சிட்னி: இந்திய கிரிக்கெட் வீரர் சச்சினுக்கு சிட்னி கிரிக்கெட் மைதான நிர்வாகத்தின் நிரந்தர உறுப்பினர் என்ற விருது வழங்கி கெளரவித்துள்ளது. ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி , முத்தரப்பு போட்டியில் விளையாடி வருகிறது. தற்போது சிட்னியில் இந்திய- ஆஸ்திரேலிய அணிகள் மோதி வருகின்றன. முன்னதாக சச்சினுக்கு சிட்னி கிரிக்கெட் மைதான நிர்வாகத்தின், நிரந்தர உறுப்பினர் விருதினை வழங்கியது.
இதில் கிரிக்கெட் உலகிற்கு சச்சினின் சாதனைகள், பெருமைகள் குறித்து பாராட்டப்பட்டது. இதற்கான விழாவில் நியூசெளத்வேல்ஸ் முதல்வர் பெர்ரி ஓ.பாரல் கலந்து கொண்டு சச்சினுக்கு விருதினை வழங்கி கெளரவித்தார். இவ்விருதினை பெரும் முதல் இந்திய பேட்ஸ்மேன் என்பது குறிப்பிடத்தக்கது. நடந்து முடிந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் எப்படியும் சதத்தில் சதமடிப்பார் (100/100) என எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சச்சினுக்கு கிடைத்திருக்கும் விருது அவரது புகழுக்கு மேலும் பெருமை சேர்த்துள்ளதாக , சிட்னி கிரிககெட் மைதான வாரியத்தின் தலைவர் ரோட்னி காவ்லியர் தெரிவித்தார்.









0 comments:
Post a Comment