பல இணைய தளங்களிலிருந்து சேகரித்தவைகளை பலருக்கும் பயனாக அமையும் என்ற நோக்கம் கருதி இந்த பிளாக்கில் பதிந்துள்ளேன் - உங்கள் அன்புக்குரிய "ஹரி பாபு".

Search This Blog

Friday, April 13, 2012

ப்ளாக்கரில் புதிய பட வசதி - LightBox



கூகிள் ப்ளஸ் வந்ததிலிருந்து கூகிள் தளம் தனது ப்ளாக்கர், யூட்யூப், ஆட்சென்ஸ், ஜிமெயில் போன்ற அனைத்து தளங்களையும் ஒரே மாதிரியான தோற்றமாக மாற்றி வருகிறது. தற்போது அதன் Sign-up பக்கங்களில் மாற்றம் வந்திருப்பதை பார்த்திருப்பீர்கள். அந்த வகையில் ப்ளாக்கர் தளத்தில் Light Box எனப்படும் புதிய பட வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.


முன்னர் நம் தளத்தில் சேர்த்துள்ள படங்களை க்ளிக் செய்தால் அது புதிய பக்கத்தில் அந்த படங்களை காட்டும். ஆனால் தற்போது Light Box என்னும் வசதியை சேர்த்தன் மூலம் நமது தளத்தில் உள்ள படங்களை க்ளிக் செய்தால், தனி பக்கத்திற்கு செல்லாமல் அதே பக்கத்திலேயே பெரிதாய் காட்டும். இது கூகிள் ப்ளஸ் தளத்தில் உள்ளது போன்ற தோற்றமாகும். அதற்கு  கீழே உள்ள சுட்டியை க்ளிக் செய்தால் அந்த படத்தின் பக்கத்திற்கு செல்லலாம்.

ஆனால்  சிலருக்கு இந்த வசதி பிடிக்காமல் இருக்கலாம். மேலும் சிலருக்கு இதன் மூலம் Read More Button வேலை செய்யாமல் இருக்கலாம். அதனால் இதனை நீக்குவது எப்படி? என்று பார்ப்போம்.

1. ப்ளாக்கரில்  Edit Html பக்கத்திற்கு செல்லுங்கள். 

2. உங்கள் டெம்ப்ளேட்டை Back-up எடுத்துக் கொள்ளுங்கள்.

3. பிறகு 
</head>
என்ற Code-ஐ தேடி அதற்கு முன்னால் 
<script type='text/javascript'> //<![CDATA[ function killLightbox() { var images = document.getElementsByTagName( 'img'); for (var i = 0 ; i < images.length ; ++i) { images[i].onmouseover=function() { var html = this.parentNode.innerHTML; this.parentNode.innerHTML = html; this.onmouseover = null; }; } } if (window.addEventListener) { window.addEventListener('load',killLightbox,undefined); } else { window.attachEvent('onload',killLightbox); } //]]> </script>
என்ற Code-ஐ Paste செய்யுங்கள்.

4. பிறகு Save Template பட்டனை க்ளிக் செய்யுங்கள்.

இனி உங்கள் படங்கள் பழைய வடிவிலே காட்டும்.

மேலும்  இது பற்றி தகவல்கள் கிடைத்தால்  அப்டேட் செய்கிறேன்.

நன்றி: இது பற்றிய சந்தேகத்தை கேட்டு இந்த வசதியை எனக்கு தெரிவித்தசகோ. முஹம்மது ஆஷிக் அவர்களுக்கு நன்றி!




மீண்டும் மற்றுமொரு பதிவினூடாகச் சந்திக்கின்றேன்,,,,,,,,,,,,,,,,,,அன்புடன், WWW.HARIBABINFOWEB.CO.CC-ஹரி பாபு(HARI BABU).

0 comments: