பல இணைய தளங்களிலிருந்து சேகரித்தவைகளை பலருக்கும் பயனாக அமையும் என்ற நோக்கம் கருதி இந்த பிளாக்கில் பதிந்துள்ளேன் - உங்கள் அன்புக்குரிய "ஹரி பாபு".

Search This Blog

Saturday, April 11, 2020

அறிவியல் ஆராய்ச்சியாளர்களால் கூட பதிலளிக்க முடியாத 10 இயற்கை நிகழ்வுகள்!



உலகில் நம்மையும் தாண்டி நடக்கும் சில விஷயங்களை, சிலர் கண்டறியப்படாத அறிவியல் என்கின்றனர். சிலர் இதை கடவுளின் செயல் என்றும், மனித சக்திக்கு அப்பாற்பட்டதும் என்றும் கூறுகிறார்கள். பிரபஞ்சத்தில் இதுபோன்ற விஷயங்கள் பலவன பறந்து, படர்ந்து கிடைக்கின்றன.
 
ஆனால், நமது உலகில் இருக்கும் பல விஷயங்களுக்கே ஏன், எதனால், எப்படி இந்த செயல் நடக்கின்றன என்பதற்கு பதில்கள் இல்லை. உலகை வியக்க வைத்த அறிவியல் அறிஞர்களிடமே இதற்கு இன்றளவும் பதிலில்லை என்பது தான் வியப்பின் உச்சம்.

செயல் #1

பறவைகள்!

ஒவ்வொரு காலநிலை பருவ மாற்றத்தின் போதும் பறவைகள் ஏன் இடம்பெயர்ந்து செல்கின்றன என்பதிற்கான தெளிவான பதில் இன்றளவும் கிடைக்கவில்லை.

செயல் #2


ஆக்சிஜன்!

ஏறத்தாழ எல்லா உயிரினங்களுக்குமே (மைக்ரோ ஆர்கனிசம் உட்பட) உயிர்வாழ ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது. ஆனால், ஆராய்ச்சியார்கள் கண்டறிந்த சில பாக்டீரியாக்கள் மற்றும் ஆர்கனிசம்களுக்கு உயிர்வாழ ஆக்ஸிஜன் தேவையின்றி இருக்கிறது.

செயல் #3


உள்ளுணர்வு!

உள்ளுணர்வு அல்லது ஆறாவது அறிவு இன்றளவும் ஓர் மர்மமானதாக தான் இருக்கிறது என உளவியலாளர்கள் கூறுகின்றனர். உள்ளுணர்வுகளின் செயல்பாடு குறித்த தெளிவான பார்வை எந்த ஆய்வுகளிலும் கண்டறியப்படவில்லை.

செயல் #4


பேய்கள்!

பேய் இருக்கிறதா, இல்லையா, இருப்பதற்கு ஏதேனும் அறிகுறி இருக்கிறதா என்பது இன்றவளவும் 100% ஊர்ஜிதம் செய்யபடாதது ஆகும். இல்லை என்று கூறுபவர்களுக்கு இணையாக இருக்கிறது என்று கூறும் நபர்களும் இருக்கின்றனர். ஆனால், இதற்கான அறிவியல் ரீதியான பதில் இன்றளவும் இல்லை.

செயல் #5


ஏலியன்கள்!

நமது உலகிலேயே பல இடங்களில் ஏலியன்களை கண்டதாக பலரும் கூறியுள்ளனர். ஆனால், அதற்கான நம்பத்தக்க ஆதாரங்கள் தான் இல்லை. ஹாலிவுட் படங்களில் மட்டும் தான் இதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன.

செயல் #6


காந்தம்!

காந்தங்களில் ஏன் இரண்டு போல்கள் இருக்கின்றன என்பது இன்றளவும் ஆராய்ச்சியாளர்கள் குழம்பும் ஓர் விஷயமாகும். மிக நுண்ணிய அளவிலான காந்தமாக இருப்பினும் கூட அதற்கு நார்த், சவுத் போல் இருப்பது குறிப்பிடத்தக்கது.


செயல் #7


கொட்டாவி!

கொட்டாவி சோர்வு, அலுப்படி வெளிப்படுத்தும் அறிகுறி என கூறுகிறோம். ஆனால், எதனால் கொட்டாவி வருகிறது என இதுநாள் வரை கண்டறியப்படவில்லை.

செயல் #8


பெர்முடா முக்கோணம்!

பெர்முடா முக்கோணத்தில் கடல் மற்றும் வான்வெளியில் எப்படி சென்றால், இந்த இடத்தை கடக்கும் கப்பல், வாகனங்கள் மாயமாகிவிடுவது ஏன் என்று இன்றளவும் மர்மமாகவே இருந்து வருகிறது.

செயல் #9



வலது கை பழக்கம்!

உலகில் இடது கை பழக்கம் உள்ளவர்களை விட, வலது கை பழக்கம் உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகம். இது, ஏன்? எதனால் என தெரியவில்லை. பரவலாக இதை பரிணாம வளர்ச்சி என கூறினாலும். அறிவியல் ரீதியான பதில், ஏதுமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

செயல் #10


தக்காளி!

உங்களால் இதை நம்புவதற்கு சற்று கடினமாக தான் இருக்கும். ஆனால், இதுதான் உண்மை. ஆம், மனிதர்களை விட அதிகமான மரபணுக்கள் கொண்டுள்ளது தக்காளில். தக்காளியில் 31,760 மரபணுக்கள் இருக்கின்றன. இந்த முரண்பாட்டை கண்டு இன்றளவும் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் குழப்பத்துடன் தான் இருக்கின்றனர்.

மீண்டும் மற்றுமொரு பதிவினூடாகச் சந்திக்கின்றேன்,,,,,,,,,,,,,,,,,,அன்புடன்,www.haribabuwebinfo.blogspot.in-ஹரி பாபு(HARI BABU). நன்றி:

0 comments: