பல இணைய தளங்களிலிருந்து சேகரித்தவைகளை பலருக்கும் பயனாக அமையும் என்ற நோக்கம் கருதி இந்த பிளாக்கில் பதிந்துள்ளேன் - உங்கள் அன்புக்குரிய "ஹரி பாபு".

Search This Blog

Wednesday, May 9, 2012

திரைப்படத்தில் நடிக்கிறார் சச்சின் டெண்டுல்கர்



திரைப்படத்தில் நடிக்கிறார் சச்சின் டெண்டுல்கர்இந்திய கிரிக்கெட்டின் சாதனை நாயகனான சச்சின் டெண்டுல்கர்  ஹிந்தி சினிமாவில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.




இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி மட்டையாளர் சச்சின், பாலிவுட் தயாரிப்பாளர் விதோ விநோத் சோப்ரா தயாரித்து வரும் ஃபெராரி கி சவாரி என்ற படத்தில் நடிக்க உள்ளதாகத் தெரிய வருகிறது. கிரிக்கெட் விளையாடுவதை கனவாக கொண்ட குழந்தையைப் பற்றியது இப்படத்தின் கதை என்றும் இந்த படம் ஜூன் 15ல் வெளியாகும் எனவும் தயாரிப்பாளர் சோப்ரா தெரிவித்துள்ளார்.


இப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க சச்சின் ஒப்புதல் தெரிவித்தது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக சோப்ரா தெரிவித்துள்ளார். இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு ஐ.பி.எல்., போட்டிகள் நிறைவடைந்ததும் தொடங்கும் என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, திரைப்படத்தில் நடிக்க சச்சின் மறுப்பு தெரிவித்து வந்திருந்தார் என்பது குறிக்கத்தக்கது



மீண்டும் மற்றுமொரு பதிவினூடாகச் சந்திக்கின்றேன்,,,,,,,,,,,,,,,,,,அன்புடன், WWW.HARIBABINFOWEB.CO.CC-ஹரி பாபு(HARI BABU). நன்றி:

0 comments: