பிரேசிலில் 3 பெண்களை கொடூரமாக கொலை செய்து அவர்களது உடல்களை சமைத்து தின்ற 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். பிரேசிலில் உள்ள பெர்நாம்புகோ மாகாண தலைநகர் ரெசிப்.
இங்கிருந்து 234 கி.மீ. தொலைவில் உள்ளது கரன்ஹன்ஸ் நகரம். கடந்த 2008ம் ஆண்டு ஜெசிகா என்ற இளம்பெண் ரெசிப் நகரில் காணாமல் போனார்.
அதன்பின் அடுத்தடுத்து சில பெண்கள் காணாமல் போயினர். அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் ஜார்ஜ் பெல்ட்ராவ் நெக்ரோமான்டி டா சில்வீரா என்ற 51 வயது ஆசாமியை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின.
இதுகுறித்து கடந்த வெள்ளிக்கிழமை பத்திரிகையாளர்களை சந்தித்து போலீசார் கூறியதாவது: மதத்தின் அதீத நம்பிக்கை கொண்டவர்களை செக்ட் பிரிவினர் என்று கூறுகின்றனர். இவர்கள் மக்களிடம் இருந்து வேறுபட்டவர்களாக இருப்பார்கள். நடைமுறைக்கு ஒத்துவராத சிந்தனைகளுடன் செயல்படுவார்கள்.
கைது செய்யப்பட்ட ஜார்ஜ் பெல்ட்ராவ் இந்த பிரிவை சேர்ந்தவர் என்று கூறியுள்ளார். மேலும், மூளை கோளாறின் ரகசியம் என்ற தலைப்பில் புத்தகம் எழுதியுள்ளார். அதில் செக்ட் பிரிவினரின் நடவடிக்கைகள் குறித்து நிறைய தகவல்கள் எழுதியுள்ளார். மேலும் ஜெசிகா உள்பட 3 பெண்களை கொடூரமான முறையில் கொலை செய்து சமைத்து சாப்பிட்டுள்ளார். இவருக்கு உடந்தையாக அவரது மனைவி இசபெல் கிறிஸ்டினா ஒலிவீரா டா சில்வா மற்றும் புரூனா கிறிஸ்டினா ஒலிவீரா (25) ஆகிய 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
அவர்களுடன் 5 வயது சிறுமியும் இருந்தாள். அவள் கொலை செய்யப்பட்ட ஜெசிகாவின் மகளாக இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. இதுகுறித்து விசாரித்து வருகிறோம். தங்களுக்கு அசரீரி கேட்டது. அவர்களை உலகில் இருந்து விரட்ட எங்களுக்கு அசரீரி உத்தரவிட்டது.
அதன்படி செயல்பட்டோம். கொலை செய்யப்பட்ட 3 பெண்களும் சாத்தான்கள் என்று இவர்கள் கூறியுள்ளனர். பெண்களை கொடூரமான முறையில் கொலை செய்து அவர்களுடைய தோலை உரித்து, உடல்களை தூய்மைப்படுத்த மதசடங்குகள் செய்தோம். பின்னர் சதைகளை சமைத்து சாப்பிட்டோம். மேலும், சதைகளில் உணவு சமைத்து அக்கம் பக்கத்தினருக்கும் விற்பனை செய்தோம் என்று புத்தகத்தில் விரிவாக கூறியுள்ளனர்.
இவர்கள் மேலும் பல பெண்களை கொலை செய்திருக்கலாம் என்று தெரிகிறது. அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது. இவ்வாறு போலீசார் கூறினர். ஜார்ஜ் வீட்டில் 3 பெண்களின் எலும்புகளை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.
|
மீண்டும் மற்றுமொரு பதிவினூடாகச் சந்திக்கின்றேன்,,,,,,,,,,,,,,,,,,அன்புடன், WWW.HARIBABINFOWEB.CO.CC-ஹரி பாபு(HARI BABU). நன்றி:








0 comments:
Post a Comment