பல இணைய தளங்களிலிருந்து சேகரித்தவைகளை பலருக்கும் பயனாக அமையும் என்ற நோக்கம் கருதி இந்த பிளாக்கில் பதிந்துள்ளேன் - உங்கள் அன்புக்குரிய "ஹரி பாபு".

Search This Blog

Wednesday, April 11, 2012

சென்னையில் இன்றைய நிலநடுக்கம் : நேரடி ரிப்போர்ட்




பதிவர் ரகுவுடன் மதியம் வெளியில் சென்று ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு வந்தேன். அலுவலகம் வந்தால் அனைவரும் வெளியே நிற்கிறார்கள். கேட்டால் "உங்களுக்கு தெரியாதா? பில்டிங் ஆடுச்சு" என்றனர்.

சிலர் பையை தூக்கி கொண்டு வீட்டுக்கு அல்லது குழந்தைகள் பள்ளிக்கு கிளம்பும் மனநிலையில் இருந்தனர். 

வெளியே நின்ற அனைவரும் தத்தம் மனைவிகளுக்கு போன் செய்து கொண்டிருந்தனர் :" உனக்கு தெரிஞ்சுதா? வீடு ஆடுச்சா? " என்று சிலரும் " உங்க ஆபீசில் என்ன செய்றாங்க? " என வேலை பார்க்கும் கணவர்களும் வண்ணம் இருந்தனர். ஒரு கும்பல் பில்டிங்கில் எங்கும் விரிசல் இருக்கா என பார்த்து கொண்டிருந்தது 

அலுவலகத்தில் வேலை செய்யும் ஒருவரின் மனைவி ராமச்சந்திரா மருத்துவமனையில் வேலை செய்கிறார். மருத்துவ மனையில் இருந்து நோயாளிகள் மருத்துவர் அனைவரும் வெளியே ஓடி வந்து விட்டதாக 
அவர் போனில் சொன்னார்.

எங்க வீட்டம்மாவுக்கு போன் செய்தால் போனை எடுக்கலை. பின் அவரே போன் செய்து "நாங்க யாரும் வெளியே வரலை ஆபிசில் தான் இருக்கோம்" என்றார். 

சற்று நேரத்தில் இந்தோனேசியாவில் தான் நிலநடுக்கம்; இங்கல்ல என சொல்லி அலுவலகத்துக்கு உள்ளே அனுப்பினர். உள்ளே போய் தினமலரை பார்த்தால் அது இப்படி சொன்னது 

"தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று மதியம் நிலநடுக்கம் உணரப்பட்டது. சுமத்ரா தீவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தின் எதிரொலியாக இந்தோனேஷியா, இந்தியா, அந்தமான் உள்ளிட்ட பல்வேறு தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பயங்கர நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இதன் காரணமாக 28 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது." 


*********
சென்னை: தமிழகத்தின் பல பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்


சென்னையின் சில பகுதிகளில் கடுமையான நில அதிர்வு ஏற்பட்டது. மந்தைவெளி, மைலாப்பூர், எழும்பூர், ஆழ்வார்ப்பேட்டை போன்ற பகுதிகளிலும் நில நடுக்கம் உணரப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.

மதுரையில் கட்டடங்களில் விரிசல்: இந்த நில அதிர்வு மதுரையின் பல பகுதிகளில் உணரப்பட்டது. இதனால் வீடுகளில் விரிசல் ஏற்பட்டது. இதனால் மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது,

மீண்டும் மற்றுமொரு பதிவினூடாகச் சந்திக்கின்றேன்,அன்புடன்,

 (HARI BABU)ஹரி பாபு.

0 comments: