பல இணைய தளங்களிலிருந்து சேகரித்தவைகளை பலருக்கும் பயனாக அமையும் என்ற நோக்கம் கருதி இந்த பிளாக்கில் பதிந்துள்ளேன் - உங்கள் அன்புக்குரிய "ஹரி பாபு".

Search This Blog

Sunday, March 25, 2012

விகடன் தந்த அங்கீகாரம் - குட் ப்ளாக்


விகடன் தந்த அங்கீகாரம் - குட் ப்ளாக்



நாம் எழுதும் பதிவுகளுக்கு அங்கீகாரம் கிடைக்கும் போது நமக்கு மகிழ்ச்சி ஏற்படும். அதனால் நல்ல பதிவுகளை அதிகம் எழுத வேண்டும் என்ற ஊக்கமும் ஏற்படும். அதுவும் அந்த அங்கீகாரம் ஒரு பெரிய மீடியாவிடமிருந்து கிடைத்தால்...? அப்படி தான் இருந்தது எனக்கும், விகடன் தளத்தில் இருந்து அங்கீகாரம் கிடைத்த போது...!

விகடன் தளத்தில் யூத்ஃபுல் விகடன் என்ற பகுதி இருப்பது அதிகம்பேருக்கு தெரியும். இளைய சமுதாயத்தவர்களுக்காக பல்வேறு பகுதிகளுடன் வலம் வரும் அந்த தளத்தில் நல்ல பதிவுகளை ஊக்கப்படுத்தும் விதமாக "குட் ப்ளாக்ஸ்" என்றொரு பகுதியும் உள்ளது. அந்த பகுதியில் சமீபத்தில் ப்ளாக்கர் நண்பனில் பகிர்ந்த "தமிழ்" என்ற பதிவு தற்போது இடம்பெற்றுள்ளது. மிகப்பெரிய ஒரு தளத்தில் எனது பதிவு இடம்பெற்றது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த நேரத்தில் விகடன் குழுமத்திற்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.



ஒரு சின்ன கொசுவர்த்தி (Flashback):


2010-ஆம் ஆண்டே யூத்ஃபுல் விகடன் பற்றி தெரிந்துக் கொண்டதால் அப்போது அவர்களுக்கு ப்ளாக்கர் நண்பன் தளத்தை சேர்த்துக் கொள்ளுமாறு கோரிக்கை விடுத்தேன். ப்ளாக் தொடங்கி ஒரு சில மாதங்களே ஆனதால் அப்போது என் பதிவுகள் இடம்பெறவில்லை. கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு எனது பதிவு இடம்பெற்றதில் ரொம்ப சந்தோசமாக உள்ளது.

"தமிழ்" பதிவைப் பற்றி:

தமிழ் என்னும் பதிவில் நான் விடுத்திருந்த கோரிக்கையை ஏற்று "தமிழ்" என்னும் தலைப்பில் பதிவிட்ட சகோ. பிரபு கிருஷ்ணா அவர்களுக்கு நன்றி! மேலும் அது போன்ற பதிவுகளை ப்ளாக்கர் நண்பன் தளத்தில் தனி பக்கத்தில் பகிர முடிவெடுத்துள்ளேன். நண்பர்கள் அந்த பக்கத்தில் தாங்கள் எழுதிய பதிவை குறிப்பிட்டால் அதனையும் சேர்க்க முயற்ச்சிக்கிறேன்.


உங்கள் கருத்து முக்கியமானது.

0 comments: