பல இணைய தளங்களிலிருந்து சேகரித்தவைகளை பலருக்கும் பயனாக அமையும் என்ற நோக்கம் கருதி இந்த பிளாக்கில் பதிந்துள்ளேன் - உங்கள் அன்புக்குரிய "ஹரி பாபு".

Search This Blog

Friday, April 13, 2012

கூகுள் டாக் (gtalk)-ஐ வலைப்பூவில் இணைப்பது எப்படி?

உங்கள் வலைப்பூவிற்கு வரும் பார்வையாளர்கள் தங்கள் கருத்தை பகிர்ந்துகொள்ள பின்னூட்டமிடுகிறார்கள். அதுபோல் உங்களுடன் நேரலையில் (online) உரையாட கூகுளில் ஒரு வசதியுள்ளது. இதன் மூலம் உங்கள் பார்வையாளர்கள் நீங்கள் இணையத்தில் இணைந்துள்ளீர்களா(online or offline), இல்லையா என்பதையும் அறியலாம். இந்தவசதியின் மூலம் பார்வையாளர்கள் ஜீமெயில் கணக்கு (gmail account) இல்லாமலும், ஜீடாக் மென்பொருள் நிறுவாமலும்(install) உங்களுடன் உரையாடலாம்.
இவ்வளவு வசதிகளுள்ள ஜீடாக்-ஐ நிறுவுவது எப்படி என்று பார்ப்போம்.

முதலில் இந்த சுட்டியை (LINK) சொடுக்கி உள்நுழையவும். அடுத்து தோன்றும் பக்கத்தில் உள்ள நிரலை (code) நகலெடுத்துக்கொள்ளவும் (copy).


அதன்பின் ப்ளாகரின் உள் நுழையவும்.


அதில் layout tab-ஐ சொடுக்கி, பின்பு Add Gadget-ல் Html/JavaScript-ஐ தேர்வு செய்து நாம் முன்பு நகலெடுத்துள்ள நிரலியை உள்ளிட்டு சேமிக்கவும். இவற்றை படங்கள் வாயிலாக விளக்கமாக காண்போம்.








இப்பொழுது உங்கள் வலைப்பூவில் ஜீடாக் தெரிவதை காணலாம்.
மேலும் Edit-ஐ சொடுக்கி Gtalk தோற்றத்தை மாற்றியமைக்கலாம்.

இவ்வசதியை வலைப்பூவிற்கு மட்டுமின்றி இணையதளத்திலும் பயன்படுத்தலாம். இந்த ஜீடாக் வெட்ஜட் இலகுவாக இருப்பதால் உங்கள் வலைப்பூவின்/தளத்தின் இயங்கு வேகம் குறையாது.


மீண்டும் மற்றுமொரு பதிவினூடாகச் சந்திக்கின்றேன்,,,,,,,,,,,,,,,,,,அன்புடன்,WWW.HARIBABINFOWEB.CO.CC-ஹரி பாபு(HARI BABU).

0 comments: