உலகின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் என்று ஐ.பி.எல் தொடக்க விழாவில் கலந்து கொண்ட அமெரிக்க பொப் பாடகி கேட்டி பெர்ரி தெரிவித்துள்ளார்.
ஐந்தாவது ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடரின் தொடக்க விழா மிகவும் கோலாகலமாக சென்னையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பாலிவுட் நட்சத்திரங்களான அமிதாப் பச்சன், சல்மான் கான், பிரியங்கா சோப்ரா, கரினா கபுர் ஆகியோர் பங்கேற்றனர். மேலும் அமெரிக்க பொப் பாடகி கேட்டி பெர்ரியும் கலந்து கொண்டார்.
தாஜ் ஓட்டலில் தங்கியிருந்த அவர் இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் சச்சின் டெண்டுல்கரை சந்தித்தார்.
இந்த சந்திப்பு குறித்து டுவிட்டரில் கேட்டி பெர்ரி கூறியிருப்பதாவது, டெண்டுல்கரை சந்தித்தது எனக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்தது. அவர் உலகின் தலைசிறந்த கிரிகெட் வீரர்களில் ஒருவர். அவருடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டது மகிழ்ச்சியான தருணமாகும்.
இந்த மகிழ்ச்சியை என் குடும்பத்தினருடனும் எனது நண்பர்களுடனும் தொலைபேசி மூலமாக பகிர்ந்து கொண்டேன். ஐ.பி.எல். தொடர் சிறப்பாக நடைபெற எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்
மீண்டும் மற்றுமொரு பதிவினூடாகச் சந்திக்கின்றேன், அன்புடன்,B
(HARIBABU)ஹரி பாபு.








0 comments:
Post a Comment