| |||||||||||||||||||||||
கம்ப்யூட்டரை பயன்படுத்த பயப்படவேண்டாம் !கம்ப்யூட்டரை நீங்கள் இப்பொழுது சிறிது காலமாகத்தான் பயன்படுத்த தொடங்கி இருக்கிறீர்களா? கவலை வேண்டாம் கம்ப்யூட்டரில் சில விசயங்களை தெரிந்துகொள்வதும் மனதில் அதை பதியவைப்பதும் ஒன்னும் சிரமமான காரியம் இல்லை. இன்றைய சூழ்நிலையில் சின்ன குழந்தைகள் கூட கம்ப்யூட்டரை பயன்படுத்த பழகிவிடுகிறது அப்படி இருக்கும்போது நமக்கு ஏன் முடியாது. முதலில் நம்பிக்கை வையுங்கள். மேலும் இந்த கம்ப்யூட்டரில் பயன்படுத்தும் சாப்ட்வேரை கண்டுபிடித்தவரின் பெயர் பில்கேட்ஸ். இதை நீங்கள் கேள்விப்பட்டும் இருக்கலாம் கேள்வி படாமலும் இருக்கலாம். ஆனால் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய விசயம் என்னவென்றால் இந்த சாப்ட்வேரை இவர் கண்டுபிடித்ததால் தான் உலக பணக்காரர் ஆகிவிட்டார். ஏன் தெரியுமா? இவர் கண்டுபிடித்த இந்த சாப்ட்வேரின் உதவியால் இன்று ஒரு சின்ன குழந்தைகூட கம்ப்யூட்டரை பயன்படுத்த முடியும் என்பதால்தான். இவ்வளவு எளிய முறையில் அவர்கண்டுபிடித்த பிறகும் நாம் அதைப் பழக சிரமப்பட்டோம் என்றால் அவர் இவ்வளவு புகழ் அடைந்ததற்க்கு அர்த்தமே இல்லை. இதை நீங்கள் மனதில் கொண்டால் போதும் கூடிய சீக்கிறம் நீங்கள் கம்ப்யூட்டர் கற்றுக்கொள்வது மட்டுமல்ல கம்ப்யூட்டர் பற்றிய சில விளக்கங்களை மற்றவருக்கு சொல்லி கொடுக்கும் அளவிற்க்கும் தேற்ச்சி பெற்றுவிடுவீர்கள். முக்கியமாக கம்ப்யூட்டரை முதன் முதலில் பயன்படுத்துபவருக்கு மனதில் ஏற்ப்படும் தயக்கம் என்னவென்றால் நாம் ஏதாவது செய்யப்போக அதன் காரணமாக இந்த கம்ப்யூட்டரில் உள்ள சில முக்கியமான பைல்கள் மற்றும் ப்ரோகிராம்கள் அழிந்துவிடுமோ என்ற பயம்தான். நீங்கள் நினைப்பதுபோல் அவ்வளவு எளிதில் விபரம் தெரியாத உங்களால் எந்த ஒரு பைலும் அழிந்துவிடாது. எந்த ஒரு ப்ரோக்ராமும் கானாமல் போய்விடாது. ஏனென்றால் விபரம் தெரியாதவர் தவறுதலாக அழித்துவிடும் அளவுக்கு கம்ப்யூட்டர் ஒன்றும் பாதுகாப்பு இல்லாதவகையில் உருவாக்கப்பட்டது அல்ல. நீங்கள் கம்ப்யூட்டரில் ஒரு பைலை உங்கள் மவுசால் தொடுகிறீர்கள் என்றால் அது உடனே அழிந்துவிடாது. அதை தொட்டபிறகு நீங்கள் கீ போர்டில் Delete என்ற பட்டனை தொடவேண்டும். அப்பொழுதும் அது அழிந்துவிடாது. அதன் பிறகு Are you sure you want to send ‘sheet’ to the Recycle Bin? என்ற கேள்வியை கேட்க்கும். இதன் விளக்கம் என்னவென்றால் இந்த பைலை நிச்சயமாக குப்பைத்தொட்டிக்கு கொண்டுபோகத்தான் வேண்டுமா ? என்று கம்ப்யூட்டர் உங்களை கேட்க்கிறது. இந்த நேரத்தில் நீங்கள் Yes என்ற பட்டனை அடித்தால் அந்த பைலை குப்பைத்தொட்டிக்கு கொண்டுபோய்விடும் No என்ற பட்டனை அடித்தால் அந்த பைலை அழிக்காமல் விட்டு விடும். சரி நீங்கள் இப்பொழுதும் தவறுதலாக Yes என்ற பட்டனையே தொடுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம் அந்த பைல் எங்கு போகும். உங்கள் கம்ப்யூடரை திறந்த உடன் தெரியும் படத்தில் (Wallpaper) அதாவது கம்ப்யூட்டரை ஓப்பன் செய்து வைத்த ஆரம்ப நிலையில் உள்ள Recycle Bin என்ற இடத்துக்கு போகும். சரி, இப்பொழுது உங்களால் தவறுதலாக அழிக்கப்பட்ட பைலை நீங்கள் திருப்ப பழைய இடத்துக்கு கொண்டுவரவேண்டும். அதற்க்கு என்ன செய்யவேண்டும். இந்த குப்பைத்தொட்டி என்ற ஐக்கானை உங்கள் மவுசால் தொட்டு அதன் வலது பக்கம் கிளிக் செய்து Open என்ற இடத்தை தொடுங்கள் உடனே உங்களால் அழிக்கப்பட பைல் குப்பைத்தொட்டியில் போய் சேர்ந்திருப்பது உங்களுக்கு தெரியும். அடுத்து நீங்கள் குப்பைத்தொட்டியில் உள்ள உங்கள் பைலை உங்கள் மவுசால் தொடுங்கள் பிறகு அதன் வலது பக்கம் கிளிக் செய்து Restore என்ற பட்டனை தொட்டால் உடனே நீங்கள் அழித்த பைல் அது இருந்த பழைய இடத்திற்க்கு போய்விடும். இப்பொழுது உங்களுக்கு இரண்டு விசயம் புரியும். என்னென்ன ? அதாவது கம்ப்யூட்டரை பற்றி அதிகமாக தெரியாத நம்மால் அவ்வளவு சீக்கிரம் ஒரு பைலை அழித்துவிட முடியாது. அப்படி அழித்தாலும் அதை குப்பைத்தொட்டியில் போய் எடுத்துவிடலாம் என்று. இனி என்ன பயம். ஒரு பைலை தவறுதலாக அழிக்கும் நீங்கள் குப்பைத்தொட்டியிலும் போய் அதை முழுவதுமாக அழித்துவிடவா போகிறீர்கள். இல்லவே இல்லை. அதனால் மற்றவர் வைத்திருக்கும் பைல்களை தவறுதலாக அழித்துவிடுவோம் என்ற பயத்தை விட்டுவிடுங்கள். அடுத்து ஏதாவது ஒரு ப்ரோக்ராமை நாம் விபரம் தெரியாமல் கம்ப்யூட்டரில் இருந்து எடுத்துவிடுவோமோ என்று சிலருக்கு பயம் இருக்கும். இதுவும் அவ்வளவு சீக்கிரம் எளிதாக நடந்துவிடாது. ஏனென்றால் கம்ப்யூட்டரில் உள்ள WindowsXP ஐ நீங்கள் எவ்வளவு பெரிய திறமைசாலியாக இருந்தாலும் மவுசை வைத்து அழித்துவிட முடியாது. அதற்க்கு அதிப்பபடியான ட்ரைனிங் உங்களுக்கு வேண்டும். அடுத்ததாக நீங்கள் டைப்செய்து சேர்த்துவைக்கும் ப்ரோக்ராம் Microsoft Word, Excel, word, Powerpoint, Access போன்றவற்றை உள்ளடக்கிய Microsoft Office ஐயும் அவ்வளவு எளிதாக அழித்துவிட முடியாது ஏனென்றால் இந்த ஆபீஸ் ப்ரோக்ராமை நீங்கள் கம்ப்யூட்டரில் இருந்து எடுக்கவேண்டும் என்றால் அதற்க்கு Control Panel என்ற ஒரு புதிய இடத்துக்கு செல்லவேண்டும். இதற்க்கு மேல் கம்ப்யூட்டரில் நீங்கள் அழித்துவிட்டு அழக்கூடிய அளவிற்க்கு வேறு எந்த முக்கிய ப்ரோக்ராமும் இல்லை. அதனால் தயக்கம் இல்லாமல் பயம் இல்லாமல் கம்ப்யூட்டரை பயன் படுத்துங்கள். வெற்றி நிச்சயம். | |||||||||||||||||||||||
உங்கள் கம்ப்யூட்டரை பற்றிய விபரங்களை குறிப்பு எடுத்துக்கொள்ளுங்கள்...நீங்கள் சொந்தமாக ஒரு கம்ப்யூட்டரை விலைக்கு வாங்கிவிட்டீர்களா ! இதுக்கு உங்கள் பதில் ஆம் என்றால்... இனி உங்கள் கம்ப்யூட்டரை பாதுக்காக்க வேண்டியது உங்கள் பொறுப்பு. இதுவரை நீங்கள் எப்படி இருந்தாலும் சரி இனி உங்கள் கம்ப்யூட்டர் விசயத்தில் கவனக்குறைவாக இருக்காதீர்கள். அதாவது நீங்கள் கஷ்டப்பட்டு விலை அதிகம் கொடுத்து வாங்கிய உங்கள் கம்ப்யூட்டரின் முக்கியமான ஹார்டுவேர் பாகங்களை இன்னொருவர் உங்களுக்கு தெரியாமல் எடுத்துக்கொள்ள விட்டுவிடாதீர்கள். உங்கள் கம்ப்யூட்டருக்கு ஏதாவது பிரச்சனை வரும்போது அதனை சரி செய்ய கடை காரரிடம் கொடுப்பதற்க்கு முன் உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள ஹார்டுவேரை பற்றிய குறிப்புகளை நீங்கள் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். அப்பொழுதுதான் உங்கள் கம்ப்யூட்டர் சரி செய்து வந்த பிறகு உங்கள் கம்ப்யூட்டருக்கு உள்ளே உள்ள ஹார்டுவேர்கள் ( Mother Board, Processor, Ram, Hard Disk)அனைத்தும் முன்பு இருந்தவைதான் இப்பொழுதும் இருக்கிறதா என்று பார்த்துக்கொள்ளலாம். அது எப்படி என்று கேட்க்கிறீர்களா ? அது ஒன்றும் சிரமமான காரியம் இல்லை. இங்கு கீழே சொன்ன முறைப்படி இப்பொழுதே உங்கள் கம்ப்யூட்டரை பற்றிய குறிப்புகளை ஒரு டைரியில் எழுதி வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் கம்ப்யூட்டர் தயாரித்த நிறுவனம் மற்றும் மாடல் நம்பரை தெரிந்துகொள்ள Start > Run என்ற பட்டனை அழுத்தி msinfo32.exe என்று டைப் செய்து Enter பட்டனை அழுத்துங்கள். அடுத்து Run பட்டனை கிளிக் செய்து இங்கு சொன்ன எழுத்துக்களை டைப் செய்யுங்கள். Run ல் மேலே சொன்ன எழுத்துக்களை டைப் செய்து எண்டரை அழுத்தியதும் இங்கு கீழே காணும் தட்டு ஓப்பன் ஆகும். இதிலும் உங்கள் கம்ப்யூட்டர் பற்றிய விபரங்கள் இருக்கும். இந்த System டிஸ்பிளேயில் நீங்கள் முக்கியமான உங்கள் கம்ப்யூட்டரில் பொருத்தப்பட்டுள்ள Processor Type மற்றும் Ram -ன் அளவை தெரிந்துகொள்ளலாம். அடுத்ததாக இதே தட்டில் தலைப்பில் Display என்ற பகுதியை கிளிக் செய்யுங்கள். இதில் முக்கியமாக உங்கள் மதர்போர்டின் மாடல் நம்பர் குறிப்பிடப்பட்டிருக்கும். இதனையும் குறித்து வைத்துக்கொள்ளுங்கள். கம்ப்யூட்டரில் மதர்போர்டு என்பது மிக முக்கியமான பகுதி. உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள விலை அதிகமான தரம் மிக்க உங்கள் மதர்போர்டை உங்களுக்கு தெரியாமல் ஒருவர் மாற்றிவிட்டு தரம் குறைந்த ஒரு போர்டை வைத்து உங்களிடம் தந்துவிடமுடியும். அதன் வித்தியாசம் உங்களுக்கு உடனே தெரியாது. அதனால் இந்த மாடல் நம்பரை வைத்துதான் நீங்கள் உங்கள் மதர்போர்டு சரியாகத்தான் உள்ளதா என தெரிந்துகொள்ள முடியும். அடுத்ததாக உங்கள் ஹார்டிஸ்க். உங்கள் ஹார்டிஸ்க்கின் அளவு 320 GB, 250 GB, 160 GB, 100 GB, 80 GB, 40 GB, 20GB என்று பல அளவுகளில் இருக்கலாம் எதுவாக இருந்தாலும் சரி அதன் அளவு என்ன என்பதை பார்த்து குறித்து வைத்துக்கொள்ளுங்கள். இதனை தெரிந்துகொள்ள உங்கள் கம்ப்யூட்டர் டெக்ஸ்டாப்பில் உள்ள My Computer என்ற ஐக்கானை செலெக்ட் செய்து அதன் வலது பக்கம் கிளிக் செய்து கடைசியாக உள்ள Properties என்ற இடத்தை தொடுங்கள் உடனே உங்களுக்கு கீழ் காணும் ஒரு தட்டு ஓப்பன் ஆகும் இதில் நீங்கள் உங்கள் ஹார்டிஸ்க்கின் அளவு என்ன என்பதை பார்த்து குறிப்பு எழுதி வைத்துக்கொள்ளலாம். இங்கு மேலே உள்ள படத்தில் C டிரைவின் ஹார்டிஸ்கின் அளவு மட்டும் கிட்டத்தட்ட 50 GB என்று தெரியப்படுத்துகிறது. உங்கள் கம்ப்யூட்டரில் இன்னொறு டிரைவ் D என்ற பெயரிலும் இருக்கலாம் அதன் அளவு 30 GB என இருக்கலாம். அப்படி இருந்தால் உங்கள் கம்யூட்டரில் உள்ள மொத்த ஹார்டிஸ்கின் அளவு 80 GB என நீங்கள் கணக்கெடுத்துக்கொள்ளலாம். இங்கு சொன்ன முறைப்படி நீங்கள் உங்கள் Mother Board Model No, Manufactur Name, Processor Type, Ram Capacity, Hard Disk Capacity போன்ற விபரங்களை குறித்து வைத்துக்கொள்ளுங்கள். உங்களை எவரும் அவ்வளவு சீக்கிரம் ஏமாற்றி விட முடியாது. |
மீண்டும் மற்றுமொரு பதிவினூடாகச் சந்திக்கின்றேன்,,,,,,,,,,,,,,,,,,அன்புடன், WWW.HARIBABINFOWEB.CO.CC-ஹரி பாபு(HARI BABU).
0 comments:
Post a Comment