பல இணைய தளங்களிலிருந்து சேகரித்தவைகளை பலருக்கும் பயனாக அமையும் என்ற நோக்கம் கருதி இந்த பிளாக்கில் பதிந்துள்ளேன் - உங்கள் அன்புக்குரிய "ஹரி பாபு".

Search This Blog

Friday, April 6, 2012

ஆதிமனிதன் !!


கவிதை

உன்னை
“மனிதன்” என்று சொன்னால் 
மிருகங்களுக்குப் பிடிக்காது!
“மிருகம்” என்று சொன்னால் 
மனிதனுக்குப் பிடிக்காது!
பல வேளைகளில் 
மனிதன் உன்னிடம் 
தோற்றுப் போகின்றான்!
சில வேளைகளில் 
நீ மனிதனிடம் 
தோற்றுப் போகின்றாய்!
உன்னை உரிமை 
கொண்டாடுவதற்கு 
மனிதனிடம் 
பல ஆதாரங்கள் இருக்கின்றன.
ஆனால்...
உன்னோடு உறவாட 
சட்டம் இன்னொரு மிருகத்தைதான் 
அனுமதிக்கிறது!
எனவே 
உன் மீதான உரிமைப் போர்
இன்றுவரை 
தீர்க்கப் படமுடியாத
ஒரு சட்டச்சிக்கல்!
மனித குலத்தின்
மூலம் நீ என்பதனால்
மனிதனுக்கேற்படும்
பெருமையும் சிறுமையும் 
உன்னையும் பாதிக்கும்!
எச்சரிக்கையாயிரு!!
இங்கே தான் 
மனிதன் உன்னை வஞ்சிக்கிறான்!
பெருமைகளையெல்லாம் 
தன் பெயரில் பதிவு செய்கிறான்!
சிறுமைகளையெல்லாம் 
உன்பெயரில் விட்டுவிடுகிறான்!
ஒன்று மட்டும் சொல்லுகிறேன்...
மனிதனை நம்பி 
உன் சுயத்தை இழந்துவிடாதே!!
எழுத்துருவாக்கம் 
ஸ்ரீ ஸ்ரீஸ்கந்தராஜா




மீண்டும் மற்றுமொரு பதிவினூடாகச் சந்திக்கின்றேன்,
அன்புடன், 
ஹரி பாபு.

0 comments: