• முகப்பு
  • வலைப்பதிவுகள்
    • பிளாக்கர் கருவிகள்
    • தமிழில் கம்ப்யூட்டர் தகவல்கள்
    • கல்விச்சோலை
  • புகைபடகள்
    • ஓவியம் புகைபடகள்
    • கவர்ச்சி புகைப்படங்கள்
      • Hot புகைப்படங்கள்
    • சமீபத்திய புகைப்படங்கள்
      • கட்டுமான கீழ்
  • செய்திகள்
    • திரைப்படம் செய்தி
      • Child Category 2
      • Child Category 3
      • Sub Child Category 3
    • அறிவியல் தொழில்நுட்பம்
    • கணினி தொழில்நுட்பம்
    • சிந்திக்க உண்மைகள்
  • வீடியோ
    • தமிழ் வீடியோ
    • பிரபல வீடியோக்கள்
  • தொலைக்காட்சிகள்
    • Vijay TV
    • புதிய தலை முறை தொலைக்காட்சி
    • தமிழ் சேனல்கள் மற்றும் பத்திரிகைகள்
  • தமிழ் நூல்கள்
    • கட்டுமான கீழ்
    • கட்டுமான கீழ்
    • கட்டுமான கீழ்
  • கவிதை
    • காதல்
    • Doctors

பல இணைய தளங்களிலிருந்து சேகரித்தவைகளை பலருக்கும் பயனாக அமையும் என்ற நோக்கம் கருதி இந்த பிளாக்கில் பதிந்துள்ளேன் - உங்கள் அன்புக்குரிய "ஹரி பாபு".

Pages

  • முகப்பு

Search This Blog

Scan this QR Code

Scan this QR Code
haribabuinfoweb

பின்பற்றுபவர்கள்.

மொத்த பக்க பார்வை

புகைப்படங்கள்

புகைப்படங்கள்
எனது புகைப்படத்தை கிளிக் செய்யவும்

பிடித்த தளங்கள்

  • தமிழ் டிவி மற்றும் பத்திரிகைகல்
  • இந்து மதம்
  • TECH தமிழ்

Labels

  • Photos (10)
  • SEO (12)
  • அறிவியல் (11)
  • அறிவியல் தொழில்நுட்பம் (13)
  • கணினி தொழில்நுட்பம் (49)
  • கவிதை (20)
  • செய்திகள் (3)
  • தமிழ் (2)
  • பிளாக்கர் பாடம் (35)

Monday, April 9, 2012

தமிழர் கலைகள் - Arts Of Tamils

11:00 PM    No comments



தமிழர் கலைகள் எனப்படுபவை தமிழர் வாழ்க்கையைச் சிறப்பித்த கலைகள் ஆகும்.
தமிழர் கலைகள் பட்டியல்

சிலம்பம்
கோலாட்டம்
பட்டிமன்றம்
வில்லுப்பாட்டு
ஆட்டங்கள்
கும்மி
மயிலாட்டம்
காவடியாட்டம்
பொய்கால் குதிரை ஆட்டம்
தெருக்கூத்து
ஒயிலாட்டம்
பாம்பாட்டம்
உருமி ஆட்டம்
புலி ஆட்டம்
பறை ஆட்டம்
கரகாட்டம்
மாடு ஆட்டம்
உறியடி ஆட்டம்
கொல்லிக் கட்டை ஆட்டம்
புலி ஆட்டம்
சிலம்பாட்டம்
குறவன் குறத்தி ஆட்டம்
கைச்சிலம்பாட்டம்
தேவராட்டம்
தப்பாட்டம்
காளியாட்டம்
சேவையாட்டம்
பேயாட்டம்
சாமியாட்டம்

கூத்துக்கள்
சாந்திக் கூத்து
சாக்கம்
மெய்க் கூத்து
அபிநயக் கூத்து
நாட்டுக்கூத்து
விநோதக் கூத்து
குரவைக் கூத்து
கலிநடனம் என்னும் 'கழாய்க் கூத்து'
கரகம் என்னும் 'குடக் கூத்து'
பாய்ந்தாடும் 'கரணம்'
நோக்கு 'பார்வைக் கூத்து'
நகைச்சுவை கொண்ட 'வசைக் கூத்து'
'சாமியாட்டம்' அல்லது 'வெறியாட்டு'
பொம்மலாட்டம்

இவற்றையும் பார்க்க

தமிழர் சிற்பக்கலை
தமிழர் கட்டிடக்கலை
தமிழர் கப்பற்கலை
தமிழர் பெருங்கற்காலக் கட்டிடக்கலை
தமிழர் மட்பாண்டக்கலை
தமிழர் மரவேலைக்கலை
தமிழ் வரைகலை
கலைகள்
கலை வரலாறு

தப்பாட்டம்: தப்பு என்ற இசைக்கருவியை இசைத்து ஆடப்படுவதால் இது தப்பாட்டம் என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு போர் இசைக்கருவியாகும். போர்ப்பறை என்றும் அழைக்கிறார்கள். பறை, மரக்கட்டையால் செய்யப்பட்ட வட்டவடிவமான சட்டகத்தில் புளியங்கொட்டையில் இருந்து தயாரிக்கப்பட்ட பசையினைக் கொண்டு பதப்படுத்தப்பட்ட மாட்டுத்தோலை இழுத்து ஒட்டி செய்யப்படுகிறது. பறையினை இசைக்க இரண்டுவிதமான குச்சிகள் பயன்படுத்தப்படுகிறது. இடது கையில் இருக்கும் குச்சி, சிம்பு குச்சி என்றும், வலது கையில் உள்ள குச்சி, அடிகுச்சி என்றும் அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் தனித்தனியான அடிகள் உண்டு. அவை சப்பரத்தடி, டப்பா அடி, பாடம் அடி, சினிமா அடி, ஜாய்ண்ட் அடி, மருள் அடி, சாமி சாட்டுதல் அடி, மாரடித்தல் அடி, வாழ்த்து அடி என்பனவாகும். தமிழகத்தில் தஞ்சாவூர், திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் இக்கலைஞர்கள் அதிக அளவில் வாழ்கிறார்கள். கோயில் சார்ந்த நிகழ்ச்சிகளிலும் வாழ்க்கை வட்ட சடங்குகளிலும் அரசியல் பிரச்சாரங்களிலும் இக்கலை நிகழ்த்தப்படுகின்றது. ஆண்களால் மட்டுமே நிகழ்த்தப்பட்ட இக்கலையினை பெண்களும் தற்போது ஆடி வருகின்றனர்.

தொடர்புபட்ட காணொளிhttp://www.youtube.com/watch?v=ETDRV1ECq_I

தப்பாட்டம் தொடர்பான இன்னொரு கட்டுரை
ஆதி மனித சமூகம் தங்கள் கூடுதலுக்காகவும், தங்கள் குழுவுக்கு ஆபத்துக்களை உணர்த்தவும், விலங்குகளிடம் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ளவும் எழுப்பிக் கொண்ட சத்தம்தான் பறையாட்டத்தின் மூலம். பறை என்றால் சொல், அல்லது "உணர்" என்று பொருள். ஆவேசம், மகிழ்ச்சி, உற்சாகம் என உணர்ச்சிகளை எழுப்பி, கேட்போரையும் ஒரே நேர்கோட்டில் இணைக்கும் இந்த அரியகலை இன்று ஜாதிய அடையாளமாக மாறிவிட்டது சோகம்.
விலங்குகளைக் கொன்று, தின்று மிஞ்சிப்போகும் தோலை எதிலேனும் கட்டிவைத்து, காயவைத்து மனம் போன போக்கில் அடித்து ஆடிய முதல் ஆதி மனிதன்தான் முதல் தப்பாட்டக் கலைஞனும் ஆவான். காலப்போக்கில் இது கலைவடிவமாகவும், வாழ்வியல் உணர்ச்சிகளை உணர்த்தும் சத்தமாகவும் மாற, திருமணம், இறப்பு, சிறு தெய்வ திருவிழா நிகழ்வுகள் என மக்களின் அன்றாட வாழ்க்கையின் அத்தனை சுக துக்கங்களிலும இடம் பெறும் இசையாகியது.

ஆரிய வருகைக்குப் பின் வருணாசிரம சமூக அடிப்படை மேலோங்கிய தருணங்களில், கடினமான, இசைக்கச் சிரமமான இசைக்கருவிகளை பிறருக்கும், இலகுவான இசைக்கருவிகளை தங்களுக்குமாக மேலாதிக்கவாதிகள் பிரித்துக் கொண்டனர். மேலும் தொழில் சார்ந்த ஜாதிய கோட்பாடு, கலை நிகழ்த்துவோரையும் ஜாதி சார்ந்து பிரித்து வைத்தது. அதன்படியே ஆதி திராவிட தமிழர்களின் இசைக்கருவியாக தப்பிசை ஒதுக்கப்பட்டது.
"தாழ்த்தப்பட்டவர்கள்" எனச் சொல்லி பலநூறு ஆண்டுகள் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்ட சமூகங்கள், உரிய கல்வி கிடைக்காமல், நாகரீக நீரோட்டத்தில் இணைய முடியாமல் தவித்த தருணங்களில், அவர்களின் வாழ்க்கைமுறையையே காரணமாகக் கூறி, அகோரகமாகப் பார்த்து மேலும் இழிநிலைப்படுத்தியது நவீன சமூகம். அவர்களின் வாழ்வோடு கலந்திருந்த பறையாட்டத்தையும் சாவு மேளம் என இகழ்ந்தது.

ஒரு கட்டத்தில் பறையடித்தல் என்பது ஜாதியக் குறியீடாகவும், அடிமைத்தனத்தின் அடையாளமாகவும் மாறிவிட, அச்சமூகத்தின் விடுதலை வேட்கை கொண்ட இளைஞர்கள் பறையடித்தலை அவமானமாகக் கருதத் தொடங்கினர். இவ்விதம் மெல்ல, மெல்ல அக்கலை அழியும் நிலைக்கு வந்தது.
"தப்பு" என்பது ஒரு வகையான தோலிசைக் கருவி. இதை "பறை" என்று சொல்வாரும் உள்ளார்கள். மரக்கட்டையால் செய்யப்பட்ட வட்டவடிவமான சட்டகத்தில் பதப்படுத்தப்பட்ட மாட்டுத்தோலை இழுத்துக் கட்டி, ஒட்டி பறை செய்யப்படுகிறது.

மாட்டுத்தோலை சட்டத்துடன் இழுத்து ஒட்டுவதற்கு பயன்படுத்தப்படும் பசை, புளியங்கொட்டையில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இதில் உள்ள பெரும் சிறப்பு, தப்பிசைக்கும் கலைஞர்களே இசைக்கருவியையும் செய்து கொள்ளும் திறன் பெற்றவர்களாக இருப்பதுதான். பறையை அடித்து இசைக்க இரண்டு குச்சிகளைப் பயன்படுத்துவார்கள். இடது கையில் வைத்திருக்கும் குச்சி சிம்புக்குச்சி. இது ஒன்றே கால் அடி நீளம், 1 செ.மீ அகலத்தில் இருக்கும். மூங்கிலால் செய்யப்பட்டிருக்கும். வலது கையில் வைத்திருக்கும் குச்சிக்கு அடிக்குச்சி அல்லது உருட்டுக்குச்சி என்று பெயர். இது பூவரசங்கம்பில் செதுக்கப்பட்டிருக்கும். இந்தக் குச்சி அரை அடி நீளமும், மூன்று செ.மீ சுற்றளவும் கொண்டதாக இருக்கும்.

சிறுதெய்வ வழிபாட்டு ஆலயங்களில் பால்குடம், பூக்குளித்தல், தீச்சட்டி எடுத்தல் போன்ற நிகழ்ச்சிகளில் இக்கலை நிகழ்வதுண்டு. இடைக்காலத்தில் பெருவாரியான ஆதி திராவிட மக்கள் கிறிஸ்தவ மதத்துக்கு மாறியதன் விளைவாக செபஸ்தியர், அந்தோணியர், ஆரோக்கியமாதா, வியாகுலமாதா, சந்தியாகப்பர் போன்ற கிறிஸ்தவ கோவில்களிலும் இக்கலை நிகழ்த்தப்படுகிறது.

இக்கலையின் சிறப்பே, ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும், ஒவ்வொரு உணர்ச்சிக்கும் தனித்தனி அடிவகைகள் உள்ளது தான். சப்பரத்து அடி, டப்பா அடி, பாடம் அடி, சினிமா அடி, ஜாயிண்ட் அடி, மருள் அடி, சாமிச்சாட்டு அடி, ஒத்தையடி, மாரடிப்பு அடி, வாழ்த்தடி என பல வகை அடிகள் உண்டு. இக்கலைக்கென பலர் இலக்கணங்களையும் வகுத்துள்ளனர். நேர்நின்று, எதிர்நின்று, வளைந்து நின்று ஆடுதல், அடிவகைகளை மாற்றுதல் என பார்வையாளனை ஈர்க்கத்தக்க ரசனைமிகுந்த கலையாடல்கள் இதில் உள்ளன. தஞ்சா, மதுரை, திண்டுக்கல் பகுதிகளில் தப்பிசைக் கருவியோடு துணைக்கருவியாக தவில் பயன்படுத்தப்படுகிறது. தென்மாவட்டங்களில் டிரம் பயன்படுத்துகிறார்கள்.

தொழில்ரீதியாக கிராமப்புறங்களில் இசைக்கும் இக்கலைஞர்கள் இசைப்பதோடு நிறுத்திக் கொள்கிறார்கள். ஆடுவதில்லை. மூத்த கலைஞர்கள் பலருக்கு ஆடுவதில் உரிய பயிற்சியும் இல்லை. இந்த இசைக்கருவி அடிக்க, அடிக்க தொய்ந்து போவதால் அடிக்கடி தீயில் கருவியை வாட்டி இசைக்க வேண்டியது அவசியம்.

பறையிசைக்க உடை இலக்கணங்களும் வகுக்கப்பட்டுள்ளன. இது பார்வையாளர்களைக் கவருவதற்கான யுக்தியாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. வேட்டியை தார்பாய்ச்சிக் கோர்த்து கட்டிக்கொண்டும், தலையில் பட்டையாக துணியைக் கட்டிக் கொண்டும் வண்ணமயமாக பறையை இசைப்பார்கள். இப்போது காலில் சலங்கை அணிந்து கொள்வதும் வழக்கில் இருக்கிறது. நடுவில் நிற்கும் கலைஞர் ஒவ்வொரு அடவுக்கும் சத்தமிட்டு, மற்றைய கலைஞர்களை அடுத்த அடவுக்கு தயார்படுத்துவார்.

கணீரென விழித்து, உணர்ச்சிகளைத் தட்டி எழுப்பும் இக்கலையை ஆக்ரோஷமான உணர்ச்சிகளை வெளிக்காட்டவும், விடுதலை வேட்கையை உணர்த்தவும் பயன்படுத்தும் பல குழுக்கள் தமிழகத்தில் கிளைத்திருக்கின்றன. ஆண்களுக்கு இணையாக பெண்களும் தப்பிசையை பயின்று மேடைகளை அதிர வைக்கிறார்கள்.

குறிப்பாக திண்டுக்கல்லைச் சேர்ந்த சக்தி கலைக்குழுவே தொய்ந்து கிடந்த இக்கலையை மீட்டெடுத்தது என்பது என் கருத்து. கன்னியாகுமரியைச் சேர்ந்த அருட்சகோதரி சந்திரா தலைமையில் இயங்கும் இந்த கலைக்குழுவில் பெண்கள் பறை இசைக்கிறார்கள். ஆண்களே அடிக்கச் சிரமப்படும் பறையை இவர்கள் லாவகமாகவும், சீராகவும் இசைப்பது மிகவும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதன் விளைவாக தப்பாட்டம் நிறைய மேடைகளைத் தக்க வைத்துக் கொள்ள வாய்ப்புக் கிடைத்தது. தப்பாட்டத்தைப் பிரதானமாகக் கொண்ட இக்கலைக்குழு இந்தியா கடந்து உலகமெங்கும் இக்கலையைச் சுமந்து சென்ற பெருமையைப் பெற்றது.

ஜாதிய ஒடுக்குமுறைக்கான அடையாளமாகக் கருதப்பட்ட இந்தத் கலை, இப்போது அடக்குமுறைக்கு எதிரான ஆயுதமாக உருமாறி விட்டது. பல்வேறு தலித்திய அமைப்புகள், ஜாதியம் சாராத விடுதலைக் கலைக்குழுக்கள், இடதுசாரிக் கலை அமைப்புகள் போன்றன இன்று தப்பாட்டத்தை ஒரு ஆக்கபூர்வமான சக்தியாக முன்னெடுத்துச் செல்கின்றன.

ஆனால், இன்னும் ஜாதிய மேலாதிக்கம் நிலவும் தென் மற்றும் கிழக்கு டெல்டா மாவட்டங்களில், "பறையடித்தல்" என்பது கீழ்ஜாதியினரின் "கட்டாய அடிபணிதல்" என்ற கருத்து வலுவூன்றி இருக்கிறது. அப்பகுதியில் வாழும் இளம் தலைமுறை இந்த ஜாதிய அடையாளத்தை வெறுத்து ஒதுங்குகின்றனர். இதை அவமதிப்பாக கருதும் ஆதிக்கவாதிகள் இந்த மக்களை வதைப்பதும், அதனால் விவகாரங்கள் தலையெடுப்பதும் அவ்வப்போது நிகழ்கிறது. பல்வேறு தலித்திய இயக்கங்கள் வீறுகொண்டு எழுந்து விட்ட இக்கால கட்டத்தில், பல இடங்களில் இந்நிலை மாறிவிட்டாலும், ஒட்டுமொத்தமாக நீங்கிவிட்டதாகச் சொல்ல முடியாது.
மீண்டும் மற்றுமொரு பதிவினூடாகச் சந்திக்கின்றேன்,
அன்புடன், 
(HARI BABU)ஹரி பாபு.

Email This BlogThis! Share to X Share to Facebook
Newer Post Older Post Home

0 comments:

Post a Comment

Social Profiles

TwitterFacebookGoogle PlusLinkedInRSS FeedEmail
  • Popular Posts
  • Archives

Sri Sai Infotech and Solution

Sri Sai Infotech and Solution
IT Sales and Service

About Me

My photo
Hari babu
View my complete profile

 
Copyright © தமிழன் வலைதளம் | Powered by Blogger
Design by NewWpThemes | Blogger Theme by Lasantha - Premium Blogger Themes
Windows Desktop Hosting