பல இணைய தளங்களிலிருந்து சேகரித்தவைகளை பலருக்கும் பயனாக அமையும் என்ற நோக்கம் கருதி இந்த பிளாக்கில் பதிந்துள்ளேன் - உங்கள் அன்புக்குரிய "ஹரி பாபு".

Search This Blog

Tuesday, March 27, 2012

எங்கே என் பிள்ளைகள்




எங்கே என் பிள்ளைகள்
ஏறிவிழையாடி
நெஞ்சினில் தீயை எரிய விட்டனர்
கயவர்
நரிக்கூட்டங்கள்
பஞ்சுக் கால்கள் பட்ட இடம்
பற்றி எரிகிறது...

பால் நிலவில் குளித்த நாங்கள்
பாதகன்
வெடிகுண்டில் ரெத்த மழையில்
தோய்கிறோம்..

குமுறி குமுறி
அழும் என் தொண்டை வறண்டது
நாவில் நீருமில்லை
வற்றிதான்
போனது கண்ணிரும்!

என் உறவு போறேன் என்று
சொன்னவர்
எங்கே போனார்
எங்கே போனார்
விதையாக இருக்கிறார்
நீர்
ஊற்றுங்களேன்
என் குழந்தை விதைகளுக்கும்
என் மனையான் விதைக்கும்!

கைகளும் நீட்ட முடியவில்லை
கேட்க
நீட்டி கேட்டதால் தான்
நீண்ட
வாழ்க்கையை தொலைத்து நிற்கிறேன்
ஏதாவது
செய்யுங்களேன்
என்
தாய் ஈழத்திற்கும்
இந்த
தாய் அகதியிற்கும்!


உங்கள் கருத்து முக்கியமானது.

0 comments: