நாராயணா இந்த இணையதள கொசுக்களை அடிச்சு கொல்லுப்பா!
- FACEBOOK-இல் ஒரு 5000பேருக்கு FRIENDREQUESTஅனுப்புவது, ஒரு ஆயிரம் பேராவது நண்பர்களாகஏற்றுக் கொள்வார்கள். குறைந்த பட்சம் இரண்டுமுறையாவது உங்கள் ஐடியை FACEBOOK-பிளாக்செய்துவிட்டிருக்கும்.
- FACEBOOKல ஒரு GROUP ஆரம்பிக்க வேண்டியது, இருக்கிறஎல்லா நண்பர்களையும் அதில் சேர்த்துவிடுவது. பின்அனைவருக்கும் நண்பர்களை சேர்க்க சொல்லி மெசேஜ்அனுப்புவது! கதறக் கதற ஆட்களை பிடித்துக் கொண்டுவந்துஅதில் சேர்த்து விடுவது.
- இது கூட பரவாயில்லை. இரண்டு மூன்று ஐடி பெண்கள்பெயரில் உருவாக்குவது, பின் அவன் போடும் போஸ்டுக்குஅவனே அந்த பெண்கள் ஐடியில் கமெண்ட் போட்டுக்கொள்வது. எதுக்குடா உங்களுக்கு இந்த மானங்கெட்டபொழப்பு?
- இன்னும் பல்லு விலக்கவில்லை என்று ஒரு பெண் போஸ்ட்பண்ணினால், 800லைக், 300கமெண்ட் இருக்கும். (இவனுகபோய் அந்த பல்லை தேச்சு விடுற மாதிரி!). நான்சாகப்போகிறேன் என்று ஒரு ஆண் போஸ்ட் பண்ணினால்ஒரே ஒரு லைக் இருக்கும் (என்ன கோவமோ?)
- இரவு மூன்று மணிவரை கமெண்ட் போட்டுக் கொண்டுஇருக்கிறார்கள், பிறகு குட் நைட் சொல்லிவிட்டு, நான்குமணிக்கு குட் மார்னிங் என்று ஸ்டேடஸ்! நீங்கல்லாம் என்னநைட் வாட்ச்மன் வேலை பண்ணுரீங்களாடா?
- காலையில் குட் மார்னிங், மதியம் குட் அப்டேர்நூன், இரவுகுட் நைட் என்று ஸ்டேடஸ் அப்டேட். இது உலகத்துக்குதெரியாத அதிசயம், டேய் ஏண்டா? ஏன்?
- சில இணைய தளங்கள் இருக்கின்றன. யூடுபில் வரும் பிட்டுவீடியோக்களை அவர்களின் இணைய தளங்களில்போட்டுவிட்டு அதற்கு கதை, திரைக்கதை எழுதுவது.அதனுடைய லிங்கை FACEBOOKஇன் அனைத்து நண்பர்கள்,குரூப், பேஜிலும் பட்டியலிடுவது. (பக்கிப் பயலுகளா! படம்பார்க்க வேணும்னா நாங்க யூடுபிலேயே பார்த்துவிடுகிறோம், அதை எதுக்குடா உங்க தளத்துக்கு வந்துபார்க்கணும்?)
- இதாவது பரவாயில்லை, பல இணையதளங்கள்காப்பி/பேஸ்ட் செய்வதற்கென்றே நடத்துகிறார்கள். பிரபலசெய்தி இணையதளங்களில் வரும் அனைத்துசெய்திகளையும் காப்பி/பேஸ்ட் செய்து போடுவதைத் தவிரவேறொன்றையும் போடுவதில்லை. இந்த தளங்களைப்பிரபலப்படுத்த இரண்டு மார்க்கெட்டிங் ஆட்கள் வேறு!உங்களுக்கே சலிக்காதா?
- இந்த பிளாக்கர்கள் தொல்லை பெரும்தொல்லை. பாதிக்கும்மேற்பட்ட ப்ளாக்குகள் சினிமா பற்றியதாகவே உள்ளது,அதில் பாதி நடிகையின் கவர்ச்சி படங்களை போடுவதேவேலை. இது கூட பரவா இல்லை, தலைப்புகளைபாருங்களேன், "ஜில் ஜில் ராணியின் ஜல்சாப் படம்", "மழைநடிகையின் சுளையான படங்கள்" (எங்கிருந்துடா இந்ததலைப்பெல்லாம் புடிக்கிறீங்க? எதுகை மோனைல டி.ஆர்-யேமிஞ்சுரீங்கப்பா)
- சினிமா, இணையம் எல்லாமே பொழுதுபோக்குச் சாதனங்கள்,அதுவே இப்போ பொழுதை போக்கும் சாதனைகளா மாறிப்போய்டுச்சு! இணையத்தில எங்கயோ இருக்கிற ஒரு முகம்தெரியாத பொண்ணோட கடலை போடுரதில இருக்கிறஆர்வம், கூடவே இருக்கிரவங்களோட பேசுறதிலஇருக்கிறதில்லை.
சரி வந்ததுதான் வந்துட்டீங்க அப்புடியே மேல இருக்கிற JOINNILAPENUKKU ON FACEBOOK-ல லைக் பண்ணிஇணைஞ்சிடுங்கோ! (முதல்ல இவனை அடிச்சு கொல்லுங்கப்பா!)
மீண்டும் மற்றுமொரு பதிவினூடாகச் சந்திக்கின்றேன்,
அன்புடன்,
ஹரி பாபு.









0 comments:
Post a Comment