்து எப்படி உங்களுடைய இணைய சேவை பகிர்ந்து கொள்ளப்படுகிறது என்பதனை உணர்ந்து கொள்ளலாம். லோக்கல் ஐ.பி. முகவரி வெவ்வேறாக இருக்கும். ஒவ்வொரு சாதனமும் ஒவ்வொன்றைக் காட்டும்.


ரௌட்டர் சாதனம் கூடுதல் பாதுகாப்பினையும் அளிக்கிறது. ஒவ்வொரு சாதனத்திற்கும் உங்கள் ரௌட்டர் தனி ஐ.பி. முகவரியினை அமைத்துத் தருகிறது. ஆனால், வெளியே இருந்து உங்கள் கம்ப்யூட்டர் இணைப்பினைப் பார்ப்பவர்கள், இணைய சேவை நிறுவனம் வழங்கும் பொதுவான ஐ.பி. முகவரியை மட்டுமே அறியமுடியும். இதனால், இணைய இணைப்பு பெற்ற மற்ற சாதனங்களின் முகவரிகளை யாரும் எளிதில் அறிந்து கொள்ள முடியாது.


ஒரு ரௌட்டர் ஹார்ட்வேர் பயர்வால் போலவும் செயல்படுகிறது. இதன் மூலம் வெளியிலிருந்து நம் கம்ப்யூட்டருக்கு வரும் கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்களான மால்வேர் மற்றும் வைரஸ் ஆகியவற்றிற்கு எதிரான முதல் பாதுகாப்பு அரண் வழங்கப்படுகிறது. சில ரௌட்டர்களில், இது போன்ற பயர்வால் பாதுகாப்பு வழங்கும் சாப்ட்வேர் புரோகிராம்கள் பதிந்தே வழங்கப்படுகின்றன. சிலவற்றில் மேலும் பல பாதுகாப்பு வசதிகளும் தரப்படுகின்றன. குறிப்பாக, சிறுவர்களை இணையத்தில் பாதுகாக்க, பெற்றோர்கள் பயன்படுத்தக் கூடிய பாதுகாப்பு புரோகிராம்களும் கிடைக்கின்றன.


மோடம் செயல்பாட்டினை அனைத்து ரௌட்டர்களும் கொண்டிருக்காது. ஒரு ரௌட்டர் தானாக இணைய இணைப்பினைத் தராது. ஒரு ரௌட்டர் அது ரௌட்டராகவும் மோடமாகவும் செயல்படும் என அதனைத் தயாரித்த நிறுவனம் அறிவிக்காதவரை, ரௌட்டரை மோடம் ஒன்றுடன் இணைத்தே நாம் இணைய இணைப்பினைப் பெற முடியும். இணைய இணைப்பினை வழங்கும் நிறுவனங்கள் நமக்கு மோடம் சாதனம் ஒன்றினை வழங்குகின்றன. எனவே, அதனுடன் இணைக்கலாம். ஆனால், மோடமாகவும் ரௌட்டராகவும் இயங்கும் ரௌட்டர் இருப்பின், அதில் நேரடியாக, இணைய சேவை நிறுவனத்தின் தொடர்பை இணைத்து இணைய இணைப்பினைப் பெற்றுப் பயன்படுத்தலாம்.


ஒரு சிலர், இணைய சேவை நிறுவனங்களிடம் மோடத்தினை வாடகைக்குப் பெறலாமா அல்லது விலைக்கு வாங்கிப் பயன்படுத்தலாமா என்று கேட்கின்றனர். நல்ல மோடம் அல்லது ரௌட்டர்கள் பழுதடைந்து இயங்காமல் இருப்பதில்லை. எனவே ஒன்றினை, குறிப்பாக ரௌட்டர் மற்றும் மோடம் இணைந்த சாதனம் ஒன்றை விலைக்கு வாங்கிப் பயன்படுத்துவதே நல்லது. இணைய இணைப்பு என்பது நம் அன்றாட வாழ்வில் ஒன்றாக இணைந்துவிட்ட நிலையில், ஏன் வீணாக வாடகைக்கு மோடத்தினைப் பெற வேண்டும். அப்படி ஒன்றை வாங்கும் முன், அந்த மோடம், நீங்கள் இணைப்பு பெறும் இணைய சேவை நிறுவனத்தின் சேவையுடன் இணைந்து செயல்படுமா என்பதனை அறிந்து உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.


மீண்டும் மற்றுமொரு பதிவினூடாகச் சந்திக்கின்றேன்,,,,,,,,,,,,,,,,,,அன்புடன்,www.haribabuwebinfo.blogspot.in-ஹரி பாபு(HARI BABU). நன்றி:

Monday, June 8, 2020

உங்கள் Android இன் திரையை பிசிக்கு எவ்வாறு பிரதிபலிப்பது


உங்கள் ஆண்ட்ராய்டு தொலைபேசியின் காட்சியை உங்கள் கணினியில் பிரதிபலிப்பது மைக்ரோசாப்டின் உங்கள் தொலைபேசி அம்சத்திற்கு ஒப்பீட்டளவில் எளிதான நன்றி ஆகிவிட்டது, இது உலகளாவிய நகல்-பேஸ்ட் மற்றும் பிரதிபலிப்பு அறிவிப்புகள் உட்பட பலவற்றைச் செய்ய உங்களை அனுமதிக்கிறது. இருப்பினும், உங்கள் தொலைபேசி பயன்பாட்டின் சிக்கல் என்னவென்றால், இது சற்று தரமற்றது மற்றும் சில நேரங்களில் நோக்கம் கொண்டதாக செயல்படாது. இது தேர்ந்தெடுக்கப்பட்ட சாம்சங் சாதனங்களுடன் மட்டுமே இயங்குகிறது, இது பிற பிரபலமான ஆண்ட்ராய்டு சாதனங்களை ஒதுக்கி வைக்கிறது. நீங்கள் சாம்சங்கிலிருந்து ஒரு Android தொலைபேசியை வைத்திருக்கவில்லை மற்றும் அதன் காட்சியை உங்கள் கணினியில் பிரதிபலிக்க விரும்பினால், இந்த வழிகாட்டியைப் பின்பற்றவும்.

சில ஆண்ட்ராய்டு திரை பிரதிபலிக்கும் பயன்பாடுகள் உள்ளன என்றாலும், நான் scrcpy எனப்படும் திறந்த மூல பயன்பாட்டைப் பயன்படுத்தப் போகிறேன். விண்டோஸ் தவிர, இது லினக்ஸுக்கும் கிடைக்கிறது. இது பயன்படுத்த நேரடியானது, ஆனால் இது ஒரு UI ஐக் கொண்டிருக்கவில்லை மற்றும் CLI வழியாக கட்டுப்படுத்தப்பட வேண்டும், இது சில பயனர்களை அச்சுறுத்தக்கூடும். இருப்பினும், இது மிகவும் சக்திவாய்ந்த மற்றும் அம்சம் நிறைந்த கருவியாகும், இது உங்கள் Android தொலைபேசியின் காட்சியை உங்கள் கணினியில் பிரதிபலிக்க அனுமதிக்காது, ஆனால் இன்னும் பலவற்றைச் செய்யும்.


படி 1: உங்கள் கணினியில் scrcpy ஐ பதிவிறக்கவும். உங்கள் கணினியில் புதிய கோப்புறையில் அதன் உள்ளடக்கத்தைப் பிரித்தெடுக்க தொடரவும்.


படி 2: உங்கள் Android சாதனத்தில், அமைப்புகள் -> தொலைபேசியைப் பற்றி 'பில்ட் நம்பர்' இல் ஏழு முறை தட்டுவதன் மூலம் மறைக்கப்பட்ட 'டெவலப்பர் விருப்பங்களை' இயக்கவும். இப்போது, ​​அமைப்புகள் மெனுவிலிருந்து டெவலப்பர் விருப்பங்களுக்குச் சென்று 'யூ.எஸ்.பி பிழைத்திருத்தத்தை' இயக்கவும்.

படி 3: உங்கள் Android தொலைபேசியை உங்கள் கணினியுடன் இணைக்கவும், பின்னர் நீங்கள் scrcpy தொகுப்பின் உள்ளடக்கங்களை பிரித்தெடுத்த கோப்புறையில் உள்ள 'scrcpy.exe' பயன்பாட்டை இருமுறை கிளிக் செய்யவும். விண்டோஸ் ஸ்மார்ட் ஸ்கிரீன் அம்சம் பயன்பாட்டை இயங்குவதைத் தடுக்கக்கூடும், இந்நிலையில் 'மேலும் தகவல்' என்பதைக் கிளிக் செய்த பிறகு 'எப்படியும் இயக்கவும்' விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

படி 4: உங்கள் Android சாதனத்தில், ADB பிழைத்திருத்த கோரிக்கையை அங்கீகரிக்க ஒரு வரியில் நீங்கள் பெறுவீர்கள். அதை ஏற்று சில நொடிகள் காத்திருக்கவும். உங்கள் Android தொலைபேசியின் காட்சி இப்போது உங்கள் கணினியில் பிரதிபலிக்க வேண்டும். இல்லையெனில், scrcpy ஐ மூடிவிட்டு மீண்டும் இயக்கவும்.



உங்கள் Android தொலைபேசியின் காட்சியை உங்கள் கணினியில் பிரதிபலிப்பதில் நல்ல விஷயம் என்னவென்றால், நீங்கள் சுட்டி மற்றும் விசைப்பலகையை உள்ளீட்டு சாதனமாகப் பயன்படுத்தலாம். எனவே, எப்போது வேண்டுமானாலும் உரையை உள்ளிடுவதற்கு தொலைபேசியையும் விசைப்பலகையையும் சுற்றி செல்ல சுட்டியைப் பயன்படுத்தலாம்.

Scrcpy கண்ணாடியில் உங்கள் Android தொலைபேசியின் காட்சி பிசிக்கு இருப்பதால், காட்சி நேரம் முடிந்ததும் அது தானாகவே வெற்றுத் திரையைக் காண்பிக்கும். சிக்கலைத் தவிர்ப்பதற்கு பின்வரும் கட்டளைகளைப் பயன்படுத்தலாம்:

scrcpy - தங்கியிருங்கள்

இந்த கட்டளை உங்கள் தொலைபேசியின் காட்சி அணைக்கப்பட்டாலும், scrcpy வெற்றுத் திரையைக் காண்பிப்பதற்குப் பதிலாக அதை உங்கள் கணினியில் பிரதிபலிக்கும் என்பதை உறுதி செய்யும். இந்த கட்டளை பயனுள்ளதாக இருக்கும், ஏனெனில் உங்கள் தொலைபேசியின் காட்சி உங்கள் கணினியில் பிரதிபலிக்கும் வரை தொடர்ந்து இருக்க வேண்டியதில்லை. உங்கள் தொலைபேசியின் காட்சியை விரைவாக இயக்க விரும்பினால், நீங்கள் Ctrl + Shift + O குறுக்குவழியைப் பயன்படுத்தலாம். முன்பே குறிப்பிட்டுள்ளபடி, scrcpy நகல்-ஒட்டு ஆதரவையும் ஆதரிக்கிறது, அதாவது உங்கள் Android தொலைபேசியிலிருந்து உரையை உங்கள் கணினிக்கு எளிதாக நகலெடுக்கலாம்.



மீண்டும் மற்றுமொரு பதிவினூடாகச் சந்திக்கின்றேன்,,,,,,,,,,,,,,,,,,அன்புடன்,www.haribabuwebinfo.blogspot.in-ஹரி பாபு(HARI BABU). நன்றி:

Saturday, April 11, 2020

அறிவியல் ஆராய்ச்சியாளர்களால் கூட பதிலளிக்க முடியாத 10 இயற்கை நிகழ்வுகள்!



உலகில் நம்மையும் தாண்டி நடக்கும் சில விஷயங்களை, சிலர் கண்டறியப்படாத அறிவியல் என்கின்றனர். சிலர் இதை கடவுளின் செயல் என்றும், மனித சக்திக்கு அப்பாற்பட்டதும் என்றும் கூறுகிறார்கள். பிரபஞ்சத்தில் இதுபோன்ற விஷயங்கள் பலவன பறந்து, படர்ந்து கிடைக்கின்றன.
 
ஆனால், நமது உலகில் இருக்கும் பல விஷயங்களுக்கே ஏன், எதனால், எப்படி இந்த செயல் நடக்கின்றன என்பதற்கு பதில்கள் இல்லை. உலகை வியக்க வைத்த அறிவியல் அறிஞர்களிடமே இதற்கு இன்றளவும் பதிலில்லை என்பது தான் வியப்பின் உச்சம்.

செயல் #1

பறவைகள்!

ஒவ்வொரு காலநிலை பருவ மாற்றத்தின் போதும் பறவைகள் ஏன் இடம்பெயர்ந்து செல்கின்றன என்பதிற்கான தெளிவான பதில் இன்றளவும் கிடைக்கவில்லை.

செயல் #2


ஆக்சிஜன்!

ஏறத்தாழ எல்லா உயிரினங்களுக்குமே (மைக்ரோ ஆர்கனிசம் உட்பட) உயிர்வாழ ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது. ஆனால், ஆராய்ச்சியார்கள் கண்டறிந்த சில பாக்டீரியாக்கள் மற்றும் ஆர்கனிசம்களுக்கு உயிர்வாழ ஆக்ஸிஜன் தேவையின்றி இருக்கிறது.

செயல் #3


உள்ளுணர்வு!

உள்ளுணர்வு அல்லது ஆறாவது அறிவு இன்றளவும் ஓர் மர்மமானதாக தான் இருக்கிறது என உளவியலாளர்கள் கூறுகின்றனர். உள்ளுணர்வுகளின் செயல்பாடு குறித்த தெளிவான பார்வை எந்த ஆய்வுகளிலும் கண்டறியப்படவில்லை.

செயல் #4


பேய்கள்!

பேய் இருக்கிறதா, இல்லையா, இருப்பதற்கு ஏதேனும் அறிகுறி இருக்கிறதா என்பது இன்றவளவும் 100% ஊர்ஜிதம் செய்யபடாதது ஆகும். இல்லை என்று கூறுபவர்களுக்கு இணையாக இருக்கிறது என்று கூறும் நபர்களும் இருக்கின்றனர். ஆனால், இதற்கான அறிவியல் ரீதியான பதில் இன்றளவும் இல்லை.

செயல் #5


ஏலியன்கள்!

நமது உலகிலேயே பல இடங்களில் ஏலியன்களை கண்டதாக பலரும் கூறியுள்ளனர். ஆனால், அதற்கான நம்பத்தக்க ஆதாரங்கள் தான் இல்லை. ஹாலிவுட் படங்களில் மட்டும் தான் இதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன.

செயல் #6


காந்தம்!

காந்தங்களில் ஏன் இரண்டு போல்கள் இருக்கின்றன என்பது இன்றளவும் ஆராய்ச்சியாளர்கள் குழம்பும் ஓர் விஷயமாகும். மிக நுண்ணிய அளவிலான காந்தமாக இருப்பினும் கூட அதற்கு நார்த், சவுத் போல் இருப்பது குறிப்பிடத்தக்கது.


செயல் #7


கொட்டாவி!

கொட்டாவி சோர்வு, அலுப்படி வெளிப்படுத்தும் அறிகுறி என கூறுகிறோம். ஆனால், எதனால் கொட்டாவி வருகிறது என இதுநாள் வரை கண்டறியப்படவில்லை.

செயல் #8


பெர்முடா முக்கோணம்!

பெர்முடா முக்கோணத்தில் கடல் மற்றும் வான்வெளியில் எப்படி சென்றால், இந்த இடத்தை கடக்கும் கப்பல், வாகனங்கள் மாயமாகிவிடுவது ஏன் என்று இன்றளவும் மர்மமாகவே இருந்து வருகிறது.

செயல் #9



வலது கை பழக்கம்!

உலகில் இடது கை பழக்கம் உள்ளவர்களை விட, வலது கை பழக்கம் உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகம். இது, ஏன்? எதனால் என தெரியவில்லை. பரவலாக இதை பரிணாம வளர்ச்சி என கூறினாலும். அறிவியல் ரீதியான பதில், ஏதுமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

செயல் #10


தக்காளி!

உங்களால் இதை நம்புவதற்கு சற்று கடினமாக தான் இருக்கும். ஆனால், இதுதான் உண்மை. ஆம், மனிதர்களை விட அதிகமான மரபணுக்கள் கொண்டுள்ளது தக்காளில். தக்காளியில் 31,760 மரபணுக்கள் இருக்கின்றன. இந்த முரண்பாட்டை கண்டு இன்றளவும் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் குழப்பத்துடன் தான் இருக்கின்றனர்.

மீண்டும் மற்றுமொரு பதிவினூடாகச் சந்திக்கின்றேன்,,,,,,,,,,,,,,,,,,அன்புடன்,www.haribabuwebinfo.blogspot.in-ஹரி பாபு(HARI BABU). நன்றி:

Thursday, April 9, 2020

தங்கம் வாங்கலாம் கூகுள் பே மூலம்


கூகுள் பே டிஜிட்டல் வாலட் மூலம் இனி நீங்கள் தங்கம் வாங்கலாம், வாங்கிய தங்கத்தை விற்கலாம்.

பேடிஎம் (Paytm), போன்பே(PhonePe) போன்ற இந்திய ஆன்லைன் கட்டண சேவைகளுக்கு போட்டியாக கடந்த வருடம் Google Pay என்னும் புதிய சேவையை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது கூகுள் நிறுவனம்.

google pay gold


மற்ற சேவைகளைப் போல கூகுள் பே மூலம் நீங்கள் மொபைல் ரீசார்ஜ், மின்கட்டணம், தொலைப்பேசி கட்டணம், டிடிஹெச் கட்டணம் போன்றவற்றை செலுத்தலாம். மேலும் சில ஆன்லைன் தளங்களில் கூகுள் பே மூலம் பணம் செலுத்தி பொருட்களை வாங்கலாம்.

சமீபத்தில் ரயில் டிக்கெட்களை கூகுள் பே ஆப் மூலம் பதிவு செய்யும் வசதியை அறிமுகப்படுத்தியது. தற்போது இந்த ஆப் மூலம் 24 கேரட் தங்கம் வாங்கும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.


google pay gold google pay gold google pay gold


நீங்கள் வாங்கும் தங்கம் உங்கள் கணக்கில் சேமிக்கப்பட்டிருக்கும். அந்த தங்கத்தை நீங்கள் விரும்பிய நேரத்தில் கூகுள் ஆப் மூலமாகவே விற்கலாம். தங்கத்தின் வாங்கும், விற்கும் விலை சந்தை விலைக்கு ஏற்றபடி மாறிக்கொண்டே இருக்கும்.

தற்போது மற்ற நிறுவனங்களைவிட கூகுள் பே ஆப்பிள் தங்கத்தின் விலை கூடுதலாக இருக்கிறது. நீங்கள் வாங்குவதாக இருந்தால் விலை பார்த்து வாங்கவும்.



கூகுள் பே மூலம் நீங்கள் செய்யும் சில பண பரிவர்த்தனைகளை Cashback மற்றும் ஸ்க்ராட்ச் கார்ட் கொடுப்பார்கள்.



மீண்டும் மற்றுமொரு பதிவினூடாகச் சந்திக்கின்றேன்,,,,,,,,,,,,,,,,,,அன்புடன்,www.haribabuwebinfo.blogspot.in-ஹரி பாபு(HARI BABU). நன்றி:

Friday, November 29, 2019

எப்போது மாறப்போகிறது இந்த சமூகம்??? ஏன் அம்ம பகவான், நித்தியானந்தர் என ஏமாற்றப்படுகிறார்கள்????




எப்போது மாறப்போகிறது இந்த சமூகம்???
ஏன் அம்ம பகவான், நித்தியானந்தர் என ஏமாற்றப்படுகிறார்கள்????


இன்று இவர்கள்?? இனி எதனை பேர் வருவார்களோ??
நம் தமிழ் மக்களை ஏமாற்றிப் புழைக்க??

பல நூறூ கோடி ஆண்டுகளுக்கு முன்னாடி நம் தமிழ் மன்னர்களால் பல்வேறு ஆலயங்கள் அமைக்கப்பட்டு வழிபடப்பட்டு வருகிறதது ஆனாலும் இந்த சமூகம் அவற்றை நம்பாமல் ஞானி முனிவர் என்று ஏன் ஏமாறுகிறது????
ஞானி முனிவர்கள் எல்லம் உண்மை தான், ஆனால் நாட்டுக்குள் பேன்ச் காரில் சுக போக வாழ்வு எல்லம் அனுபவிப்பவர்கள் ஞானி அக்க முடியாது???
இதற்கு அவர்கள் சொல்லும் பதில் நாங்கள் உலகத்தை திருத்தி மக்களுக்கு நால் வாழ்வு அளிக்க தான் நாட்டில் இருக்குறோம்!! இவர்கள் உலகத்தை திருத்த இவர்கள் என்ன இராமனா, அல்லது முருகனா அல்லது ஜேசுவா அல்லது புத்தரா அல்லது அல்லவா??
நீங்கள் ஆவது கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க,, இவர்கள் சொல்லித்தரும் தியானம் யோகா எல்லம் நம் இந்து மதத்தில் காலா காலமாக ஏடுகள் புத்தகங்கங்ளில் உள்ளவை தான் அதை நாம் அறியாமல் ஏமாற்றப்படுகிறோம், இவர்கள் மக்களை ஏமாற்றுவதற்கு இந்து மதத்தின் சிவ சின்னகள் ஆன உருத்திராட்சம்,வீபூதி,காவி யின் மகத்துவம்வத்தை ஏன் கெடுக்கிறார்கள்,, இவர்களை இப்படியே விட்டுவிட்டால் ஆண்டு ஆண்டு காலமாக சேர சோழ மன்னர்களால் பேணி வந்த எமது மதம் கலாச்சாரம் என்ன ஆகுமோ???
ஒரு நிமிடம் யோசனை செய்து பாருங்கள்,,,

தற்போது இந்து மததிற்கு பல வெளிநாட்டவர்கள் மாறி வருகிறார்கள் அவர்கள் பெரிதும் நேசிப்பது சிவ சின்னமான உருதிராட்சம் விபூதியை தான் அதனால் தான் இவர்கள் அதனை பயன்படுதி அவர்களையும் ஏமாற்றுகிறார்கள். எவ்வளவு சாமி ஆசாமிகள் வந்தலும் ""ஒன்றே கடவுள் ஒருவனே தேவன்""

என்னைப்போல் யாழ் இந்துக் கல்லூரியின் இந்துவின் மைந்தர்கள் எவ்வளவு பேர் இந்து மதத்தை காப்பாற வீறு கொண்டு எழுவார்கள்


மீண்டும் மற்றுமொரு பதிவினூடாகச் சந்திக்கின்றேன்,,,,,,,,,,,,,,,,,,அன்புடன்,www.haribabuwebinfo.blogspot.in-ஹரி பாபு(HARI BABU). நன்றி:

Wednesday, November 13, 2019

தமிழில் பேசி தமிழில் தேடுங்கள் - கூகுள் தமிழ்

கூகுள் நிறுவனம் அவ்வப்போது பல்வேறு மாற்றங்களையும், அறிமுகங்களையும் செய்து வருவது நாம் அறிந்ததே! அதுவும் இந்திய நாட்டின் இணைய சந்தையை நன்கறியும் கூகுள் இந்திய மொழிகளுக்காக பல்வேறு வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது.
Image result for tamil speech to text
தற்போது குரல் தேடல் (Voice search) தயாரிப்பில் தமிழ், கன்னடம், மலையாளம், மராத்தி, தெலுங்கு, உருது, குஜராத்தி ஆகிய இந்திய மொழிகளையும், சிங்கள மொழியையும் சேர்த்துள்ளது.





இதன் மூலம் தட்டச்சு செய்வதற்கு பதிலாக குரல் மூலமாகவே தமிழில் பேசி தமிழில் தேடலாம்.

மேலும் உங்கள் ஆண்டிராய்ட் மொபைல்களில் GBoard அப்ளிகேசன் மூலம் தமிழில் பேசி தமிழில் தட்டச்சலாம். விரைவில் இவ்வசதி கூகுள் ட்ரான்ஸ்லேட் மற்றும் பிற தயாரிப்புகளில் கொண்டுவரப்படும் எனவும் கூகிள் தெரிவித்துள்ளது.

இது தொடக்கம் என்பதால் குரல் வழி தேடல்/தட்டச்சில் பிழைகள் வரலாம். ஆனா போகப்போக இவ்வசதி மேம்படுத்தப்படும் என கூகுள் தெரிவித்துள்ளது.







மீண்டும் மற்றுமொரு பதிவினூடாகச் சந்திக்கின்றேன்,,,,,,,,,,,,,,,,,,அன்புடன்,www.haribabuwebinfo.blogspot.in-ஹரி பாபு(HARI BABU). நன்றி:

உங்களுக்கு கூகுள் நிறுவனத்தில் வேலை வேண்டுமா?



நம்மில் பலர் கனவு வேலை (Dream  Job) என்று ஏதாவது ஒன்றை நினைத்திருப்போம். ப்ளாக்கர் நண்பன் தொடங்கியதிலிருந்தே கூகுள் மீது எனக்கு அளவுக்கதிகமான காதல். கூகுள் நிறுவனத்தில் வேலை செய்வதே என்னுடைய கனவு வேலையாக இருந்து வருகிறது.



உலகம் முழுவதும் பரந்துகிடக்கும் மிகப்பெரிய நிறுவனம் கூகுள். அதில் வேலை பெறுவது என்பது அவ்வளவு எளிதானதல்ல.

கூகுள் நிறுவனத்தில் உள்ள வேலைக்கான காலியிடங்களை Google Careers தளத்தில் சென்று பார்க்கலாம்.



Software Engineer வேலைக்கு கூகுள் நிறுவனம் உங்களிடம் பட்டப்படிப்பை எதிர்பார்க்கவில்லை. மாறாக உங்கள் திறமையை தான் எதிர்பார்க்கிறது. கூகுள் நிறுவனம் வேலைக்கு ஆள் எடுப்பதற்கு என்ன முறைகளை கையாளுகிறது? அதற்கு நீங்கள் எப்படி தயாராவது? என்பதை இங்கே க்ளிக் செய்து தெரிந்துக் கொள்ளலாம்.

இது வரை சொன்னது பொதுவான தகவல். இந்த பதிவை எழுத காரணமாக இருந்தது கீழே சொல்ல போகும் தகவல்.





Google's Coding Competitions

கூகுள் நிறுவனம் மூன்று விதமான நிரலாக்க போட்டியினை நடத்துகிறது.

Hash Code

இது அணி நிரலாக்க போட்டியாகும். இதில் இரண்டு முதல் நான்குபேர் வரை ஒரு அணியாக கலந்துக்கொள்ளலாம். இதில் வெற்றி பெரும் அணி 4,000 அமெரிக்க டாலர்களையும், இரண்டாம் அணியினர் 2,000 அமெரிக்க டாலர்களையும், மூன்றாம் அணியினர் 1,000 அமெரிக்க டாலர்களையும் பெறுவர்.

Code Jam

இது தனி நபர்களுக்கான நிரலாக்க போட்டியாகும். இதன் இறுதிப்போட்டிக்கு தகுதி பெரும் 25 நபர்களை கூகுள் தன் சொந்த செலவில் அமெரிக்காவிற்கு அழைத்து செல்கிறது. அங்கே நடக்கும் இறுதிப்போட்டியில் வெற்றி பெறுபவர் சாம்பியன் பட்டத்தையும், 15,000 அமெரிக்க டாலர்களையும் பரிசாக பெறுவார்.

Kick Start

இதுவும் தனி நபர்களுக்கான நிரலாக்க போட்டியாகும். இதில் சிறந்து விளங்குபவர்களை கூகுள் நிறுவனமே பணித்தேர்வுக்கு அழைக்கும். இதன் மூலம் கூகுளில் வேலை பெறுவதற்கான வாய்ப்பு கிடைக்கும்.


மீண்டும் மற்றுமொரு பதிவினூடாகச் சந்திக்கின்றேன்,,,,,,,,,,,,,,,,,,அன்புடன்,www.haribabuwebinfo.blogspot.in-ஹரி பாபு(HARI BABU). நன்றி: