பல இணைய தளங்களிலிருந்து சேகரித்தவைகளை பலருக்கும் பயனாக அமையும் என்ற நோக்கம் கருதி இந்த பிளாக்கில் பதிந்துள்ளேன் - உங்கள் அன்புக்குரிய "ஹரி பாபு".

Search This Blog

Tuesday, March 20, 2012



அடுத்து ஒரு மலிவு விலை டேப்லெட்: விலை    ரூ.5,000 மட்டுமே

Tamil
 மங்கள் எலக்ட்ரானிக்ஸ் இந்தியாவில் இரண்டு புதிய டேப்லெட்டுகளை களமிறக்க இருக்கிறது. இந்த இரண்டு டேப்லெட்டுகளுக்கு மைபேட் மற்றும் யுப் என்ற பெயர்கள் சூட்டப்பட்டிருக்கின்றன. அதோடு நில்லாமல் மங்கள் நிறுவனம் பாக்கட் அளவிலான ப்ரஜக்டர்கள் மற்றும் டச் டோர் லாக்குகள் போன்றவற்றைத் தயாரிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறது. இருந்தாலும் இந்தியாவின் கணினி சந்தையில் மங்கள் வருங்காலத்தில் தீவிரமாக இறங்க முடிவெடுத்திருக்கிறது.


ஏற்கனவே இந்தியாவில் ஆகாஸ் மற்றும் க்ளாஸ்பேட் போன்ற மலிவு விலை டேப்லட்டுகள் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்த நிலையில் மங்களின் இந்த மைபேட் மற்றும் யுப் டேப்லெட்டுகளும் இந்திய மக்கள் மனங்களில் சம்மனமிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த டேப்லெட்டுகளுக்கு ஏற்கனவே ஏராளமானோர் முன்புதிவு செய்து இருக்கின்றனர். அதனால் இந்த இரண்டு டேப்லெட்டுகளும் இந்தியாவில் விற்பனையில் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கலாம்.
மைபேட் ஒரு 7 இன்ச் டேப்லெட் ஆகும். இது ஆன்ட்ராய்டு 2.3 ஜிஞ்சர் ப்ரீடு இயங்கு தளத்தில் இயங்குகிறது. ஆனால் யுப் ஆன்ட்ராய்டு 3.0 ஹனிகோம்ப் இயங்கு தளத்தில் இயங்குகிறது. யுப் 10.1 இன்ச் திரையைக் கொண்டிருக்கிறது. இந்த யுப் டேப்லெட் கருப்பு கலந்த க்ரோம் மற்றும் வெள்ளை போன்ற இரண்டு நிறங்களில் வருகிறது. இந்த 2 டேப்லெட்டுகளுமே கைக்கு அடக்கமாக இருக்கின்றன.
மங்களின் இயக்குனர் கவுரவ் ஜெயோடியா கூறும் போது இந்திய கணினித் துறையில் டேப்லெட்டுகள் ஒரு புரட்சியையே படைத்திருக்கின்றன. மேலும் வரும் காலங்களில் இந்த டேப்லெட்டுகள் தகவல் பரிமாற்றத்திற்கு இன்றியமையத தேவையாகிவிடும் என்று கூறுகிறார். மேலும் அவர் கூறும் போது மங்களின் புதிய டேப்லெட்டுகள் குறைந்த விலையில் வந்தாலும் தொழில் நுட்பங்களுக்கு பஞ்சமில்லாமல் இருக்கும் என்று கூறுகிறார்.
இந்த மைபேட் மற்றும் யுப் டேப்லெட்டுகளின் தரம் அவற்றின் மாடல்களுக்கு ஏற்ப மாறுபடுகின்றன. அதாவது இந்த டேப்லெட்டுகளின் உயர்தர மாடல்கள் 1 ஜிஹெர்ட்ஸ் ப்ராசஸரைக் கொண்டிருக்கின்றன. மேலும் இந்த டேப்லெட்டுகளில் 3ஜி வசதி மற்றும் வைபை இணைப்பும் உண்டு. குறிப்பாக இந்த டேப்லெட்டுகள் வர்த்தகம் மற்றும் பொழுதுபோக்கு ஆகியவற்றிற்கு மிகச் சிறப்பாக பயன்படுத்தலாம். அதற்கா இந்த டேப்லெட்டுகளில் எம்எஸ் வேர்ட், எக்ஸல் மற்றும் இதர வசதிகளும் உள்ளன.
ஏற்கனவே இந்த இரண்டு டேப்லெட்டுகளும் இந்த சந்தைக்கு வந்துவிட்டன. இவற்றின் விலை ரூ.5000லிருந்து தொடங்குகின்றன.

 

BY HARIBABU

0 comments: