பல இணைய தளங்களிலிருந்து சேகரித்தவைகளை பலருக்கும் பயனாக அமையும் என்ற நோக்கம் கருதி இந்த பிளாக்கில் பதிந்துள்ளேன் - உங்கள் அன்புக்குரிய "ஹரி பாபு".

Search This Blog

Monday, April 23, 2012

கணணி வைரஸ்களிடமிருந்து பென்ட்ரைவை USB பாதுகாக்க!



தனிப்பட்ட தகவல்களை சேகரிப்பதற்கும், தகவல்களை இலகுவாக எடுத்துச் செல்வதற்கும் பென்டிரைவ்கள் (USB) பயன்படுத்தப்படுகின்றன. இருந்தும் அத்தகவல்களை கணணி வைரஸ்களிடமிருந்து பாதுகாப்பது மிகவும் கடினமான ஒன்றாக காணப்படுகின்றது. 

இத்தொல்லையிலிருந்து விடுபடுவதற்கு USB Write Protecter என்ற ஒரு மென்பொருள் பயன்டுகின்றது. 

1. குறித்த பென்டரைவை கணணியுடன் இணைக்கவும்

2. தரப்பட்டுள்ள தரவிறக்க சுட்டிக்கு சென்று மென்பொருளை தரவிறக்கம் செய்யவும்

3. பின் அம்மென்பொருளை இயக்கவும். அவ்வாறு இயக்கும் போது ஒரு Page தோன்றும்

4. அதில் USB write protection ON என்பதை தெரிவு செய்யவும்

இப்பொழுது குறித்த பென்டிரைவில் (USB) காணப்படும் கோப்புக்களை அழிக்கவோ அல்லது பிரதிசெய்யவோ (Copy) முடியாது.

அவ்வாறு செய்ய வேண்டுமெனில் மீண்டும் மென்பொருளை இயக்கி USB Write Protection OFF என்பதை தெரிவு செய்ய வேண்டும்.

இணையதள முகவரி : USB Write

மீண்டும் மற்றுமொரு பதிவினூடாகச் சந்திக்கின்றேன்,,,,,,,,,,,,,,,,,,அன்புடன், WWW.HARIBABINFOWEB.CO.CC-ஹரி பாபு(HARI BABU). நன்றி:

0 comments: