அருமை மகனின்
படுத்தும் சேட்டையால்
பக்கத்து வீட்டு பையன்
பங்காளி ஆனான்
அவனுக்கு...
அடுத்த வீட்டுக்காரியிடம்
அடுத்தடுத்து காபி பொடி, சர்க்கரை
கடன் வாங்க... அவளும்
உடன் பேச்சை நிறுத்தினாள்
அடுத்த வீட்டுக்காரரிடம்
நான் மட்டும்
நட்பை வளர்க்க
யார் கண் பட்டதோ
ஊர் கண் பட்டதோ
ஒதுங்கும் கழிவு நீரால்
அதிலும் ஓட்டை விழ...
விரிசல் நட்பால்
பிரிந்தன வீடுகள்
பேச்சுகள் அற்று
நிசப்தமாய் இரு வீடுகள்..
அனைத்தையும் வெட்டிய
அடுத்த வீட்டுக்காரர்
இருவரும் இணைந்தே - வீட்டின்
இடையே வளர்த்த
ஒட்டு மாங்கனி மரத்தை
வெட்டி விடுவாரோ
விட்டு வைப்பாரோ
என்ன செய்வார்....இனி..!
மீண்டும் மற்றுமொரு பதிவினூடாகச் சந்திக்கின்றேன்,,,,,,,,,,,,,,,,,,அன்புடன், WWW.HARIBABINFOWEB.CO.CC-ஹரி பாபு(HARI BABU). நன்றி:
0 comments:
Post a Comment