நம்மில் பலர் கனவு வேலை (Dream Job) என்று ஏதாவது ஒன்றை நினைத்திருப்போம். ப்ளாக்கர் நண்பன் தொடங்கியதிலிருந்தே கூகுள் மீது எனக்கு அளவுக்கதிகமான காதல். கூகுள் நிறுவனத்தில் வேலை செய்வதே என்னுடைய கனவு வேலையாக இருந்து வருகிறது.
உலகம் முழுவதும் பரந்துகிடக்கும் மிகப்பெரிய நிறுவனம் கூகுள். அதில் வேலை பெறுவது என்பது அவ்வளவு எளிதானதல்ல.
கூகுள் நிறுவனத்தில் உள்ள வேலைக்கான காலியிடங்களை Google Careers தளத்தில் சென்று பார்க்கலாம்.
Software Engineer வேலைக்கு கூகுள் நிறுவனம் உங்களிடம் பட்டப்படிப்பை எதிர்பார்க்கவில்லை. மாறாக உங்கள் திறமையை தான் எதிர்பார்க்கிறது. கூகுள் நிறுவனம் வேலைக்கு ஆள் எடுப்பதற்கு என்ன முறைகளை கையாளுகிறது? அதற்கு நீங்கள் எப்படி தயாராவது? என்பதை இங்கே க்ளிக் செய்து தெரிந்துக் கொள்ளலாம்.
இது வரை சொன்னது பொதுவான தகவல். இந்த பதிவை எழுத காரணமாக இருந்தது கீழே சொல்ல போகும் தகவல்.
Google's Coding Competitions
கூகுள் நிறுவனம் மூன்று விதமான நிரலாக்க போட்டியினை நடத்துகிறது.Hash Code
இது அணி நிரலாக்க போட்டியாகும். இதில் இரண்டு முதல் நான்குபேர் வரை ஒரு அணியாக கலந்துக்கொள்ளலாம். இதில் வெற்றி பெரும் அணி 4,000 அமெரிக்க டாலர்களையும், இரண்டாம் அணியினர் 2,000 அமெரிக்க டாலர்களையும், மூன்றாம் அணியினர் 1,000 அமெரிக்க டாலர்களையும் பெறுவர்.Code Jam
இது தனி நபர்களுக்கான நிரலாக்க போட்டியாகும். இதன் இறுதிப்போட்டிக்கு தகுதி பெரும் 25 நபர்களை கூகுள் தன் சொந்த செலவில் அமெரிக்காவிற்கு அழைத்து செல்கிறது. அங்கே நடக்கும் இறுதிப்போட்டியில் வெற்றி பெறுபவர் சாம்பியன் பட்டத்தையும், 15,000 அமெரிக்க டாலர்களையும் பரிசாக பெறுவார்.Kick Start
இதுவும் தனி நபர்களுக்கான நிரலாக்க போட்டியாகும். இதில் சிறந்து விளங்குபவர்களை கூகுள் நிறுவனமே பணித்தேர்வுக்கு அழைக்கும். இதன் மூலம் கூகுளில் வேலை பெறுவதற்கான வாய்ப்பு கிடைக்கும்.மீண்டும் மற்றுமொரு பதிவினூடாகச் சந்திக்கின்றேன்,,,,,,,,,,,,,,,,,,அன்புடன்,www.haribabuwebinfo.blogspot.in-ஹரி பாபு(HARI BABU). நன்றி:
0 comments:
Post a Comment