எங்களின் கலைகள் எங்களின் தலைகள்
என்ன தான் ஆயிற்று ?-இன்று
ஏய்ப்பவர் தலமையில் எங்களின் வாழ்வு
ஏன் தான் வந்தாச்சு ?
எத்தனை செய்கிறார் என்னவெலாம் ஏவுகிறார்
அத்தனை தீங்குகளும் எம்மிடையே
இத்தனை வலிகளும் எம்மையே ஆண்டும்
எம்மிடம் தோற்றது வலிகள் தானே !
முந்திய வேள்வியில் வீழ்ந்தவர் யாரினும்
சிந்திய குருதிகள் வீணாகுமோ?
பிந்திய கனவுகள் என்றொரு நாளில்-செந்
தீயாய் எழுந்து வராதோ !
மதுரைப்புழுதி வளர்த்த தமிழ் மறைந்துபோகுமோ
பாலை நிலம் சுமந்த வீரம் மறைந்து போகுமோ
உதிரம் சிந்தி தமிழ் காப்போம் -இன்ப
தமிழ் சுமப்போம் !
எழுத்துருவாக்கம்
கவிஞர் அகரமுதல்வன்
மீண்டும் மற்றுமொரு பதிவினூடாகச் சந்திக்கின்றேன்,
அன்புடன்,
ஹரி பாபு.

2 comments:
மிக்க மகிழ்ச்சி தோழர் உங்களுடைய சேவைக்கு பாராட்டுகள் ....
கவிஞர் அகரமுதல்வன் மிகச்சிறந்த கவிஞர் சிந்தனை வளம் கொண்டவர் .அவருடைய தொடரும் நினைவுகள் நூலில் இடம்பெறும் சில கவிதைகள் எதிர் பார்க்க முடியாத சொல்லாடல்களோடு இருந்தது.அவருடைய
செந்தீயை மூட்டு தமிழா கவிதை மறைமுகமாக தமிழர்களின் சிந்தனையை தூண்டிவிடுகிறது .....இப்படியான இந்த கவிதைகளை நீங்கள் பிரதியிடவேண்டும் என்பதே எனது கருத்து ...

Post a Comment